Published:Updated:

வருமானத்துக்குப் பிரச்னையே இல்லை! - தோனிக்குள் ஒரு பிசினஸ்மேன்

தோனி
தோனி

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தன்னுடைய ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலைச் செய்வதிலும் தோனி அதிரடியாகச் செயல்பட்டிருக்கிறார்.

ஏர்செல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் சங்கரநாராயணன். ஏர்செல் நிறுவனத்தின் தூதுவராக தோனி சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். தோனி குறித்து சங்கரநாராயணன் சொன்னதாவது...

``தோனியிடம் இருக்கும் பிசினஸ்மேனைப் பார்த்து நான் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ஏஜென்சி இருக்கும். அந்த ஏஜென்சி அந்த வீரரின் பிராண்டை கட்டமைக்கும். ஆனால், தோனி என்னும் பிராண்டை தோனியே கட்டமைத்தார். எம்.பி.ஏ படிக்காமலே அவருக்கு நிர்வாகத் திறன் நிறைய இருந்தது.

நான் ஏர்செல்லில் இருந்தபோது ஒரு ஆஃபரை வெளியிட்டோம். `150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுங்கள். அன்றைய தினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எவ்வளவு ரன் எடுக்கிறதோ அவ்வளவு ரூபாய் டாக் டைம் உங்களுக்குக் கிடைக்கும்' என்று தோனியை வைத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டோம்.

``என்ன இப்படி அறிவிக்கிறீர்கள். ஒருவேளை நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால் உங்களுக்கு நஷ்டம் வராதா?" எனத் தோனி என்னிடம் கேட்டார். அவர் கேட்ட கேள்வி எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவருக்குள் இருக்கும் பிசினஸ்மேனைப் பார்த்து வியந்துபோனேன்'' என்று சொல்லியுள்ளார்.

* கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தன்னுடைய ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலைச் செய்வதிலும் தோனி அதிரடியாகச் செயல்பட்டிருக்கிறார்.

பொதுவாக, விளையாட்டு வீரர்கள் பிரபலமாக இருக்கும்போது நிறைய சம்பாதித்தாலும், அந்தப் பணம் அனைத்தையும் செலவு செய்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம், பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். விளையாட்டின் மூலம் பெரும் பணத்தைச் சம்பாதித்தார் மைக் டைசன், 2003-ம் ஆண்டில், தான் திவாலாகிவிட்டதாக அறிவித்தார். இதுபோல, 130 மில்லியன் டாலரைச் சம்பாதித்த போரிஸ் பெக்கர் கடந்த ஜூலையில் மஞ்சக் கடுதாசி கொடுத்தார்.

இதற்கு அடிப்படையான காரணம், விளையாட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறுகிய காலத்துக்கு மட்டுமே என்னும் உண்மை புரியாததால்தான். செஸ் உள்ளிட்ட சில விளையாட்டுகளை தவிர, பெரும்பாலான விளையாட்டுகளில் பரபரப்பாக இருக்கும் காலம் என்பது 15 வருடங்கள்தான். இந்தக் காலத்தில் சம்பாதிக்கும் தொகையை வைத்துதான் அவருடைய மீதமுள்ள காலத்தையும் ஓட்ட வேண்டும்.

ஆனால், தோனி தன்னுடைய 39-வது வயதில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருக்கு வருமானம் எப்படி வரும் என்ற பிரச்னையே இல்லை. காரணம், இதர தொழில்களில் அவர் தாராளமாக முதலீடு செய்து வைத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் முதல் நடப்பு செப்டம்பர் வரையிலான காலத்தில் பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இருந்தாலும் 2019-ம் ஆண்டில் கிரிக்கெட் அல்லாத அவரது வருமானம் ரூ.135 கோடி. கடந்த ஆண்டு விராட் கோலி 43 பிராண்டுகளில் தூதுவராக இருந்தார். ஆனால், தோனியோ 44 பிராண்டுகளுக்குத் தூதுவராக இருந்திருக்கிறார்.

தோனி எந்தெந்தத் தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான், அவர் கவலைப்படாமல் ஓய்வை அறிவித்ததன் ரகசியம் புரியும்... - முழுமையாக வாசிக்க கிளிக் செய்க - https://bit.ly/32mldKz

39 வயதில் ஓய்வை அறிவித்த தோனி! - எப்படித் திட்டமிட்டார்? https://bit.ly/32mldKz

தோனி
தோனி

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு