Published:Updated:

ரிலையன்ஸூக்கு `க்ரீன் சிக்னல்'; அமேசானுக்கு சிக்கல்; ஃபியூச்சர் க்ரூப் விவகாரத்தில் நடப்பது என்ன?

Amazon
News
Amazon ( AP Photo/Michel Spingler )

இந்தத் தடை காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் உள்ள முட்டுக்கட்டை தற்போது விலகியுள்ளது. இதன் காரணமாக ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகள் 20% அதிகரித்து நேற்று முன்தினம் வர்த்தகமாயின.

கிஷோர் பியானியைத் தலைவராகக் கொண்ட, பிரபல ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபியூச்சர் கூப்பன் நிறுவனத்தைக் கையகப்படுத்த அமேசான் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு விதித்துள்ளது.

முன்னதாக ஃபியூச்சர் குரூப் குழுமத்தின் துணை நிறுவனமான ஃபியூச்சர் கூப்பன் என்ற நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை 1,500 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த ஃபியூச்சர் கூப்பன் நிறுவனம், ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் 7.3 சதவிகித பங்குகளைக் கொண்டிருந்தது. அமேசான் நிறுவனம் ஃபியூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வாங்கியதன் மூலம் ஃபியூச்சர் குரூப் குழுமத்தின் 3.64 சதவிகித பங்குகளும் அமேசான் நிறுவனத்துக்குச் சென்றது.

Amazon
Amazon

ஃபியூச்சர் கூப்பன் நிறுவன பங்குகளை வாங்கும்போது அமேசான் நிறுவனம் பல விஷயங்களை மறைத்துள்ளது என்றும் இதன் காரணமாக அமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2020-ம் ஆண்டு, ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் 30 சதவிகித பங்குகளை 24,713 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொலைத்தொடர்பு துறையில் ஜியோவை வெற்றிகரமாகச் செயல்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய சில்லறை வர்த்தகத்தில் கால் பதிப்பதற்கு இந்த ஒப்பந்தம் பெருமளவில் உதவும் என்று கருதப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனமும் ஜியோ மார்ட் என்ற பெயரில் இ காமர்ஸ் முறையிலும் அமேசானுக்குப் போட்டியாகப் பொருள்களை விற்கத் தொடங்கியது. இதன் காரணமாக ரிலையன்ஸ் பங்கு உச்ச விலைக்குச் செல்ல தொடங்கியது.

ப்யூச்சர் குரூப் நிறுவனங்கள்
ப்யூச்சர் குரூப் நிறுவனங்கள்

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்திடம் (Singapore International Arbitration Committee – சுருக்கமாக SIAC) முறையீடு செய்தது. ``அமேசான் நிறுவனம் ஃபியூச்சர் கூப்பன் நிறுவனத்தை வாங்கும்போது அதன் ஓர் ஒப்பந்த ஷரத்தாக ஃபியூச்சர் குரூப் பங்குகளை அமேசான் நிறுவனத்தின் போட்டியாளர்களுக்கு விற்கக் கூடாது என்ற தடை நிபந்தனையாக உள்ளது. அதை மீறி அமேசான் நிறுவனத்தின் போட்டியாளரான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஃப்யூச்சர் குரூப் நிறுவனப் பங்குகளை விற்பது முறையற்ற செயல். அதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று அமேசான் கோரியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபியூச்சர் குரூப் நிறுவனம் இந்தியாவில் ஹெரிடேஜ், பிக் பஜார் போன்ற பல பிராண்டுகளில் தமது சில்லறை வர்த்தகத்தைப் பல நகரங்களில் செய்துகொண்டிருந்தது. இந்த நிறுவனம் பல வங்கிகளில் 12,800 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தது. இந்தக் கடனை திரும்ப செலுத்துவதற்கு பல வகைகளில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. அமேசான் நிறுவனம் பெற்ற தடை காரணமாக ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தால் தமது பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

Mukesh ambani
Mukesh ambani
Photo: AP

தற்போது இந்தத் தடை உத்தரவு காரணமாக ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தால் தமது பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடியும். இதன் காரணமாக ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகள் 20% அதிகரித்து நேற்று முன்தினம் வர்த்தகமாயின. பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தபோதும்கூட, ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 20% உயர்ந்து வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடை காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் உள்ள முட்டுக்கட்டை தற்போது விலகியுள்ளது. நமது நாட்டில் இ- காமர்ஸ் துறையின் மதிப்பானது 2024-ம் ஆண்டு 1,00,000 கோடியாக வளரும் என்று பயோனீர் அறிக்கையின் (Payoneer Report) தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஏறக்குறைய ஆண்டுக்கு 27 சதவிகிதம் வளர்ச்சி அடையும் துறையாக மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள மக்கள் தொகை காரணமாக இந்தியச் சந்தை உலக அளவில் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. உலக அளவில் இ-காமர்ஸ் துறையில் இந்தியா 9-வது இடத்தில தற்போது இருக்கிறது. அந்த சந்தையைப் பெருமளவில் கைப்பற்ற பெருநிறுவனங்கள் போட்டியிடுகின்றன. தற்போதய நிலையில் அமேசான் நிறுவனத்தின் பின்னடைவு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மாறியுள்ளது.