Published:Updated:

``இதுல இவ்வளவு லாபம் கிடைக்குமா? முன்னாடியே தெரியாம போச்சே!'' -மதுரையில் முதலீட்டு திருவிழா

நாணயம் விகடன் ஆதித்ய பிர்லா கேபிடல் முதலீட்டு கூட்டம்

நிம்மதியான ஓய்வுக்காலம், பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வெளிநாட்டு சுற்றுலா இப்படியான வாழ்வியல் இலக்குகளை எட்ட முடியும். அதற்கு மாதாந்திர சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. முதலீட்டின் மூலம் இரண்டாவது வருமானத்தை உண்டாக்கிக் கொள்கிற ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

``இதுல இவ்வளவு லாபம் கிடைக்குமா? முன்னாடியே தெரியாம போச்சே!'' -மதுரையில் முதலீட்டு திருவிழா

நிம்மதியான ஓய்வுக்காலம், பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வெளிநாட்டு சுற்றுலா இப்படியான வாழ்வியல் இலக்குகளை எட்ட முடியும். அதற்கு மாதாந்திர சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. முதலீட்டின் மூலம் இரண்டாவது வருமானத்தை உண்டாக்கிக் கொள்கிற ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Published:Updated:
நாணயம் விகடன் ஆதித்ய பிர்லா கேபிடல் முதலீட்டு கூட்டம்

பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வட்டி விகிதமும் உயர்கிறது. இதனால் செலவினங்கள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மறுபக்கம், வருமானம் உயரவே இல்லை. இத்தகைய பொருளாதாரச் சூழலில் எப்படியாவது சேமித்து, முதலீடு செய்து நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கிறது.

வாழ்க்கையை விருப்பப்படி வாழ வேண்டும் எனில், பணம் அவசியம். எனவே, தேவையான அளவுக்குப் பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் மட்டுமே பணத்துக்காக வேலை செய்யக் கூடாது. நம்மிடம் இருக்கும் பணத்தை நமக்காக வேலை செய்ய வைக்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

இதை எப்படிச் செய்வது என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. தங்கம், ரியல் எஸ்டேட் என்று அடுத்தடுத்து வாங்கி, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியாமல் போகிறார்கள் பலர். தவிர, தங்கம் வாங்குவதற்கும், வீடு, மனை வாங்குவதற்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால், குறைந்த முதலீட்டில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் திட்டங்கள் என்ன, இந்தத் திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுவது எப்படி என்பதை சொல்லத்தான் மதுரையில் மாபெரும் முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்தப் போகிறது நாணயம் விகடனும், ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்கிற தலைப்பில் நடக்க இருக்கும் இந்தக் கருத்தரங்கானது மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.00 pm – 8.30 pm) நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர், பேச்சாளர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசுகிறார்கள். ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

கஷ்டப்பட்டு உழைத்து, சிக்கனமாக செலவு செய்து, சிறந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தெற்கத்தி மக்கள். அவர்கள் இந்தக் கருத்தரங்கிற்குத் திரளாக வந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்!