மணப்பாறை மாடு ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர் பெற்றதாக இருந்தது. அதற்கு அடுத்ததாக மணப்பாறை முருக்கு மக்களிடம் தனி வரவேற்பை பெற்றது என்றால் மிகையில்லை. அப்படிப்பட்ட முருக்கு தொழில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
இந்தியா முழுவதும் அனைத்து உணவுப் பொருள்களின் விலை உயர்ந்த காரணத்தால், இத்துறையைச் சார்ந்த குறு சிறு தொழில் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன. ஏற்கெனவே பெரிய நிறுவனங்கள் அனைத்து துறையிலும் சிறு நிறுவனங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் போதிய நிதி ஆதாரம் இல்லாத குறு சிறு நிறுவனங்களை இந்த விலைவாசி உயர்வு தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மணப்பாறை முறுக்குக்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்லை, தமிழ்நாட்டின் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணப்பாறையை மையமாக வைத்து உருவான இந்த முறுக்கு தமிழ்நாட்டின் 24 தனித்துவமான தயாரிப்புகளின் பட்டியலில் உள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதிலும் முக்கியமாக புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வாங்குவதற்காகக் காத்திருக்கிறது. இப்படி நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் மணப்பாறை முறுக்கு உற்பத்தியில் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும், சிறிய மற்றும் குடிசை தொழில்கள்தான் அதிக அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள உற்பத்திப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவை மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

மணப்பாறை முறுக்கின் வரவேற்பு பெற்றதற்கு முக்கியமான காரணம் அதன் குறைவான விலையும், 30 நாள்களுக்குக் கெடாமல் இருக்கும் பதமும்தான். இப்படியிருக்கும் நிலையில் மணப்பாறை முறுக்குத் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் பாமாயில் விநியோகத்தில் இந்தோனேசியாவின் ஏற்றுமதி தடைக்குப் பின்பு இதன் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்து இப்பிரிவில் இருக்கும் மக்களை அதிக அளவில் பாதித்தது. 900 ரூபாயாக இருந்த 15 லிட்டர் பாமாயில் தற்போது 2,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுவாக, மணப்பாறை முறுக்குத் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் கடன் அடிப்படையில் பாமாயில் வாங்குவார்கள், ஆனால், தொடர் விலையேற்றத்தின் காரணமாகக் கடனுக்கு எண்ணெய் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மணப்பாறை முறுக்கு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், இதன் மூலம் ஏற்படும் வர்த்தகப் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மணப்பாறை முறுக்கு தயாரிப்பில் ஈடுப்பட்டிருப்பவர்கள் உள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டு மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்களுக்குப் புவிசார் குறியீட்டை பெறுவதைவிட பணவீக்க பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளது.

இந்த விலைவாசி உயர்வையும், பணப் புழக்க பாதிப்புகளையும் தாக்குப்பிடிக்க முடியாத குறு சிறு தொழில்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட வேளையில் பாமாயில் ஏற்றுமதி தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. பாமாயில் விலை உடனடியாக இறங்கும் என எதிர்பார்க்க முடியாது. இந்தச் சூழலில் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணப்பாறையில் சுமார் 500-க்கும் அதிகமான குடும்பங்கள் முறுக்குத் தயாரிப்பில் உள்ளன. இதைத் தவிர, தமிழ்நாடு முழுவதும் பல வகை முறுக்கு தயாரிக்கும் நிறுவனங்களும் தொழில்களும் இதேபோன்ற பாதிப்பைதான் எதிர்கொண்டு வருகின்றன.