Published:Updated:

இந்தியப் பங்குச் சந்தையை ஆட்டுவித்த `இமயமலை சாமியார்' - NSE-யில் ஊழல் நடந்தது எப்படி?

என்.எஸ்.இ

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக சித்ரா ஆனபிறகு, தான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதற்கு `ஆமாம் சாமி’ போடுகிறவர்களை மட்டுமே பதவியில் நியமித்தார்!

இந்தியப் பங்குச் சந்தையை ஆட்டுவித்த `இமயமலை சாமியார்' - NSE-யில் ஊழல் நடந்தது எப்படி?

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக சித்ரா ஆனபிறகு, தான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதற்கு `ஆமாம் சாமி’ போடுகிறவர்களை மட்டுமே பதவியில் நியமித்தார்!

Published:Updated:
என்.எஸ்.இ

என்.எஸ்.இ என சுருக்கமாக அழைக்கப்படுகிற தேசிய பங்குச் சந்தையின் சி.இ.ஓ-வாக இருந்து, ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியவர் சித்ரா ராமகிருஷ்ணா. என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக இருந்தபோது, அவர் செய்த அட்டூழியங்களை செபி இப்போது தெளிவாக விசாரித்து வெளியிட்டிருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போது மிகப்பெரும் பதவியில் இருப்பவர்கள் இவ்வளவு புத்தி கெட்டு நடப்பார்களா, இவ்வளவு பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருப்பார்களா என வியக்க வைக்கிறது. அப்படி அவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

பி.எஸ்.இ-க்குப் போட்டியாக வந்த சந்தை 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியப் பங்குச் சந்தையில் மும்பை பங்குச் சந்தை என்கிற ஒரே ஒரு எக்ஸ்சேஞ்ச் மட்டுமே இருந்தது. இதற்கு மாற்றாக ஒரு எக்ஸ்சேஞ்ச் ஒன்றை மத்திய அரசாங்கம் உருவாக்க நினைக்க, என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது. எஸ்.பி.ஓ வங்கி உட்பட பல நிறுவனங்கள் கூட்டாக இணைந்து என்.எஸ்.இ உருவாக்கப்பட்டதே தவிர, இது ஓர் அரசு நிறுவனம் அல்ல.

இந்த நிறுவனத்தின் ஆரம்ப காலம் முதலே நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார் சித்ரா ராமகிருஷ்ணா. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ரவி நாராயண் ஆனபோது, சித்ராவின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. ரவி நாராயண் பதவிக்காலம் முடிந்தபோது, என்.எஸ்.இ-யின் அடுத்த சி.இ.ஓ சித்ராதான் என்கிற நிலையை உருவாக்கினார். அவர் திட்டமிட்டபடியே ரவிக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு வந்தார் சித்ரா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இமயமலை சாமியாரின் ஆலோசனை

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக சித்ரா ஆனபிறகு, தான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதற்கு `ஆமாம் சாமி’ போடுகிறவர்களை மட்டுமே பதவியில் நியமித்தார். தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனையில் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

Stock Market
Stock Market
Photo by Nick Chong on Unsplash

இந்த இமயமலை சாமியாரின் தொடர்பு சித்ராவுக்கு எப்படி ஏற்பட்டது தெரியவில்லை. ஆனால், என்.எஸ்.இ. தொடர்பான எல்லா விஷயங்களையும் இந்த சாமியாருடன் பகிர்ந்திருக்கிறார் சித்ரா. என்.எஸ்.இ பேலன்ஸ் ஷீட், டிவிடெண்ட் ரேஷியோ, என்.எஸ்.இ-யின் அடுத்த திட்டம் என வேறு யாருக்கும் தெரியாத தகவல்களை அந்தச் சாமியாரிடம் பகிர்ந்திருக்கிறார் சித்ரா.

`சிரோன்மணி’ என்று சித்ரா இந்த சாமியாரை அழைக்கிறார். இவரை சித்ரா ஒருமுறை சந்தித்ததில்லையாம். ஆனால், 1996 முதல் இந்த இருவருக்கும் கருத்துப் பரிவர்த்தனை இருந்திருக்கிறது. என்.எஸ்.இ தொடர்பாக ஏதாவது முடிவு எடுக்க வேண்டுமெனில், இந்த இமயமலை சாமியாருக்கு சித்ரா இ-மெயில் அனுப்ப, அவரும் இ-மெயில் மூலமே பதில் அளிப்பாராம். இந்த இருவருக்கும் நடந்த பல நூறு இ-மெயில்களைத் தேடிப் பிடித்து ஆய்வு செய்த செபி, இப்போது அது பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனந்த் சுப்பிரமணியனின் நியமனம்!

2013-ம் ஆண்டு என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் சீப் ஸ்ட்ராட்டஜிக் அட்வைசராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமனம் செய்தார் சித்ரா. இவரை இந்தப் பதவியில் நியமிக்கும்படி, இமயமலை சாமியாரிடமிருந்து ஆலோசனை வர, சித்ராவும் அப்படியே செய்திருக்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது பற்றி என்.எஸ்.இ-யின் பங்குதாரர்கள் யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால், அவர்கள் அமைதி காத்தனர்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)

பால்மர் லாறி என்கிற நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆனந்த் சுப்பிரமணியனை 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலைக்குச் சேர்த்து, 1.68 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் தரத் தொடங்கினார் சித்ரா. அடுத்த ஆண்டே அதாவது, 2014 மார்ச்சில் அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்று சொல்லி அவருக்கு 20% சம்பள உயர்வு தந்தார். இதனால் அவருடைய சம்பளம் ரூ.2.01 கோடியாக உயர்ந்தது. அது முடிந்து ஐந்து வாரம்கூட முடியவில்லை. மீண்டும் 15% அவருக்கு சம்பள உயர்வு போடப்பட்டது. இதனால் அவருடைய சம்பளம் ரூ.2.31 கோடியாக உயர்ந்தது.

2015-ம் ஆண்டு ஆனந்த சுப்பிரமணியன் வாங்கிய ஆண்டு சம்பளம் ரூ.5 கோடியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், உலகின் எந்த நாட்டு விமானத்திலும் முதல் வகுப்பில் அவர் பயணம் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. என்.எஸ்.இ.யின் மற்ற ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஐந்து நாள்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்கிற விதி இருந்தபோது, ஆனந்த் சுப்பிரமணியன் மட்டும் வாரத்துக்கு மூன்று நாள் வந்து வேலை பார்த்தால் போதும், அதையும் அவர் இஷ்டப்படி வந்துசெல்லலாம் என்கிற அளவுக்கு பல சலுகைகளைத் தந்தார் சித்ரா ராமகிருஷ்ணா.

கோ-லொகேஷன் ஊழல்

தேசிய பங்குச் சந்தையை இப்படி தன் இஷ்டத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா நடத்திக்கொண்டிருந்தபோது, கோ-லொகேஷேன் தொடர்பாக மிகப் பெரும் ஊழலையும் செய்தார். கோ-லோகேஷன் என்பது பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு முன்பே குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சில விநாடிகளுக்கு அளிப்பது. வர்த்தகம் தொடர்பான தகவல்கள் முன்பே கிடைப்பதால், இந்த நிறுவனங்கள் எக்கச்சக்கமாகப் பங்குகளை வாங்கியும் பல கோடிகளை லாபம் கண்டன. இந்த நிறுவனங்களுக்கு இப்படியொரு சலுகை அளிப்பதன்மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்த கோ-லோகேஷன் விவகாரம் பற்றி மும்பையின் பிரபல பத்திரிகையாளர் சுசிதா தலாலுக்குத் தெரியவர, அவர் இது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணானிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, வசமாக மாட்டினார். இதற்கு மேலும் பதவியில் இருந்தால், கையும் களவுமாகப் பிடிபட்டு சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பதை முன்பே புரிந்துகொண்ட சித்ரா ராமகிருஷ்ணா, `தனிப்பட்ட காரணங்களுக்காக’ என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, விலகினார்.

கோ-லொகேஷன்
கோ-லொகேஷன்

ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவராக இருந்த சாந்தா கோச்சர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரி, சித்ரா ராமகிருஷ்ணா விசாரிக்கப்படவில்லை. அப்படியொரு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், இன்னும் என்னென்ன பூதங்கள் எல்லாம் கிளம்புமோ தெரியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism