Published:Updated:

ரூ.13.50 லட்சம் கோடி... முகேஷ் அம்பானியை உலகின் 4-வது பணக்காரர் ஆக்கிய உத்தி!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

``கடன் மற்றும் பங்குகள் மூலம் நிதி திரட்டுவது என இரண்டையும் செய்தால்தான் வெற்றி அடைய முடியும். ஆனால், ஜியோவை உருவாக்க வேறு வழியைக் கையாண்டார் முகேஷ்"

நம்மூரில் டி.சி.எஸ் நிறுவனம் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறது நூற்றாண்டு பாரம்பர்யத்துடன் விளங்கும் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான டி.சி.எஸ் நிறுவனம்.

சந்தை மதிப்பின் (Market capitalisation) அடிப்படையில் இந்த நிறுவனத்துடன் மோதுகிற பலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இருந்தது. ஓராண்டுக்கு முன்பு வரை ரிலையன்ஸ் நிறுவனமும் டி.சி.எஸ் நிறுவனமும் முதலாவது இடத்துக்கு போட்டி போட்டுவந்தன. ஒரு வாரம் டி.சி.எஸ் முதல் இடத்திலும், அடுத்த வாரம் ரிலையன்ஸ் முதலிடத்திலும் இருக்கும் அளவுக்குக் கடும் போட்டி நிலவியது.

ஆனால், இன்றைக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் உச்சத்தில் இருக்கிறது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இதன் சந்தை மதிப்பு ரூ.13.50 லட்சம் கோடிக்குமேல். ஆனால், டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்போ ரூ.8.5 லட்சம் கோடிக்குக்கீழ். இனிவரும் காலத்தில் டி.சி.எஸ் நிறுவனத்தால் ரிலையன்ஸைத் தாண்டிச் செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்.

Jio Fiber
Jio Fiber

முகேஷ் அம்பானியின் புதிய உத்தி குறித்து Again Drinks இணை நிறுவனர் கே.வைத்தீஸ்வரன் கூறும்போது, ``சிறப்பான உத்தியை உருவாக்கி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட நிறுவனத்தின் கடன் அதிகமாக இருக்கிறதே, இந்தக் கடனை எப்படி அடைக்கப்போகிறார், ஜியோ வெற்றி அடையுமா என்று யோசித்திருக்கிறேன். காரணம், ரிலையன்ஸ் பிசினஸ் டு பிசினஸ் பிரிவில் பெருவெற்றி அடைந்த நிறுவனம்.

ஆனால், பிசினஸ் டு கஸ்டமர் என்பது சவாலானது, தவிர ஏற்கெனவே ஏர்டெல் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. இந்த நிலையில் சந்தையைக் கைப்பற்ற முடியுமா என யோசித்திருக்கிறேன். இந்த யோசனைகளை எல்லாம் பொய்யாக்கிக் காட்டியிருக்கிறார் முகேஷ்.

டெக்னாலஜி நிறுவனங்கள் பங்குகளை விற்று நிதி திரட்டும். உற்பத்தி நிறுவனங்கள் சொத்துகளை அடமானமாக வைத்து நிதி திரட்டும். கடன் மற்றும் பங்குகள் மூலம் நிதி திரட்டுவது என இரண்டையும் செய்தால்தான் வெற்றி அடைய முடியும். ஆனால், ஜியோவை உருவாக்க வேறு வழியைக் கையாண்டார் முகேஷ். வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பெட்ரோகெமிக்கல் தொழிலை அடிப்படையாக வைத்து கடன் வாங்கினார். நிலையான வருமானம் இருப்பதால், அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு புதிய தொழிலை உருவாக்கி, அதற்கான சந்தையையும் வெற்றிகரமாக உருவாக்கி, அதை அடிப்படையாகக் கொண்டு பங்குகளை விற்றிருக்கிறார்.

ஏற்கெனவே, தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் பங்கு மூலம் நிதி திரட்டுவதைவிட கடன் வாங்கி தொழில் வெற்றி அடைந்த பிறகு பங்குகளை விற்கலாம் என்ற அருமையான பாடத்தையும் தொழில் உத்தியையும் சொல்லித் தந்திருக்கிறார் முகேஷ்.'' என்றார்.

- ரிலையன்ஸின் மிகப்பெரிய மதிப்புப் பாய்ச்சலுக்குக் காரணம், அந்த நிறுவனம் சமீபத்தில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து திரட்டிய முதலீடுகள்தான். உலகமே முடங்கிக் கிடந்த இந்த கோவிட்-19 காலத்தில் காதும் காதும் வைத்த மாதிரி பேசி, கச்சிதமாகக் காய்களை நகர்த்தி, ரிலையன்ஸ் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியதுடன், இந்தியாவின் நான்காவது பெரிய பணக்காரர் என்ற பெருமையையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்று உயர உயரப் பறந்துகொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி.

இந்த மாற்றத்துக்கான விதையை அவர் இப்போது விதைக்கவில்லை; பல ஆண்டுகளுக்கு முன்பே விதைத்துவிட்டார். என்ன செய்தார் முகேஷ், அப்பா திருபாய் அம்பானி கொடுத்த சொத்தை பல நூறு மடங்குக்கு அவரால் எப்படிப் பெருக்க முடிந்தது? -

நாணயம் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > க்ளிக் செய்க - https://bit.ly/313Col1 உயர உயரப் பறக்கும் முகேஷ் அம்பானி..! - உலகின் 4-வது பணக்காரர் ஆனது எப்படி? https://bit.ly/313Col1

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு