Published:Updated:

செப் 30-க்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு என்ன பாதிப்பு... சிறப்பு கவுன்டர்கள் தரும் விளக்கம் என்ன?

சொத்து வரி

சொத்து வரி தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட சொத்து உரிமையாளர்கள் 5.75 லட்சம் பேர் தங்களது சொத்து வரியைச் செலுத்திவிட்டனர். இன்னும் சரிபாதி சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியைச் செலுத்தவில்லை. சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி கெடு தேதி 2022 செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செப் 30-க்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு என்ன பாதிப்பு... சிறப்பு கவுன்டர்கள் தரும் விளக்கம் என்ன?

சொத்து வரி தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட சொத்து உரிமையாளர்கள் 5.75 லட்சம் பேர் தங்களது சொத்து வரியைச் செலுத்திவிட்டனர். இன்னும் சரிபாதி சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியைச் செலுத்தவில்லை. சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி கெடு தேதி 2022 செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சொத்து வரி

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் என அனைத்து பகுதிகளுக்குமான சொத்து வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின் படி சொத்துகளின் அரையாண்டு சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அந்தந்த ஏரியாவுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டிருந்தது.

மொத்தம் 11,58,079 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரி சீராய்வு தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கும்படியும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. சொத்து வரி உயர்த்தப்பட்டது மக்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சிலர் இது தொடர்பாக வழக்குகளையும் தொடுத்துள்ளனர்.

வரி வசூலர் ராம்குமார்
வரி வசூலர் ராம்குமார்

மேலும் தபால் துறையினரின் உதவியுடன் சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகிறது. சொத்து வரி தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட சொத்து உரிமையாளர்கள் 5.75 லட்சம் பேர் தங்களது சொத்துவரியைச் செலுத்திவிட்டனர். இன்னும் சரிபாதி சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியைச் செலுத்தவில்லை. சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி கெடு தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரவும், சொத்து வரி வசூலிக்கவும் சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கவுன்டர்களில் செயல்பாடு என்னவாக இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய கிளம்பினோம். பேசின் பிரிட்ஜ் மண்டலத்தில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் சொத்து வரி தொடர்பான சேவைகளுக்குத் தனியாக ராம்குமார் என்ற அதிகாரியை நியமித்திருந்தனர். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சொத்து வரி சீராய்வு தொடர்பான சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம், எப்படி சொத்து வரியைச் செலுத்துவது போன்ற பல சந்தேகங்கள், கேள்விகளுடன் மக்கள் அணுகுகிறார்கள். அதற்கான பதில்களை அவர்களுக்கு வழங்கிவருகிறோம். இன்று மட்டுமே நேரில் இந்த கவுன்டரில் வந்து தகவல் விசாரித்தவர்கள் ரூ.5 லட்சத்துக்கும் மேலாக சொத்து வரி செலுத்தியிருக்கிறார்கள். சொத்து வரி உயர்வு தொடர்பாக அனைவருக்கும் அதிருப்தி இருந்தாலும் இது தவிர்க்க முடியாதது என்பதால் சொத்து வரியைச் செலுத்திவிடுகிறார்கள். வரி செலுத்தினால்தானே அரசுக்கும் வருவாய். அதை வைத்துதானே செலவினங்களைத் திட்டமிட முடியும்" என்றார்.

சுமித்
சுமித்

சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்காக அதிகாரியைச் சந்திக்க வந்திருந்தவர்களிடமும் பேசினோம். நம்மிடம் பேசிய சுமித் கூறியதாவது, ``சொத்து வரி செலுத்துவது கடமை என்பதை உணர்ந்து தவறாமல் வரி செலுத்திவருகிறோம். ஆனால், வரி செலுத்துபவர்களைத்தான் மேலும் மேலும் அரசு நெருக்குகிறது. கடந்த ஆண்டு இருந்த வரியைக் காட்டிலும் இப்போது சீராய்வு செய்யப்பட்ட பிறகான வரி இரண்டு மடங்காக இருக்கிறது. இந்த வரி உயர்வு கணக்கீடு எந்த அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் கேட்க வந்திருந்தேன்.

அவர்கள் பொதுவாகக் கணக்கிடப்பட்ட நடைமுறையை
விளக்கினார்கள். ஆனால், அது எனக்கு திருப்திகரமாக இல்லை. திடீரென்று இரண்டு மடங்கு மூன்று மடங்கு என வரி உயர்த்தப்பட்டதால் எங்கிருந்து அவ்வளவு தொகையைச் செலுத்துவது என்ற எண்ணம் வயிற்றில் புளியைக் கரைத்தது. இருந்தாலும் வேறு வழியில்லை. வரியைச் செலுத்தியாக வேண்டும்" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

காரல் என்பவர் நம்மிடம் பேசியபோது, ``சொத்து வரியை ரொக்கமாகச் செலுத்த முடியுமா என்று கேட்க வந்தேன். ஆனால், ரொக்கமாகச் செலுத்த முடியாது என்றும் சொத்து வரியை ஆன்லைனில் செலுத்தலாம் இல்லாவிட்டால் நேரில் செலுத்துபவர்கள் காசோலை (cheque) அல்லது வரைவோலை (Demand Draft) மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் கூறிவிட்டனர்" என்றார்.

காரல்
காரல்

ஏன் ரொக்கமாக வரி வாங்குவதில்லை என்று வரி வசூல் செய்யும் அதிகாரி ராம்குமாரிடம் கேட்டோம். ``ரொக்கமாக வாங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. முன்பே கூறியதுபோல இன்று மட்டுமே ரூ.5 லட்சத்துக்கும் மேல் வரி செலுத்தியுள்ளனர். இவ்வளவு தொகையை ரொக்கமாக நிர்வகிப்பது சிரமம், பாதுகாப்பும் இல்லை. எனவேதான் காசோலை (cheque) அல்லது வரைவோலை (Demand Draft) மூலமாக வசூலிக்கிறோம்.

``The Revenue Officer, Corporation of Chennai” என்கிற பெயரில் காசோலை, வரைவோலை இருக்க வேண்டும். கிரெடிட், டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம். வேறு ஏதேனும் குறைகள், புகார்கள் இருப்பின் 1913 என்ற மாநகராட்சியின் எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்" என்றார்.

மேலும் செப்டம்பர் 30-க்குள் வரி செலுத்தாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள் என்று கேட்டோம். ``இப்போதைக்கு அபராதம், வட்டி போன்றவை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்படும் என்பது போகப்போகத்தான் தெரியும்'' என்றார் ராம்குமார்.

சொத்து வரி
சொத்து வரி

ஆனாலும், சொத்து வரி சீராய்வைப் பொறுத்தவரை `ஆட்சேபனை இருப்பவர்கள் தெரிவிக்கலாம்' என்று கூறப்பட்டதும், தற்போது அமைக்கப்பட்டுள்ள 'தனி கவுன்டர்களும்' வெறும் கண்துடைப்புதான். 'ஏன் இவ்வளவு அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டது?' என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை என்ற குமுறல்தான் பெரும்பாலானோரிடம் இருந்து வெளிப்பட்டது என்பதுதான் உண்மையான கள நிலவரம்.