Published:Updated:

`ரிசர்வ் வங்கியிடம் இனி எளிதில் புகார் அளிக்கலாம்!' - மோடி தொடங்கி வைத்த திட்டங்களின் சிறப்பு என்ன?

பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு முக்கியமான திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இது போன்ற திட்டங்கள் ஒரு சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே உள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

முதல் திட்டத்தின்படி, இனி முதலீட்டாளர்கள் டிஜிட்டல் முறையில் இணையவழியில் கடன் பத்திரங்களை சுலபமாக வாங்கவும் விற்கவும் முடியும். முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கினை இணைப்பதன் மூலம் இதில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் சுலபமான முறையில் அரசு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

Bank (Representational Image)
Bank (Representational Image)

மற்றொரு திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒன்றிணைந்த குறைதீர்ப்புத் திட்டம் (Integrated Ombudsman Scheme). இந்தத் திட்டத்தின் வாயிலாக சாமானிய மக்கள் மூன்று விதமான புகார்களை ரிசர்வ் வங்கியிடம் சுலபமாக தெரிவிக்க முடியும்.

- வங்கிகள் தொடர்பான புகார்கள்,

- வங்கிகள் அல்லாத பிற நிதித் துறை சம்பந்தமான நிறுவனங்கள் பற்றிய புகார்கள்,

- டிஜிட்டல் டிரான்ஷாக்ஷன் தொடர்பான புகார்கள் ஆகிய மூன்று வரையறையின்கீழ் பயனாளர்கள் புகார் தெரிவிக்க முடியும்.

இந்தப் புகாரினை இணையவழி மூலமாகவோ அல்லது பிரத்யேக டோல் ஃப்ரீ நம்பர் மூலமாகவோ தெரிவிக்க முடியும். புகார் தொடர்பான ஆவணங்களை இணையவெளியில் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. தெரிவித்த புகாரின் தற்போதைய நிலையை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

ஒரே நாடு, நிதி தொடர்பான அனைத்து புகார்களுக்கும் ஒரே திட்டம் என்பதை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிதி தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது.

Rupees
Rupees
Photo by Syed Hussaini on Unsplash
பண மதிப்பு நீக்கம்: 5 ஆண்டுகள் நிறைவு; மோடி சொன்ன இந்த 4 நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றனவா?

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான புகார்களை தற்போது மாநிலங்களில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் மூலம் பெற்று வருகிறது. சென்ற ஆண்டில் பல்வேறு வாடிக்கையாளர்களின் 3.3 லட்சம் புகார்களை ரிசர்வ் வங்கி விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி புகார் தெரிவிக்கும் முறையினை மேலும் சுலபமாக ஆக்கும். வாடிக்கையாளர்கள் எளிமையாக இந்த வசதி மூலம் ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரு திட்டங்களினால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா என்று சில நிபுணர்களிடம் கேட்டோம்.

``நிச்சயமாக நன்மை தரும். அரசு பாண்ட் பத்திரங்களில் தற்போது முதலீடு செய்ய வேண்டும் எனில், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் இருந்தால்தான் முடியும். ஆனால், தற்போது ரூ.10,000 என்கிற அளவில் இருந்தாலே முதலீடு செய்ய முடியும். இதனால் இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை பாதுகாப்பான முதலீடான அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, ஒரளவு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும்.

Investment
Investment
Image by Charles Thompson from Pixabay
மோடி தலைமையில் நடந்த முக்கிய கூட்டம்; பிட்காயினுக்கு வருகிறதா தடை?

அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களை இனி எளிதாக ஆர்.பி.ஐ.யின் கவனத்துக்குக் கொண்டு செல்லமுடியும் என்பதால், இன்னும் அதிகமான மக்கள் வங்கி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்திப் பயன் பெறமுடியும். அந்த வகையில், பிரதமர் தொடங்கியுள்ள இந்த இரு திட்டங்களையுமே வரவேற்கலாம்’’ என்கிறார்கள்.

மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு