Published:Updated:

IPL வருமானம் - BCCI அரசுக்கு எத்தனை சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்? | Doubt of common man

Doubt of common man

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரசிகர்களின் மாபெரும் ஆதரவால் உலகின் மிகப்பெரிய டி20 தொடராக உயர்ந்து நிற்கிறது ஐ.பி.எல்.

IPL வருமானம் - BCCI அரசுக்கு எத்தனை சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்? | Doubt of common man

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரசிகர்களின் மாபெரும் ஆதரவால் உலகின் மிகப்பெரிய டி20 தொடராக உயர்ந்து நிற்கிறது ஐ.பி.எல்.

Published:Updated:
Doubt of common man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் பாசிக் என்கிற வாசகர் IPL மூலம் பிசிசிஐ ஈட்டும் வருமானத்தில் எத்தனை சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (BCCI) நடத்தப்படும் ஒரு டி20 கிரிக்கெட் தொடர். 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரசிகர்களின் மாபெரும் ஆதரவால் உலகின் மிகப்பெரிய டி20 தொடராக உயர்ந்து நிற்கிறது ஐ.பி.எல். இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவிலும் இந்த போட்டியைக் காணும் ரசிகர்கள் ஏராளம். இதுவரை எட்டு அணிகள் பங்கேற்று வந்த நிலையில் இவ்வருடம் கூடுதலாக இரு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து அணிகளுடன் தற்போதைய தொடர் நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டின்படி ஐ.பி.எல் தொடரின் மொத்த பிராண்ட் வேல்யூ ரூ. 47,500 கோடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐ.பி.எல் மூலம் பல்லாயிரம் கோடி வருமானத்தை ஈட்டி வரும் பிசிசிஐ அரசுக்கு கட்ட வேண்டிய வரி விவரங்கள் பற்றி ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜூ விளக்கமளிக்கிறார்.

IPL 2022
IPL 2022

"ஒரு கிரிக்கெட் வீரருக்குத் தொழிலே கிரிக்கெட் விளையாடுவதுதான். எனவே அவருக்கு சம்பளமாக கிடைக்கும் தொகையில் இருந்து அவர் வரி கட்டியாக வேண்டும். ஆனால் பிசிசிஐ என்பது ஒரு தொண்டு நிறுவனம் (charitable organization). எனவே வரி செலுத்துவதிலிருந்து அந்நிறுவனத்திற்கு வருமான விலக்கு உண்டு. அவர்கள் ஈட்டும் பணத்தை வெவ்வேறு தொண்டு பணிகளுக்கு செலவிடுவதாலேயே இந்த வரி விலக்கு. ஒருவகை தொண்டு பணியின் கீழேதான் விளையாட்டும் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பான பல்வேறு விவாதங்களும் ஏற்படாமல் இல்லை.‌ கிரிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிறுவனம் ஏன் வரி செலுத்த கூடாது என கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டன. அக்கோரிக்கை நீதிமன்றம் வரை எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு பிசிசிஐ தொண்டு நிறுவனம் என பதிவு செய்யப்பட்டிருப்பதால் அது அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை என்றே நீதிமன்றமும் பதிலளித்தது. ஐ.பி.எல் மூலம் ஈட்டப்படும் அனைத்து வருமானமும் கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவே செலவிடப்படுகிறது. அதனால் பிசிசிஐ ஐபிஎல் வருமானத்திலிருந்து அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை." என்று கூறினார் அவர்.


இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism