Published:Updated:

யு.பி.ஐ தொழில்நுட்பம்...வரலாறு காணாத அளவில் உயரும் பணப் பரிமாற்றம்... மக்களுக்குச் சாதகமா, பாதகமா?

யு.பி.ஐ தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
யு.பி.ஐ தொழில்நுட்பம்

U P I T E C H N O L O G Y

யு.பி.ஐ தொழில்நுட்பம்...வரலாறு காணாத அளவில் உயரும் பணப் பரிமாற்றம்... மக்களுக்குச் சாதகமா, பாதகமா?

U P I T E C H N O L O G Y

Published:Updated:
யு.பி.ஐ தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
யு.பி.ஐ தொழில்நுட்பம்

பணப் பரிமாற்றத்துக்கு வங்கிகளை அணுகும் போக்கு நம்மிடம் மெள்ள மெள்ளக் குறைந்து வருகிறது. குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று உலகை ஆட்கொள்ளத் தொடங்கிய பிறகு, ரூபாய் நோட்டுகளைப் பணப் பரிமாற்றத்துக்குப் பயன் படுத்துவது குறைந்துள்ளன. இதற்குக் காரணம், யு.பி.ஐ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘யுனைடெட் பேமென்ட் ஆஃப் இந்தியா.’

யு.பி.ஐ தொழில்நுட்பம்...வரலாறு காணாத அளவில் உயரும் பணப் பரிமாற்றம்... மக்களுக்குச் சாதகமா, பாதகமா?

2016-ம் ஆண்டு முதலே நம் நாட்டில் யு.பி.ஐ தளங்கள் செயல்படத் தொடங்கினாலும், கடந்த ஓரிரு ஆண்டுகளாக அசுர வேகத்தில் அவை வளர்ந்து வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு வெறும் 21 வங்கிகள் மட்டுமே யு.பி.ஐ தளத்துக்குள் இருந்தன. ஆனால், இன்றோ 229 வங்கிகள் அதில் இணைந்துள்ளன. மேலும், கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்த நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவை அதிகரித்தலால் யு.பி.ஐ பரிவர்த்தனை இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5,47,373 கோடி மதிப்புள்ள பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று தி நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (The national Payments Corporation of India) தெரிவிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர் தொடங்கி சிறிய தள்ளுவண்டிக் கடைக்காரர் முதல் பணப் பரிமாற்றங்களுக்கு யு.பி.ஐ. தளங்களைப் பயன்படுத்தும்போது தனிநபருக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் என்ன நன்மை கிடைக்கும் என நிதி ஆலோசகர் யு.என். சுபாஷிடம் கேட்டோம்.

யு.என்.சுபாஷ்
யு.என்.சுபாஷ்

பணப் பரிமாற்றம் அரசின் கணக்கில் வரும்...

“ரொக்கமாக பணம் தந்து ஒரு பொருளை வாங்கும்போது அந்தப் பரிமாற்றத்தைக் கணக்கில் காட்டு கிறார்களா என்பது தெரியாது. நிறைய கடைகளில் ரசீது இல்லாமல் பொருள்கள் வாங்கினால் விலை குறைத்துத் தருவீர்களா என்று கேட்பதைப் பார்த்திருப்போம். ரசீது இல்லாமலோ ஜி.எஸ்.டி இல்லாமலோ கொடுத்தால் வரி கட்டும்போது அதை அரசாங்கத்துக்கு கணக்கு காட்டத் தேவையில்லை. இப்படிச் செய்யும்போது கறுப்புப் பணப் புழக்கம் அதிகரிக்கிறது.

வர்த்தகம் நன்றாகவே நடந்தும் அதைப் பதிவில் கொண்டு வரவில்லை எனில், நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை என்ற தோற்றம்தான் ஏற்படும். பதிவிலிருக்கும் பணப் பரிமாற்றங்களைத் தான் அரசு, கணக்கில் எடுத்துக்கொண்டு பொருளாதாரத்தின் நிலையைக் கணக் கிடுக்கிறது. ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துல்லிய மாகக் கணக்கிட இந்த யு.பி.ஐ பரிமாற்றம் அவசியம் தேவை.

யு.பி.ஐ பரிமாற்றங்களைப் பயன்படுத்தி பணத்தைப் பரிமாற்றம் செய்யும்போது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பணம் மற்றொரு வங்கிக் கணக்குக்குத்தான் நேரடி யாகப் போய்ச் சேரும். இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கக் கூடிய வரி வருமானம் அதிகரிக்கும். மேலும், வரித்துறையின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துப்போவதும் (Tax Compliance) மேம்படும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

வங்கிக் கடன் எளிதில் கிடைக்கும்...

சிறு வியாபாரிகள், சாலை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்களும் யு.பி.ஐ பரிமாற்றங்களுக்கு மாறுவதால், ஒருவர் சம்பாதிக்கும் பணம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கிக் கணக்கில் தொடர்ந்து பரிமாற்றங்கள் நடைபெறும் போது, வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். இதனால் கந்துவட்டி போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருப்பார்கள்” என்றார்.

தாமஸ் ஃபிரான்கோ
தாமஸ் ஃபிரான்கோ

மோசடிகளைத் தவிர்க்க வேண்டும்...

அடுத்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃபிரான்கோவிடம் இது குறித்துப் பேசினோம்.

‘‘இந்தியாவில் ஒருநாளைக்கு 60 லட்சம் யு.பி.ஐ பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.யு.பி.ஐ பரிமாற்றங்களால்தான் நிறைய மோசடிகளும் நடைபெறு கின்றன. வங்கிகளின் மூலம் நேரடிப் பரிமாற்றம் செய்யும் போது எளிதாகக் கண்காணிக்க முடியும். வங்கிகளில் பெரிய அளவில் நடக்கும் நேரடிப் பணப் பரிவர்த்தனைகளை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. மேலும், ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எஃப்.டி போன்ற பரிவர்த்தனைகளில் பெரிய அளவில் புகார் வருவதில்லை.

ஆனால், யு.பி.ஐ பரிமாற்றங்களில் முதல் பரிமாற்றத்தை மட்டும்தான் கண்காணித்து, எந்த வங்கியிலிருந்து எந்த வங்கிக்குப் பணம் சென்றிருக்கிறது எனக் கண்டறிய முடியும். அதற்குப் பிறகு, அந்தப் பணம் எங்கு சென்றிருக்கிறது எனக் கண்டறிய முடியாது என்கின்றனர்.

இந்தியாவின் சைபர் செக்யூரிட்டி மிகவும் பலவீனமாக உள்ளது. யு.பி.ஐ தளத்தின் பாதுகாப்பு வலிமையானதாக இல்லை என்று ஏற்கெனவே பல நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இப்போது நடக்கும் பல மோசடிகள் அதைப் பயன்படுத் தித்தான் நடை பெறுகிறது. ஓ.டி.பி கேட்பது, ஏதாவது இணைப்பை அனுப்பி அதன்மூலம் கணக்கை அப்டேட் செய்யச் சொல்லி, வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போன்ற பிரச்னைகள் நடக்கின்றன. இது பற்றி புகார் செய்தாலும் தீர்வு கிடைப்பதில்லை.

இதுபோன்ற தளங்கள் பணப் பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணம் வசூலிப்பதில்லை. காரணம், பணப் பரிமாற்றங்களைச் செய்பவர் களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து, பலவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர்.

யு.பி.ஐ தொழில்நுட்பம்...வரலாறு காணாத அளவில் உயரும் பணப் பரிமாற்றம்... மக்களுக்குச் சாதகமா, பாதகமா?

கறுப்புப் பணம் குறையுமா?

அன்றாடப் பயன்பாடுக் கான பொருள்கள், உணவகங் கள், ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது உள்ளிட்ட சிறிய அளவிலான பரிமாற்றங் களுக்கு மட்டுமே யு.பி.ஐ அதிகம் பயன்படுத்தப் படு கிறது. பெரிய அளவிலான பரிமாற்றங்களுக்கு மக்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பரிமாற்ற முறை களையே பயன்படுத்து கிறார்கள். எனவே, யு.பி.ஐ மூலம் கறுப்புப் பணம் உருவாவது ஒழிந்துவிடாது’’ என்றார்.

மத்திய அரசாங்கம் யு.பி.ஐ தளங்களைப் பாதுகாப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும். அதன் பிறகே, அதிக அளவில் பயன்பாட்டுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism