Published:Updated:

பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24

Stock Market ( Photo by Nick Chong on Unsplash )

ஒரு நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்தபின் அதை எப்போது வாங்குவது, எப்போது விற்பது என்பதில் தவறு செய்தால் எப்பேர்ப்பட்ட நல்ல பங்கும் நஷ்டத்தையே தரும். இந்தத் தவற்றைக் களைய டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவுகிறது.

பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24

ஒரு நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்தபின் அதை எப்போது வாங்குவது, எப்போது விற்பது என்பதில் தவறு செய்தால் எப்பேர்ப்பட்ட நல்ல பங்கும் நஷ்டத்தையே தரும். இந்தத் தவற்றைக் களைய டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவுகிறது.

Published:Updated:
Stock Market ( Photo by Nick Chong on Unsplash )

பொதுவாக, பங்குச் சந்தையில் ஈடுபடுகிறவர்களை முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் என்று இரண்டாகப் பிரிப்பார்கள். முதலீட்டாளர்கள், பங்கு வளர்ந்து மல்டி பேகர் ஆவதை விரும்புகிறவர்கள். அதற்காகப் பல வருடங்கள் அந்தப் பங்கை வைத்திருக்கவும் அவர்கள் தயார். அவர்கள் ஃபண்டமென்டல் அனாலிசிஸை மேற்கொண்டு பங்குகள் வாங்குவது வழக்கம். வர்த்தகர்கள், ஒவ்வொரு வர்த்தகமும் உடனுக்குடனே லாபம் ஈட்டித் தர வேண்டும் என்று எண்ணுகிறவர்கள். அவர்களுக்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவும்.

Stock Exchange (Representational Image)
Stock Exchange (Representational Image)
Courtney Crow/New York Stock Exchange via AP

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் vs. டெக்னிக்கல் அனாலிசிஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் ஒரு புது நாட்டுக்குச் செல்கிறீர்கள்; அங்கு அவர்கள் பாஷை உங்களுக்குப் புரிவதில்லை என்று வைத்துக் கொள்வோம். பகல் முழுதும் வேலை பார்த்து களைத்துப் போய் இரவு உணவை ஆவலுடன் எதிர்பார்த்து ஹோட்டல் சென்றால், எந்த உணவை ஆர்டர் செய்வீர்கள்? பாஷையும் தெரியாது; உணவின் ருசியும் தெரியாது. நீங்கள் ஒவ்வொரு உணவையும் எப்படித் தயாரிக்கிறார்கள், என்னென்ன பொருள்களைச் சேர்க்கிறார்கள் என்று கவனித்து, அவற்றை ஒவ்வொன்றாக ருசி பார்த்து பின் ஆர்டர் செய்யலாம் (ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இதைத்தான் செய்கிறது). அல்லது ஒரு ஓரமாக அமர்ந்து அதிகம் பேர் என்ன ஆர்டர் செய்கிறார்கள் என்று கவனித்து அதையே நீங்களும் ஆர்டர் செய்யலாம். எது எளிது? மற்றவர்களைக் கவனித்து பின்பற்றுவதுதானே? இதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். இங்கு `Trend is your friend.'

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெக்னிக்கல் அனாலிசிஸின் தாரக மந்திரம்

சந்தையைப் பொறுத்தவரை ஆசை மற்றும் பயத்தின் அடிப்படையில்தான் செயல்பாடுகள் நிகழ்கின்றன. சந்தை ஏறும்போது அதீத விலைகளைப் பொருட்படுத்தாது வாங்குவதும், சந்தை இறங்க நேர்ந்தால் வந்த விலைக்கு விற்று வெளியேறுவதும் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒன்று. இப்படி சரித்திரம் திரும்புவதை நுணுக்கமாகக் கவனித்தாலே டிரெண்ட் புலப்பட்டுவிடும் என்பதே டெக்னிக்கல் அனாலிசிஸின் தாரக மந்திரம்.

Stock Market
Stock Market
Photo by Mark Finn on Unsplash

ஆகவே, ஒரு பங்கின் ஒப்பனிங் விலை, அன்றைய அதிகம், குறைவு மற்றும் குளோசிங் விலையை வைத்து மெழுகுவத்திகளை (Candlesticks) உருவாக்கி, அவற்றின் மூலம் ஒரு பேட்டர்ன் உருவாவதைக் கவனிக்கின்றனர் டெக்னிக்கல் அனலிஸ்ட்கள். இந்த சார்ட் பேட்டர்ன்கள், சில இண்டிகேட்டர்கள் (சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ், டிரெண்ட்லைன்ஸ், மூவிங் ஆவரேஜ்), சில வரையறைகள் (டோ தியரி, எலியட் வேவ் தியரி) - இவற்றின் உதவியுடன் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்க டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவுகிறது.

டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவும் இடங்கள்:

பொதுவாக, சந்தை மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் என்று மூன்று விதங்களில் நகரும். தற்போதைய நகர்வை டெக்னிக்கல் அனாலிசிஸ் கணித்துக் கூறும்.

ஃபாரெக்ஸ், பங்குச் சந்தை, கமாடிட்டி போன்ற எல்லா சந்தைகளிலும் இது உதவக்கூடியது.

வெறும் இன்ட்ராடே டிரேடர்களுக்கு மட்டுமே இது உதவும் என்ற எண்ணம் தவறு. ஸ்விங் டிரேடர்ஸ், இன்ட்ராடே டிரேடர்ஸ், ஷார்ட் டெர்ம் டிரேடர்ஸ், லாங் டெர்ம் டிரேடர்ஸ் போன்ற எல்லாவித டிரேடர்களுக்கும் சந்தையின் சைக்காலஜியைக் கணிக்க இது உதவும்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by energepic.com from Pexels

ஒரு நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்தபின் அதை எப்போது வாங்குவது, எப்போது விற்பது என்பதில் தவறு செய்தால் எப்பேர்ப்பட்ட நல்ல பங்கும் நஷ்டத்தையே தரும். இந்தத் தவற்றைக் களைய டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவுகிறது.

எங்கு ஸ்டாப் லாஸ் வைப்பது, எங்கு டார்கெட் வைப்பது போன்ற விவரங்களை அறிய முடிவதால் வர்த்தகம் எளிதாகிறது.

முக்கியமாக ஒரு தொடர் ஏற்றமோ, தொடர் இறக்கமோ மாறப் போகிறது என்பதை டெக்னிக்கல் அனலிசிஸால் முன்கூட்டியே கணிக்க முடியும். 2009-ல் மிகப் பெரிய சந்தை வீழ்ச்சி வரப்போகிறதென்று முதலில் கூறியவர்கள் டெக்னிக்கல் அனலிஸ்ட்டுகள்தான்.

சாமானிய மக்கள் மட்டுமன்றி ஹெட்ஜ் ஃபண்ட்ஸ், இன்வெஸ்ட்மென்ட் பேங்க்ஸ் போன்ற நிறுவனங்களும் அல்கோ டிரேடிங்குக்காக இதைப் பெருமளவில் உபயோகிக்கின்றன.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by Lorenzo from Pexels

இந்த அனலிசஸை உபயோகிக்க சற்று அதிகப் பயிற்சியும், நேரமும் தேவை. இதை உபயோகித்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்பதில்லை. ஆனால், இது நம் வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இது குறித்த புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. நிறைய பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன. சந்தையில் வெற்றிகரமான வர்த்தகர் ஆக விரும்புபவர்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றிய ஆழமான அறிவு பெற இவற்றைப் பயன்படுத்தலாம்.

- இனி அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.