Published:Updated:

இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்... பொருளாதாரத்தை பாதிக்குமா..?

வெளியேறும் பணக்காரர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
வெளியேறும் பணக்காரர்கள்...

பொருளாதாரம்

இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்... பொருளாதாரத்தை பாதிக்குமா..?

பொருளாதாரம்

Published:Updated:
வெளியேறும் பணக்காரர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
வெளியேறும் பணக்காரர்கள்...

ஏ.எம்.மன்னத்தேவன்

உலகம் தோன்றியது முதலே மக்கள் இடம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கோவிட் காலத்துக்குமுன் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு பெருவாரியான மனிதர்கள் இடம்பெயர்ந்தார்கள். கோவிட் டுக்குப் பின் நகரங்களிலிருந்து மீண்டும் சிறு நகரங்களை நோக்கி பலரும் இடம்பெயர்ந் திருக்கிறார்கள்.

இந்த இடப்பெயர்ச்சி என்பது சாதாரண மக்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். பெரும் பணக்காரர்களும் அண்மைக் காலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு இடம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். அதிலும், இந்தியாவில் இருந்து அதிகமான பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகச் சொல்கிறது உலக அளவில் செயல்படும் சில அமைப்புகள்.

வெளியேறும் செல்வந்தர்கள்...

லண்டனைச் சேர்ந்த ஹென்லி என்னும் சர்வதேசக் குடியுரிமை மற்றும் குடியேற்றத்துக்கான ஆலோசனையகம் 8,000-க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் நிறுவனங் களைக் கொண்டுள்ள பணக்காரர்கள் இந்தியாவைவிட்டு இந்த ஆண்டில் (2022) மட்டும் வெளியேற வாய்ப்புள்ளதாக 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

மேலும், உலகின் மிகப் பெரிய மற்றும் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி 2014-ம் ஆண்டிலிருந்து 2018 வரை யிலான காலகட்டத்தில் 23,000 எண்ணிக்கையில் மிகப் பெரும் செல்வந்தர்கள் (மில்லியனர் மற்றும் பில்லியனர்) இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சொத்து இடம்பெயர் அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டில் மட்டும் 5,000 பெரும் செல்வந்தர்கள் அல்லது 2% பெரும் பணக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்... பொருளாதாரத்தை பாதிக்குமா..?

ஏன் இடம்பெயர்கிறார்கள்..?

வெளிநாட்டுக்குச் செல்லும் அனைவரும் சொகுசு வாழ்க்கைக்காகச் செல்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் ஏதேனும் ஒரு தேவை அல்லது ஒரு எதிர்பார்ப்புடன் அவர்கள் வேறு நாட்டுக்குச் செல்கிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முன்னணித் தொழில்முனைவோர், நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக ஐ.நா சபையின் அறிக்கையை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை இந்தியாவில் மட்டும் உள்ளதா என்றால் இல்லை. ரஷ்ய, சீன நாடுகளைச் சேர்ந்த செலவந்தர்களும் தங்கள் நாட்டின் குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்று வாழத் தொடங்கியுள்ளனர்.

இலக்கு நாடுகள்...

இவ்வாறாக நாட்டை விட்டு செல்லும் பெரும் செல்வந்தர்கள் தாங்கள் வாழ விரும்பும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை முன்னணியில் உள்ளன. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, துபாய் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.

உலக அளவில் சிறந்த கல்வி முறை, உயர்தரமான கலப்படம் இல்லாத உணவு மற்றும் வாழ்க்கை முறை, மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, விரைவான மற்றும் விசாலமான வர்த்தக சட்ட முறைகள், இந்த எல்லாவற்றையும் விட முக்கியமாக, அதிகம் சிரமம் ஏற்படுத்திடாத வரி அமைப்பு போன்றவை முக்கிய காரணி களாக இருக்கின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்... பொருளாதாரத்தை பாதிக்குமா..?

5 டிரில்லியன் பொருளாதாரம்...

இந்திய அரசு இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற ஏகப்பட்ட முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், இது போன்ற செய்திகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அந்த இலக்கில் சற்றுத் தொய்வை அல்லது கூடுதல் கால அவகாசத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 3.3 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திருக்கும் நாம் வரும் 2027-ம் ஆண்டுக்குள் 5 டிரில் லியன் பொருளாதாரத்தை அடைவோம் என இந்திய அரசு சூளுரைக்கிறது. ஆனால், இந்தியாவின் மொத்த உற்பத்தி யில் பெரும் செல்வந்தர்களின் வரி, அவர்களின் நிறுவனங் களின் வரி, பெரும் வல்லுநர்கள் பங்களிக்கும் வரி வருவாய் அனைத்தையும் உள்ளடக்கியதே. இவற்றில் கணிசமான வருவாய் வெளிநாடுகளுக்குச் செல்லும் வகையில் இந்திய நாட்டின் மொத்த உற்பத்தியில் இவர் களின் பங்களிப்பு சரிவால் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட கூடுதல் காலம் ஆகலாம்.

வரி அமைப்பை மாற்றுவதன் மூலம் மற்றும் வரி செலுத்து பவர்களுக்கு சலுகை மற்றும் முன்னுரிமை அளிப்பதன்மூலம் இந்தியக் குடியுரிமையை விடுத்து மற்ற நாடுகளின் குடியுரிமையை எதிர்பார்க்கும் வல்லுநர்கள் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.

மத்திய அரசு கூடுதல் அக்கறையுடன் கவனிக்க வேண்டிய பிரச்னை இது!