இன்றைய சூழலில் பொருளாதார நிலை ஸ்திரமாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நிலைமையில் எல்லோரும் இருக்கிறோம். அதனால் எல்லோருக்குமே பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம். பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்ய மக்கள் முன்வருவது இதன் காரணமாகத்தான். பங்குச் சந்தையில் குறைந்த ரிஸ்க்கில் நிறைவான லாபம் ஈட்டும் அம்சங்கள் சில உள்ளன. அவற்றில் இடிஎஃப் ஃபண்டுகளும், இண்டெக்ஸ் ஃபண்டுகளும் அடங்கும். இதன் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
இடிஎஃப் அம்சங்கள்
நீண்ட காலத்தில் வருவாயைப் பெருக்க விரும்பும் எல்லோருமே பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை மேற்கொள்கிறார்கள். அவற்றில் நேரடி பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போல குறியீடு சார்ந்த பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இடிஎஃப் ஃபண்டுகளும் உள்ளன.
இடிஎஃப் ஃபண்டுகள் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ அடிப்படையில் முதலீடு செய்வதால் ஏற்ற இறக்கத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேரடி சந்தையின் ரிஸ்க்கைவிட இதில் ரிஸ்க் குறைவு. இண்டெக்ஸ இடிஎஃப் ஃபண்டுகள் பென்ச்மார்க் குறியீட்டின் அனைத்து பங்குகளிலும் குறியீட்டின் அதே விகிதாசாரங்களில் முதலீடு செய்யும். எனவே, இதனால் ரிஸ்க் குறைக்கப்படும். மேலும் இடிஎஃப் ஃபண்டுகள் கண்காணிப்பு பிழை, நிதி மேலாண்மை செலவுகள் போக பங்குச் சந்தையுடன் இணைந்து வருமானத்தை வழங்குவதாக இருக்கின்றன.
பொதுவாக இடிஎஃப் ஃபண்டுகளில் நிதி மேலாண்மை செலவு குறைவாக இருக்கும்.
இண்டெக்ஸ் ஃபண்டுகளின் அம்சங்கள்
இண்டெக்ஸ் ஃபண்ட் சென்செக்ஸ், நிஃப்டி போன்ற ஏதாவது ஒரு இண்டெக்ஸை முன்மாதிரியாகக் கொள்ளும் ஃபண்ட் ஆகும். உதாரணமாக, சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் என்பது சென்செக்ஸில் இருக்கும் 30 கம்பெனிகளிலும் சென்செக்ஸில் இருக்கும் அதே விகிதாசாரங்களில் முதலீடு செய்யும்.
ஆகவே, இண்டெக்ஸ் ஃபண்டுகளில் மேனேஜரின் ஆராய்ச்சிக்கு வேலையில்லை. அதனால் இதை பேஸிவ் ஃபண்ட் என்றும் சொல்வார்கள். இண்டெக்ஸ் ஃபண்டுகள் கூடியவரை இண்டெக்ஸ் தரும் அதே லாபத்தைத் தர முயற்சி செய்யும்.

இதில் ஃபண்ட் மேனேஜருக்கு அதிக வேலை இல்லை என்பதால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவு. அதனால் முதலீட்டாளர்களின் லாபம் அதிகரிக்கிறது.
ஒருவரின் போர்ட்ஃபோலியோவுக்குத் தேவையான முதலீட்டு பரவலாக்கம் இதில் இருக்கும். சந்தை ஏற்றத்தில் இருக்கும் சமயங்களில் இண்டெக்ஸ் ஃபண்டும் நல்ல ஏற்றம் தரும்.
ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு இருக்கும் அதே வரி விதிப்பு விதிமுறைகள் இண்டெக்ஸ் ஃபண்டுக்கும் உண்டு. பொதுவாக, ஏழு வருடங்களில் 10% - 12% ஆவரேஜ் வருடாந்தர வளர்ச்சி பெறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இ.டி.எஃப், இண்டெக்ஸ் ஃபண்டுகள் யாருக்கு சரியானது, இதில் எப்படி முதலீடு செய்து லாபம் பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு. நாணயம் விகடனும், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து இ.டி.எஃப், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் லாபம் பார்ப்பது எப்படி என்ற நிகழ்ச்சியை ஜூலை 3-ம் தேதி இணையவழி வெபினார் மூலம் நடத்த உள்ளது.
காலை 10.30 மணி முதல் 11.30 வரை நடக்க உள்ள இந்த வெபினார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கு அனுமதி இலவசம். கலந்துகொள்ள https://bit.ly/NV-ICICIPru என்ற லிங்க்கில் பதிவு செய்யவும்.