Published:Updated:

அடுத்தவரின் பான் எண் கொடுத்து ஆன்லைன் கடன் மோசடி; உங்கள் சிபில் ஸ்கோருக்கும் பாதிப்பா?

Money (Representational Image)
News
Money (Representational Image)

யாரோ வாங்கிய கடனுக்கு, வங்கிகள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.

அடுத்தவரின் பான் எண் கொடுத்து ஆன்லைன் கடன் மோசடி; உங்கள் சிபில் ஸ்கோருக்கும் பாதிப்பா?

யாரோ வாங்கிய கடனுக்கு, வங்கிகள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.

Published:Updated:
Money (Representational Image)
News
Money (Representational Image)
The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடியைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

ஆன்லைனில் சிறு கடன்கள் வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம் தனி (Dhani). இந்நிறுவனத்தின் ஆப் மூலமாகப் பலரது பான் எண்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, ஆள்மாறாட்டம் செய்து கடன்கள் வாங்கப்பட்டுள்ளது அண்மையில் தெரியவந்துள்ளது.

என்ன நடந்தது?

ஊடகவியலாளரான ஆதித்யா கல்ரா, அண்மையில் தன்னுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை செக் செய்திருக்கிறார். அப்போது, அவருக்குத் தெரியாமலேயே IVL Finance (Dhani-யின் தாய் நிறுவனம்) என்ற நிறுவனத்தில், அவரின் பான் எண்ணைப் பயன்படுத்தி கடன் வழங்கப்பட்டுள்ளதும், அந்தக் கடன் இன்னமும் பாக்கி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

  • இதை அவர் உடனே ட்விட்டரில் சொல்ல, இதேபோல பாதிக்கப்பட்ட பலரும் அவரின் ட்வீட்டில் ரிப்ளை செய்தனர். அதன்பின்புதான் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய `அடையாளத் திருட்டு’ (Identity Theft) நடந்திருப்பது உறுதியானது.

  • இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் Dhani வாடிக்கையாளர் சேவை மையம், சைபர் கிரைம், ரிசர்வ் வங்கி எனப் பல இடங்களிலும் புகார் அளித்திருக்கின்றனர்.

எப்படி பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டது?

பொதுவாக, ஆன்லைன் சேவைகளில் பான் எண்ணை Verify செய்ய வேண்டுமென்றால், பான் கார்டை போட்டோ எடுத்து அப்லோடு செய்யச் சொல்வார்கள். ஆதாருடன் இணைந்த சேவை என்றால் மொபைல் OTP வரும். அதன் பிறகே பான் எண்ணைப் பயன்படுத்த முடியும்.

  • ஆனால், Dhani நிறுவனம் சில விண்ணப்பங்களில் அப்படி எந்த Verification-னும் செய்யாமல், பான் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டே கடன்களை வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனால், குற்றவாளிகள் வேறொரு நபரின் பான் எண்ணைப் பயன்படுத்தி, தவறான மொபைல் எண், தவறான முகவரி ஆகியவற்றைக் கொடுத்து கடன்களைப் பெற்றிருக்கின்றனர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன பாதிப்பு?

  • இதில் அடையாளத் திருட்டு மட்டுமே பிரச்னையில்லை. யாரின் பான் எண் கொடுக்கப்பட்டு கடன் வாங்கப்பட்டுள்ளதோ, அவர்களின் வீட்டுக்கே சென்று, Dhani ஏஜென்ட்கள் கடன்களை திரும்ப வசூலிக்க முயற்சி செய்திருக்கின்றனர். யாரோ வாங்கிய கடனுக்கு, வங்கிகள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.

  • இன்னொன்று, இப்படி யாரின் பான் எண்ணெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களின் கிரெடிட் ஸ்கோர் (சிபில் ஸ்கோர்) இந்த கடன் பாக்கியால் குறைந்திருக்கிறது. இது அவர்கள் எதிர்காலத்தில் நிஜமாகவே கடன்வாங்கச் செல்லும்போது சிக்கலை ஏற்படுத்தும்.

என்ன சொல்கிறது Dhani?

கடந்த ஒரு வருடத்தில் சுமார் 35 லட்சம் பேருக்கு சிறுகடன்கள் வழங்கியிருப்பதாகவும், அதில் 99.9% சரியான நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். ஆனால், மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கவில்லை.

  • தற்போது இந்தப் பிரச்னை பெரிதானதை அடுத்து வாடிக்கையாளர்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விரைவில் ரிசர்வ் வங்கியும் Dhani நிறுவனம் மீது விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.

உங்கள் பான் எண் பத்திரமா?

அண்மைக்காலங்களில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் திடீரென குறைந்திருப்பதாக உணர்ந்தாலோ, Dhani நிறுவனத்திடமிருந்து கடன் குறித்து ஏதேனும் சந்தேகத்துக்குரிய மெசேஜ்கள் வந்திருந்தாலோ, நீங்களும் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை செக் செய்துகொள்ளலாம்.

  • Cibil, Experian, Equifax உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கிரெடிட் ரிப்போர்ட் வசதியை அளிக்கின்றன. இவற்றின் இணையதளங்களுக்குச் சென்று ரிப்போர்ட்டைப் பார்க்கலாம்.

  • ஒருவேளை உங்கள் ரிப்போர்ட்டில் தேவையற்ற கடன்கள் ஏதேனும் இடம்பெற்றிருப்பின், அதை உடனே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புகாராக அனுப்பலாம். பெரியளவிலான பிரச்னைகள் எனில் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கும் ஆன்லைனில் புகார் செய்யலாம்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடியைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!