Published:Updated:

`பிசினஸ்ல ஜெயிக்கணும்னா டிரெண்டுல இருக்கணும்!' - பெரும்போட்டியை வென்ற மாரிகோ கதை! திருப்புமுனை - 2

பிசினஸ் (Representational Image)

நிறுவனம் இப்படியே இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நாம் யார் என்றே தெரியாது. போலிகள், கலப்படம் உருவாகும். அதனால் ரீடெய்ல் பிராண்டாக மாற்றலாம் என ஹர்ஷ் முடிவெடுத்தார். அப்போதும் ஒரு சிக்கல். பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறையும் தன்மை உடையது.

`பிசினஸ்ல ஜெயிக்கணும்னா டிரெண்டுல இருக்கணும்!' - பெரும்போட்டியை வென்ற மாரிகோ கதை! திருப்புமுனை - 2

நிறுவனம் இப்படியே இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நாம் யார் என்றே தெரியாது. போலிகள், கலப்படம் உருவாகும். அதனால் ரீடெய்ல் பிராண்டாக மாற்றலாம் என ஹர்ஷ் முடிவெடுத்தார். அப்போதும் ஒரு சிக்கல். பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறையும் தன்மை உடையது.

Published:Updated:
பிசினஸ் (Representational Image)

யாராக இருந்தாலும் முதலில் கம்பெனியைத் தொடங்குவார்கள். அதன் பிறகு, பிராண்டை உருவாக்குவார்கள். ஆனால், பாராசூட் மற்றும் சபோலோ ஆகிய பிராண்டுகளை வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம் மாரிகோ.

பாம்பே ஆயில் மில்ஸ் என்னும் குடும்ப நிறுவனத்தில் ஹர்ஷ் மரிவாலா (Harsh Mariwala) 1971-ம் ஆண்டு இணைந்தார். இந்த நிறுவனம் தேங்காய் எண்ணெயை மொத்தமாக விற்பனை செய்துவந்தது. ஒரு கிலோ, 2 கிலோ, 15 கிலோ என மொத்தமாக விற்பனை செய்துவந்தது. நிறுவனம் மொத்தமாக விற்பனை செய்தாலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே வாங்கிச் செல்கிறார்கள் என்பதை ஹர்ஷ் மரிவாலா உணர்ந்தார்.

Mariwala
Mariwala
Vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிறுவனம் இப்படியே இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நாம் யார் என்றே தெரியாது. போலிகள், கலப்படம் உருவாகும். அதனால் ரீடெய்ல் பிராண்டாக மாற்றலாம் என ஹர்ஷ் முடிவெடுத்தார். அப்போதும் ஒரு சிக்கல். பனிக் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறையும் தன்மை உடையது. டின்னில் இருக்கும்போது கரண்டியில் தேங்காய் எண்ணெயை எடுக்க முடியும். ஆனால், சிறிய பாட்டிலில் அடைத்து விற்றால் உறைந்துவிடும். அப்படியானால் சுடுநீரில் வைத்தால்கூட உருகாத அளவுக்கு அந்த பிளாஸ்டிக் தன்மை இருக்க வேண்டும்.

மேலும், தேங்காய் எண்ணெயை எலிகள் நாசம் செய்துவிடும். அதனால் எலிகள் கடிக்காதவாறு பாட்டிலின் வடிவமைப்பு இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, பாராசூட் பிராண்டை உருவாக்கினார் ஹர்ஸ். எலிகளால் பிடிக்க முடியாத அளவுக்கு அந்த பாட்டிலின் டிசைன் இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாரிகோ உருவானது...

சபோலோ மற்றும் பாராசூட் ஆகிய இரு பிராண்டுகளும் நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுத்தன. அதனால் 1975-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் நிறுவனத்தின் வருமானம் இரு மடங்காக உயர்ந்தது. அப்போதுதான் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனத்தில் இருந்து எப்.எம்.சி.ஜி நிறுவனமாக மாறியது மாரிகோ நிறுவனம். 1990-ம் ஆண்டு குடும்ப நிறுவனத்தில் நுகர்வோர் பிரிவை மட்டும் பிரித்து மாரிகோ எனும் நிறுவனம் உருவானது.

மாரிகோ
மாரிகோ

குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். கோல்ட்மேன் சாக்ஸ் என்னும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்துடன் டீல் பேசினார். ஆனால், அந்த டீல் நடக்கவில்லை. ஐ.பி.ஓ செல்லலாம் எனத் திட்டமிட்டபோது ஹர்ஷத் மேத்தா முறைகேடு வெளியாகி நிதி திரட்ட முடியாத சூழல். அதன்பிறகு 1996-ம் ஆண்டு மாரிகோ நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியானது முதலீட்டாளர்களின் ஆதரவை பெருமளவில் பெற்றது.

அப்போது இந்தியாவில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் லீவர், கோல்கேட், பி அண்ட் ஜி உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. அவர்களுடன் போட்டி போட வேண்டும் என்றால் அவர்களைப் போன்று அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனப் பணியாளர்கள், விளம்பரம் , நெட்வொர்க் அனைத்தையும் மாரிகோ உருவாக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் தேங்காய் எண்ணெய் பிரிவில் மாரிக்கோ அசைக்க முடியாத இடத்துக்குச் சென்றது. அந்தச் சமயத்தில் டாபரின் அன்மோல், டாடாவின் நிஹார், சாலிமார், கோகோகேர் உள்ளிட்ட பிராண்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உருவானது யுத்தம்...

எப்.எம்.சி.ஜி துறையில் ஹிந்துஸ்தான் லீவர் (தற்போது ஹெச்.யூ.எல்.) தவிர்க்க முடியாத நிறுவனங்களாக இருந்தன. இவர்களிடம் டிஸ்ரிபியூஷன் நெட்வொர்க், மார்க்கெட்டிங் எந்த அளவுகுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு பணபலமும் இருக்கிறது. ரீடெய்ல் துறையில் ஒரு நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது எனில், அதை வாங்குவதற்கு கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். கிஸான், லிப்டன், பாண்ட்ஸ் எனப் பல பிராண்டுகள் ஹிந்துஸ்தான் லீவர் வாங்கியவைதான். (சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட்டை வாங்கியது)

அப்போது டாடா, ஆயில் மில்ஸ் நிறுவனத்தையும் வாங்கியது. இந்த நிறுவனம் சோப்பு தயாரிக்கிறது. தவிர, நிஹார் எனும் தேங்காய் எண்ணெய் பிராண்டையும் தயாரிக்கிறது. கிழக்கு இந்தியாவில் நிஹார் முக்கியமான பிராண்ட். இருந்தாலும் தேங்காய் எண்ணெய் விற்பனையில் மாரிகோவின் பாராசூட்தான் முதலிடம்.

பிசினஸ்
பிசினஸ்

1996-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு கேகி தாதிசேத் (Keki Dadiseth) என்பவர் தலைவராகப் பொறுப்பேற்றார். இவருடைய முக்கியமான பணிகளில் ஒன்று நிறுவனங்களை வாங்குவது. நிறுவனங்களை வாங்குவதில் இவர் எக்ஸ்பர்ட்.

நிஹார் 7% சந்தையை மட்டுமே வைத்திருந்தது. ஆனால், பாராசூட் 48% சந்தையை வைத்திருந்தது. இருந்தாலும் தன்னுடைய மார்க்கெட்டிங் பலத்தால் அதிக தள்ளுபடி, விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் சலுகை எனப் பணத்தை கடுமையாகச் செலவு செய்தது. மாரிகோவை வாங்குவது என முடிவெடுத்தும் அதற்கான செயல்கள் ஒவ்வொன்றாக லீவர் செய்தது.

தன்னுடைய நெட்வொர்க்கில் உள்ள டிஸ்ரிபியுட்டர்களிடம் மாரிகோவை வாங்குகிறோம் என்னும் வதந்தியை பரப்பியது. ஏற்கெனவே நிஹாருக்கு வழங்கும் தள்ளுபடி மற்றும் சலுகை காரணமாக பாராசூட் விற்பனை தடுமாறியது. இந்தச் சமயத்தில் இதுபோன்ற வதந்திகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. தவிர, முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை வல்லுநர்கள் கூட்டத்தில் மாரிகோவை வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்னும் செய்தியை ஹிந்துஸ்தான் லீவர் கசியவிட்டது.

அதைத் தொடர்ந்து மாரிகோவின் நிறுவனர் ஹர்ஷ் மாரிவாலாவின் நண்பர்கள் மூலமாக ஆலோசனை என்னும் பெயரில் மறைமுகப் பேச்சுவார்த்தை தொடங்கியது. அனைத்துத் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. திட்டமிட்டு பரப்பப்பட்டதால் இதன் பங்குகளின் விலை சரியத்தொடங்கியது.

மிரட்டலாக வந்த போன்...

இதை அடுத்து ஹிந்துஸ்தான் லீவர் தலைவர் தாதிசேத் நேரடியாகக் களத்தில் இறங்கினார். நேரடியாக ஹரிஷ் மரிவாலாவிடம் போனில் பேசி, மாரிகோவை எங்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார். ``இதன் மூலம் உங்கள் குடும்பத்துக்குத் தேவையானதை செய்கிறோம். இது மிகப் பெரிய வாய்ப்பு. தவறவிட வேண்டாம். ஒருவேளை மறுத்தால், மாரிகோ என்னும் பெயர் வரலாற்றில் மட்டுமே இருக்கும். அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டி இருக்கும்’’ என மிரட்டலாகவே பேசினார் தாதிசேத்.

Idea (Representational Image)
Idea (Representational Image)
Photo by AbsolutVision on Unsplash

இதைத் தொடர்ந்து மாரிகோவும் போட்டிக்குத் தயாரானது. பாராசூட் மூலம் கிடைக்கும் லாபத்தைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்தது. விளம்பரங்களுக்கு கூடுதலாகச் செலவு செய்தது.

ஏற்கெனவே ஹிந்துஸ்தான் முக்கிய பிராண்டான சர்ஃப் மற்றும் நிர்மா இடையே பெரிய போட்டி இருந்தது. அந்தப் போட்டியில் கர்சன் பாய் வெற்றி பெற்றிருந்தார். அதனால் அவரை சந்தித்து உரையாடினார் மரிவாலா. அவரும் சில ஆலோசனைகள் வழங்கினார். 48 சதவிகிதத்தில் இருந்து 52 சதவிகிதமாக பாராசூட் சந்தை உயர்ந்தது. அதே சமயம், 8 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சம் 15 சதவிகிதமாக மட்டுமே நிஹார் பிராண்ட் உயர முடிந்தது. இவர்களின் போட்டியில் சிறிய நிறுவனங்கள் மேலும் நெருக்கடியைச் சந்தித்தன.

இன்னும் முடியவில்லை...

தேங்காய் எண்ணெயில் புதுமை செய்ய எதுவும் இல்லை. தவிர, பெரும் பணத்தை முதலீடு செய்து ஒரு எல்லைக்கு மேல் வளர முடியவில்லை என்பதால், நிஹாருக்கு செலவு செய்யும் தொகையை ஹிந்துஸ்தான் லீவர் குறைத்துக்கொண்டது. ஹிந்துஸ்தான் லீவர் தலைவர் தாதிசேத் லண்டனுக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

இந்தச் சூழலில், முக்கியமான சந்தை இல்லாத பிராண்டுகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்னும் சர்வதேசப் பிரிவில் இருந்து உத்தரவும் அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு காரணம், முக்கியம் இல்லாத பிரிவுகளில் கவனம் செலுத்தியதால், இதர பிரிவுகளில் போட்டி அதிகரித்தது. இந்தச் சமயத்தில், பல உள்ளூர் பிராண்டுகள் எஃப்.எம்.சி.ஜி பிரிவில் உருவானது. (தமிழகத்தில் இருந்து கவின் கேர் ஷாம்பு பிரிவில் பெரிய போட்டியாக இருந்தது).

நிஹாருக்கு செலவு செய்யாததால், 15 சதவிகிதமாக சந்தை, 8 சதவிகிதமாகச் சரிந்தது. இந்த நிலையில், ஹரிஷ் மன்வானி (Harsh Manwani) என்பவர் ஹிந்துஸ்தான் லீவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். நிஹார் பிராண்டை விற்கலாம் என அவர் முடிவெடுக்க, நிஹார் பிராண்டை வாங்கலாம் என மாரிகோ இயக்குநர் குழு முடிவெடுத்தது.

ஹர்ஷ் மாரிவாலா
ஹர்ஷ் மாரிவாலா

நிஹாரை வாங்கிய மாரிகோ...

ஆனால், டாபர், இமாமி, கோத்ரெஜ் உள்ளிட்ட சில நிறுவனங்களும் போட்டியில் இருந்தன. ரூ.170 கோடிக்கு மேல் யாருக்கு முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதுதான் முதலீட்டு வல்லுநர்கள் மதிப்பீடு செய்தனர். ஆனால், மாரிகோ ரூ. 216 கோடி அளவுக்கு ஏலம் கோரியது. நிஹாரை கையகப்படுத்தியது மாரிகோ.

ஆறு ஆண்டுக் கால யுத்தம் 2006-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இப்படித் திருப்புமுனை கண்ட மாரிகோ இன்றைக்கும் கொடிகட்டிப் பறக்கிறது!

அடுத்த வாரம் டைட்டன் நிறுவனத்தின் திருப்புமுனை வரலாற்றைச் சொல்கிறேன்.
திருப்புமுனை தொடரும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism