Published:Updated:

`4 கோடி பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்!' பொருளாதார ஆய்வறிக்கை 2019-20

K.V. Subramanian at a Press Conference
K.V. Subramanian at a Press Conference ( PIB India )

இந்த ஆய்வறிக்கையில், கடந்த 2019-20-ல் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தகவல்களும், வரப்போகும் ஆண்டுகளில் நம் பொருளாதார எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது வழக்கமான ஒன்றாகும். பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நேற்று குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின்னர், 2019-20 பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கையில், கடந்த 2019-20-ல் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தகவல்களும், வரப்போகும் ஆண்டுகளில் நம் பொருளாதார எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.

தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன்
தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன்
PIB India
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமா? - ஓர் அலசல்!

* தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தலைமையில் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரத்தைப் பெருக்கி, பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுப்பதே உடனடி இலக்காக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை புத்தகத்தின் முகப்பு அட்டை, 100 ரூபாய் தாளில் உள்ளதைபோன்ற லாவண்டர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால் படிப்பில் இடைநிற்றல் அதிகரித்துவருவது கவலைக்குரியதாகும். தொடக்கக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரையிலான கனவை நனவாக்குவதற்காக சமக்ரா ஷிக்‌ஷா 2018-19 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Representational Image
Representational Image
Vikatan

* நடப்பு நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் 1 முதல் 1.5 சதவிகிதம்வரை அதிகரிக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

* 2011-12 மற்றும் 2017-18 காலகட்டத்துக்குள் மொத்தம் 2.62 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிராமப்பகுதிகளில் 1.21 கோடி வேலைவாய்ப்புகளும் நகரப்பகுதிகளில் 1.39 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

* வரும் 2025-ம் ஆண்டுக்குள், மேக் இன் இந்தியாவின் தொடர்ச்சியாக, 4 கோடி பேருக்கு நல்ல சம்பளத்திலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் அந்த இலக்கு 8 கோடியாக உயர்த்தப்படும்.

* பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2018-19 நிதியாண்டில் இதுவரை 47.33 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 2014-15 நிதியாண்டுவரை மொத்தம் 11.95 லட்சம் வீடுகள் வரை கட்டப்பட்டிருந்தன.

* கடன் தள்ளுபடி அல்லது உணவு மானியம் போன்ற அரசாங்க முடிவுகள், வங்கிக் கடன் வழங்குவதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றைக் கையாளுவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்படும்.

* டெல்லியில் ஒரு உணவகம் தொடங்க வேண்டுமென்றால் 45 வகை ஆவணங்களில் டெல்லி காவல்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. ஆனால், ஒரு துப்பாக்கி வாங்குவதற்கு 19 ஆவணங்களே போதுமானதாக உள்ளது. எனவே, இந்த நிலையை மாற்றி, தொழில் தொடங்குவதை எளிமைப்படுத்தும் முயற்சிகள் தொடரும்.

* சீனாவைப்போன்று, உழைப்பு மிகுந்த, சர்வதேச வர்த்தகத்துக்கேற்ப ஏற்றுமதித்தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகளை, இளைஞர்களுக்காக உருவாக்குவதில் முனைப்பு காட்டப்படும்.

* 2024-25-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு, மின் பற்றாக்குறை, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாதது போன்றவை தடையாக இருக்கின்றன. இந்தத் தடைகளை நீக்குவதற்கு கட்டமைப்புத்துறையில் ரூ.102 லட்சம் கோடி செலவிட வேண்டியிருக்கிறது.

* 2019, ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், பங்கு, கடன் பத்திர வெளியீடுகளின்மூலம் சுமார் ரூ.74,000 கோடி நிதியைத் திரட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 66% அதிகமாகும்.

Representational Image
Representational Image

* சுகாதார மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய சுகாதாரத்திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம், ஜனவரி 14, 2020 நிலவரப்படி 28,005 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* காடுகள் வளர்ச்சிக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் பயனாக, காடு மற்றும் மரங்களின் பரப்பளவு கணிசமாக அதிகரித்து வருவதாகக் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 80.73 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த பரப்பளவில் 24.56 சதவிகிதமாகும்.

அடுத்த கட்டுரைக்கு