Published:Updated:

பொருளாதார நெருக்கடியிலும் பங்குச் சந்தை வீறுநடை போடுவது எப்படி?

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரும் புள்ளிவிவரங்கள், இந்தியாவின் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் மிகவும் ஆழமானவை என்பதையே காட்டுகின்றன.

நடப்பு நிதியாண்டின் (2019-20), முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐந்து சதவிகிதமாகக் குறைந்திருப்பதாகக் கடந்த 01.08.2019 அன்று தகவல் வெளியானது. இது, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களை வெகுவாக பாதித்தது. அதன் பிறகு, நம் பொருளாதாரத்தின் போக்கு குறித்து தொடர்ச்சியாக வெளிவந்த புள்ளிவிவரங்கள் உற்சாகம் தருபவையாக இல்லை. ஆனால், கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகள் புதிய உச்சங்களை எட்டி வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை மீண்டும் முற்றுகையிடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த தடாலடி ஏற்றம், பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்காகக் காத்திருந்த பல முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தையும் ஆச்சர்யத்தையும் ஒருங்கே உண்டாக்கியிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரும் புள்ளிவிவரங்கள், இந்தியாவின் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் மிகவும் ஆழமானவை என்பதையே காட்டுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக செப்டம்பர் (2019) மாதத்துக்கான தொழில் உற்பத்தி (IIP) -4.3% என்ற அளவுக்குச் சரிந்திருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் (NSO) கடந்த 11.11.2019-ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, செப்டம்பரில் அடிப்படைக் கட்டுமானத் துறை -5.2% அளவுக்கு வீழ்ச்சியடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. வளர்ச்சியில் குறைபாடு என்பது மாறிப்போய், சரிவு அல்லது வீழ்ச்சி என்ற நிலையை நம் பொருளாதாரம் எட்டியிருப்பது கவலையளிக்கிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

மேலும், கடந்த மே 2019-க்குப் பிறகான மாதாந்தர ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ச்சியாக ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக இருக்கும் நிலையில் 'நேரடி வரி வருவாயும், பட்ஜெட் எதிர்பார்ப்பும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே இருக்கும்' என்ற ஊகங்கள் வெளியாகிவருகின்றன. வரி வருவாய் வீழ்ச்சி அரசின் நலத்திட்டச் செலவினங்களைப் பாதிப்பதுடன், இந்திய அரசின் சர்வதேசத் தர நிர்ணயத்தையும் பாதிக்கிறது. > எப்படி இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்? விரிவாக வாசிக்க > https://www.vikatan.com/news/share-market/reasons-for-the-crisis-in-the-economy-but-raise-in-share-market

பொருளாதாரத்தின் பல துறைகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்துவரும்போது, பங்குச் சந்தை முக்கியக் குறியீடுகள் மட்டும் வீறுநடை போடுவதற்கான காரணங்கள்:

1. கார்ப்பரேட் வரி விகிதம் தடாலடியாகக் குறைக்கப்பட்டது!

2. சாதகமான சர்வதேச நிலவரங்கள்

3. வட்டி விகிதம் குறைப்பு

4. ஆங்காங்கே பச்சை முளைகள்

5. பெரு நிறுவனங்களின் ஆதிக்கம்

இந்த ஐந்து காரணங்கள் குறித்து விரிவாக அறிய > https://www.vikatan.com/news/share-market/reasons-for-the-crisis-in-the-economy-but-raise-in-share-market

'உலகளாவிய பங்குச் சந்தையின் தற்போதைய தொடர்ச்சியான உயர்வுக்கு முக்கியக் காரணம், சில குறிப்பிட்ட உயர்தர நிறுவனங்களின் பங்குகள்தான்' என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இந்த விஷயத்தில் இந்தியப் பங்குச் சந்தையும் விதிவிலக்கல்ல.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அமெரிக்காவில் ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை குறைவாக இருப்பதாக வெளிவந்த தகவல்கள், உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களைப் பெருமளவு தணித்தன. அமெரிக்காவின் முக்கியப் பங்குச் சந்தைக் குறியீடுகளின் வரலாற்று உச்சங்களுக்கு ஃபேஸ்புக், அமேசான், கூகுள், ஆப்பிள் போன்ற சில பெரிய நிறுவனப் பங்குகள் மட்டுமே காரணமாக இருப்பதுபோல நம் பங்குச் சந்தையிலும் ரிலையன்ஸ், ஹெச்.டிஎஃப்.சி பேங்க், டி.சி.எஸ் போன்ற சில நிறுவனங்களே பங்குச் சந்தைக் குறியீடுகளின் அதீத வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. பெருவாரியான சிறிய மற்றும் நடுத்தரப் பங்குகள் தற்போதைய பங்குச் சந்தை ஏற்றத்தில் பங்கு பெறவில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

பொருளாதாரப் புள்ளியியல் விவரங்கள் கடந்தகால நிகழ்வுகளை விருப்பு வெறுப்பில்லாமல் பதிவுசெய்கின்றன. ஆனால், பங்குச் சந்தையோ, முதலீட்டாளர்களின் வருங்காலத்தின் மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நீண்டகால நோக்கில் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின்னரும்கூட உலக அளவில் இந்தியாதான் வெகு வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இந்தியாவில்தான் இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையும் முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது.

- இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > இறங்கும் பொருளாதாரம்... ஏறும் பங்குச் சந்தை... ஐந்து காரணங்கள்! https://www.vikatan.com/news/share-market/reasons-for-the-crisis-in-the-economy-but-raise-in-share-market

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

பின் செல்ல