Published:Updated:

கொரோனா அலர்ட்... உங்கள் நிதி நலனைக் காப்பது எப்படி?

உடல்நலத்துக்கு நாம் தரும் அதே கவனத்தை நம் நிதி நலத்துக்கும் தர வேண்டும்.

'கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தும் பாதிப்பு எப்போது சரியாகும்...' என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் ஒரு மாத காலத்தில் இயல்புநிலை திரும்பலாம் அல்லது ஐந்தாறு மாதங்கள்கூட ஆகலாம். இந்த நிலையில், நமது நிதி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும், இப்போதுள்ள நிலையை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கொரோனா நோய் பாதிப்பு எல்லோருக்கும் எளிதில் வந்துவிடக்கூடிய நிலையில், நம்முடைய மற்றும் நமது குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம்மிடம் எவ்வளவுதான் பணமிருந்தாலும், கொரோனா போன்ற கொடிய நோய் ஏதாவது வந்துவிட்டால், அதிலிருந்து நாம் தப்பித்து மீள்வது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, உடல்நலத்தில் அதிக கவனம் கட்டாயம் தேவை.

கொரோனா அலர்ட்... உங்கள் நிதி நலனைக் காப்பது எப்படி?

நிதி ஆரோக்கியம் வேண்டும்!

உடல்நலத்துக்கு நாம் தரும் அதே கவனத்தை நம் நிதி நலத்துக்கும் தர வேண்டும். இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் நமது வருமானம் குறைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, வேலையிழப்பு என்ற பாதிப்பு நம்மைத் தேடி வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இத்தனை காலம் பட்ஜெட் எதுவும் போடாமல் செலவு செய்திருக்கலாம். ஆனால், இனியாவது எதற்கு, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்வது நல்லது. விலை மிகுந்த செல்போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஆடம்பரமான வீட்டு உபயோகப் பொருள்களை இந்த நேரத்தில் வாங்குவது சரியான முடிவாக இருக்காது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2UePWGJ

ஹெல்த் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்!

தொற்றுநோய் அபாயம் நிலவும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும், நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவக் காப்பீடு மிக அவசியம். இந்தக் காலத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால், நாம் சேர்த்த பணத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டியிருக்கும். இப்படி ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால், எல்லோரும் மருத்துவக் காப்பீட்டை எடுத்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதுவரை மருத்துவக் காப்பீடு எடுக்காதவர்கள் இனியாவது எடுப்பது நல்லது!

மருத்துவக் காப்பீடு எடுப்பதுடன், குடும்பப் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸையும் எடுக்க வேண்டும். குடும்பத்துக்கு யார் வருமானம் ஈட்டுகிறார்களோ, அவர்களின் பெயரில் இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்.

கொரோனா அலர்ட்... உங்கள் நிதி நலனைக் காப்பது எப்படி?

அவசியம், அவசரகால நிதி!

பெரும்பாலானவர்கள் அவசரகால நிதியைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. திடீர் வேலையிழப்பு போன்ற நேரங்களில், கையில் நிதி இல்லாமல், கடன் வாங்கிச் சிக்கலில் சிக்கிக்கொள்வதுதான் வாடிக்கை. இனி அப்படியல்லாமல், சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் அவசரகால நிதியைச் சேமித்து வைத்திருக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாத காலத்துக்கு குடும்பச் செலவுக்கான தொகையை, வங்கி ஃபிக்ஸட் டெபசிட்டில் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் வைத்திருப்பது நல்லது. அதேபோல, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுத்து வைத்திருப்பது முக்கியம். திடீர் செலவுகளுக்கு அவசரகால நிதியையும், திடீர் மருத்துவச் செலவுகளுக்கு இந்த பாலிசியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுவரை அவசரகால நிதியை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் இனியாவது அதை உருவாக்கிக்கொள்வது நல்லது. இந்த அவசரகால நிதியில் சுமார் 50 சதவிகிதத் தொகையை, குடும்பத்தின் மாதச் செலவைப்போல் ஆறு முதல் 12 மடங்கு தொகையை எளிதில் பணமாக்கும்விதமாக வங்கி சேமிப்புக் கணக்கு, லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் வைத்துக்கொள்ள வேண்டும். மீதியை ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகளில் வைத்துக்கொள்ளலாம்.

கடன் வேண்டாம்!

இன்றைய நிலையில் கடன் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான இலகுவான சூழல் இப்போது இல்லை.

எந்த நேரத்திலும் நிதி நெருக்கடி நேரலாம் என்ற நிலையில், கடன் வாங்கிச் செலவு செய்வதையோ, கடன் வாங்கி முதலீடு செய்வதையோ செய்ய வேண்டாம். குறிப்பாக, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் பக்கம் போகாமல் இருப்பது நல்லது.

- இத்துடன், அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடு, முதலீட்டின் தரம், இக்கட்டான நேரம்... என்ன முடிவெடுப்பது?, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தலாமா? - இந்தக் கேள்விகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களைப் பெற, நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் எழுதிய நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > கொரோனா... மாற்ற வேண்டிய நிதி வாழ்க்கை! - வழிகாட்டும் ஆலோசனைகள் https://www.vikatan.com/news/investment/how-to-handle-money-during-this-coronavirus-outbreak

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு