Published:Updated:

பணம் சம்பாதிக்கத் தெரியலன்னு வருத்தமா இருக்கா... உங்களுக்கான வாய்ப்புதான் இது!

நாணயம் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி

செல்வத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு உதவும் சொத்து முதலீட்டின் முக்கியத்துவம் குறித்தும், நிதிசார்ந்த முதலீடுகளின் வகைகள் குறித்தும், பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதன் பலன் என்ன என்பது குறித்தும் விரிவாக உங்களுக்குச் சொல்ல தயாராக இருக்கிறார்கள் நிபுணர்கள்.

பணம் சம்பாதிக்கத் தெரியலன்னு வருத்தமா இருக்கா... உங்களுக்கான வாய்ப்புதான் இது!

செல்வத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு உதவும் சொத்து முதலீட்டின் முக்கியத்துவம் குறித்தும், நிதிசார்ந்த முதலீடுகளின் வகைகள் குறித்தும், பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதன் பலன் என்ன என்பது குறித்தும் விரிவாக உங்களுக்குச் சொல்ல தயாராக இருக்கிறார்கள் நிபுணர்கள்.

Published:Updated:
நாணயம் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி

கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனால், ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்வதுக்குத் தேவையான அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியலையே என்பதுதான் இங்கு பெரும்பாலானோரின் கவலையாக இருக்கிறது. பணம் சம்பாதிக்கிறதுல சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டால் நம்முடைய நிதி இலக்கை நம்மால் எட்ட முடியும்.

அஸெட் அலொகேஷன்
அஸெட் அலொகேஷன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் பணம் எப்படி இயங்குகிறது, எப்படியெல்லாம் பணம் பெருகுகிறது அல்லது எப்படியெல்லாம் நம்மிடம் இருக்கும் பணம் கரைந்துபோகிறது, நாம் பணத்தை எப்படியெல்லாம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம். நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படியெல்லாம் திட்டமிட்டால் அது மேலும் மேலும் பெருகும் போன்ற விஷயங்களை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நம்முடைய நிதி சார்ந்த இலக்குகளை நோக்கி நம்மால் நகர முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவற்றை உங்களுக்குச் சொல்வதற்காக நிதி சார்ந்த முதலீட்டு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். செல்வத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு உதவும் சொத்து முதலீட்டின் முக்கியத்துவம் குறித்தும், நிதிசார்ந்த முதலீடுகளின் வகைகள் குறித்தும், பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதன் பலன் என்ன என்பது குறித்தும் விரிவாகச் சொல்ல இருக்கிறார்கள்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இணைந்து `முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்தும்..!' என்ற முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னையில் ஜூலை 23-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.00 முதல் 8.30 வரை சென்னை வடபழனிக்கு அருகில் உள்ள அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள அமிர்தவல்லி ஹாலில் நடக்க உள்ளது.

அஸெட் அலொகேஷன்
அஸெட் அலொகேஷன்

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் மண்டல மேலாளர் எஸ்.குருராஜ் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் முதலீடு குறித்து முழுமையான விவரங்களை நீங்கள் பெறலாம். அது உங்களுடைய நிதி சார்ந்த பழக்க வழக்கங்களைத் தலைகீழாக மாற்றக்கூடியவை என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/NV-Adityabirla என்ற லிங்கில் முன்பதிவு செய்தால் போதும்!

பிறகென்ன, உடனே பதிவு செய்து கூட்டத்துக்கு வாருங்கள் முதலீட்டாளர்களே!