Published:Updated:

மோட்டார் வாகன காப்பீடு; நீதிமன்றத்தின் தீர்ப்பும் நடைமுறை சிக்கலும்!

வாகன காப்பீடு

காப்பீடு திட்டங்களைப் பொருத்தவரை அதன் விதிமுறைகள் மட்டுமல்லாமல் கிளெய்ம் நடவடிக்கையின்போது பல்வேறு காரணங்களை முன்வைத்து கிளெய்ம் மறுக்கப்படவோ, கிளெய்ம் தொகை குறைக்கப்படவோ அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே காப்பீடு என்றாலே பலருக்கும் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது.

மோட்டார் வாகன காப்பீடு; நீதிமன்றத்தின் தீர்ப்பும் நடைமுறை சிக்கலும்!

காப்பீடு திட்டங்களைப் பொருத்தவரை அதன் விதிமுறைகள் மட்டுமல்லாமல் கிளெய்ம் நடவடிக்கையின்போது பல்வேறு காரணங்களை முன்வைத்து கிளெய்ம் மறுக்கப்படவோ, கிளெய்ம் தொகை குறைக்கப்படவோ அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே காப்பீடு என்றாலே பலருக்கும் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது.

Published:Updated:
வாகன காப்பீடு

கடந்த 2019 ஏப்ரலில் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்த தினேஷ்குமார் என்பவரின் பெற்றோர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் ரூ.1.5 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் வாகனத்தை ஓட்டியவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. ஆனாலும் வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு நிறுவனம் ரூ. 64,33,200 இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி எனும் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மோட்டார் வாகனங்களுக்கு காப்பீடு வழங்கும்போது வாகனத்தின் உரிமையாளருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

காப்பீடு திட்டங்களைப் பொருத்தவரை அதன் விதிமுறைகள் மட்டுமல்லாமல் கிளெய்ம் நடவடிக்கையின்போது பல்வேறு காரணங்களை முன்வைத்து கிளெய்ம் மறுக்கப்படவோ, கிளெய்ம் தொகை குறைக்கப்படவோ அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே காப்பீடு என்றாலே பலருக்கும் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு
vikatan

இத்தகைய சூழலில் காப்பீடு வழங்கும்போதே ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகனம் தொடர்பான வழக்குகளை நடத்திவரும் வழக்கறிஞர் சுரேஷிடம் கேட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"மோட்டார் வாகன காப்பீடு வழக்குகளில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்கெனவே இருக்கின்றன. பல வழக்குகளும், தீர்ப்புகளும்தான் தொடர்ந்து இதிலுள்ள சிக்கல்களைச் சரி செய்ய காரணமாக இருந்துவருகின்றன.

வழக்கறிஞர் வி எஸ் சுரேஷ்
வழக்கறிஞர் வி எஸ் சுரேஷ்

சில வழக்குகள் மேலும் குழப்பத்தை உண்டாக்கிவிடுகின்றன. தற்போது நீதிமன்றம் காப்பீடு நிறுவனங்கள் வாகனங்களுக்குக் காப்பீடு வழங்கும்போது உரிமையாளரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. காப்பீடு நிறுவனங்கள் கிளெய்ம் தர மறுக்க ஓட்டுநர் உரிமம் இல்லை என்ற காரணத்தை முன்வைப்பதால் நீதிமன்றம் அதை வலியுறுத்தி கூறியிருக்கிறது.

ஆனால் இன்று காப்பீடு திட்டங்களை காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே வழங்குவதில்லை. யார் யாரோ காப்பீடு திட்டங்களை விற்கிறார்கள். பாலிசி பசார் போன்ற இணையதளங்கள் ஆரம்பித்து, பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஏஜெண்டுகள் வரை காப்பீடு திட்டங்களை விற்கிறார்கள். இவர்களுக்கு காப்பீடு திட்டங்களை வாடிக்கையாளர்களிடம் விற்றால் போதும் என்றுதான் செயல்படுகிறார்கள். 5 நிமிடத்தில் இன்ஷூரன்ஸ் என்று விளம்பரப் படுத்துகிறார்கள்.

காப்பீடு
காப்பீடு

ஆனால் காப்பீடு திட்டங்கள் என்பது அதிலுள்ள பலன்களையும், விதிமுறைகளையும் தெரிந்துகொண்டு வாங்க வேண்டியது. ஆனால் அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. அவசர அவசரமாக காப்பீடு திட்டங்களின் விற்பனை நடக்கிறது. இணையதளத்தில் வாங்கும் காப்பீடுகளை யார் வாங்குகிறார்கள் என்று கூட காப்பீடு நிறுவனங்களுக்குத் தெரியாது.

தற்போது நீதிமன்றம் காப்பீடு நிறுவனங்களை ஓட்டுநர் உரிமம் இருந்தால்தான் காப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் வாகன உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. பல தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள் ஒன்றுக்கு மேலான வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் ஓட்டுவதில்லை. டிரைவர்களை வைத்துதான் ஓட்டுகிறார்கள். டிரைவர்களின் ஓட்டுநர் உரிமங்களின் நகலை பெயருக்கு வாங்கி வைத்துக்கொள்வார்கள். அது நடப்பில் இருக்கிறதா, காலாவதி ஆகிவிட்டதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை வாகனத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓட்டுகிறார்களா என்பதோடு விஷயம் முடிந்தது. ஏதாவது பிரச்னை என்று வந்த பிறகுதான் எல்லாவற்றையும் பார்ப்பார்கள்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அதேபோல்தான் கமர்ஷியல் வாகனங்களும். வாகனங்களை யார் எப்போது ஓட்டுகிறார்கள் என்றே தெரியாது. ஆம்னி பேருந்துகள் போன்றவற்றை டிரைவர்கள் மாறி மாறி ஓட்டுவார்கள். லாரிகளும் அப்படித்தான்.

இவர்கள் வசமிருக்கும் ஓட்டுநர் உரிமங்கள் நம்பத்தகுந்ததா உண்மைதானா என்பதையெல்லாம் கூட சாதாரணமாகக் கண்டுபிடிக்க முடியாது. ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு நண்பர் நம்முடைய வாகனத்தை ஓட்டிச் செல்கிறார் எனில் அப்போது நாம் என்ன செய்ய முடியும்.

நீதிமன்றம் வலியுறுத்துவது ஒருபக்கம் நல்லதுதான் என்றாலும், அதிலுள்ள இதுபோன்ற சிக்கல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விதிமுறைகளை வகுக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்படுபவர்களுக்குவிரைவில் இழப்பீடு கிடைக்கும். காப்பீடு நிறுவனங்கள் கிளெய்மை நிராகரிக்க என்ன காரணம் கிடைக்கும் என்று பாராமல், பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நியாயமாக முடிவுகளை எடுக்கலாம். அப்படி நடந்துகொண்டால் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வராமல் இருக்கும்" என்றார்.