Published:Updated:

பலே லாபம் தரும் சொத்து ஒதுக்கீடு உத்தி... எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

நாணயம் முதலீட்டாளர் நிகழ்ச்சி

சொத்து ஒதுக்கீடு, முதலீடு போன்றவற்றுக்கு இவ்வளவு பணம் இருந்தால்தான் செய்ய முடியும் என்று கட்டாயமில்லை. எவ்வளவு இருக்கிறதோ அதை வைத்து முதலீட்டை தொடங்கலாம். ஒரே விஷயம் எப்படி எதில் பிரித்து முதலீடு செய்தால் பல மடங்காகப் பெருக்கலாம் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!

பலே லாபம் தரும் சொத்து ஒதுக்கீடு உத்தி... எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

சொத்து ஒதுக்கீடு, முதலீடு போன்றவற்றுக்கு இவ்வளவு பணம் இருந்தால்தான் செய்ய முடியும் என்று கட்டாயமில்லை. எவ்வளவு இருக்கிறதோ அதை வைத்து முதலீட்டை தொடங்கலாம். ஒரே விஷயம் எப்படி எதில் பிரித்து முதலீடு செய்தால் பல மடங்காகப் பெருக்கலாம் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!

Published:Updated:
நாணயம் முதலீட்டாளர் நிகழ்ச்சி

வாழ்க்கையை எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்கிற கனவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், அப்படி ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முக்கியமான தேவை பணம். ஆனால், பணம்தான் பலருக்கு பிரச்னையாகவே இருக்கிறது. அதிகரித்துவரும் விலைவாசி, மாறிவரும் வாழ்க்கை முறை நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொண்டேதான் வருகிறது. அதேசமயம், வருமானம் உயர்கிறதா என்றால் இல்லை. ஆனால், கொஞ்சம் திட்டமிட்டால் போதும், நாம் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான செல்வத்தைப் பெருக்க முடியும்.

முதலீடு
முதலீடு

அதற்கு முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான் சொத்துகளைக் கையாளும் முறைகள். சொத்து ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலே பணத்தை எப்படிப் பல மடங்காகப் பெருக்குவது எப்படி என்ற வித்தைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொத்து ஒதுக்கீடு, முதலீடு போன்றவற்றுக்கு இவ்வளவு பணம் இருந்தால்தான் செய்ய முடியும் என்று கட்டாயமில்லை. எவ்வளவு இருக்கிறதோ, அதை வைத்து முதலீட்டைத் தொடங்கலாம். ஒரே விஷயம் எதில், எந்த அளவுக்கு பணத்தைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்பது தெரிந்தால் போதும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்
mutual fund

இது எல்லோருக்கும் கைவந்துவிடுமா என்றால் இல்லை. அதற்கு பண மேலாண்மை பற்றியும், சொத்துகளின் தன்மை பற்றியும், அவற்றின் எதிர்காலம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். சந்தையில் என்னென்ன முதலீடு வகைகள் உள்ளன, அவற்றின் சாதக பாதகங்கள் என்ன? யாருக்கு எந்த முதலீடு சரியானது என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இவற்றை நிதி சார்ந்த முதலீட்டு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் உங்களுக்குச் சொல்ல தயாராக இருக்கிறார்கள். செல்வத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு உதவும் சொத்து முதலீட்டின் முக்கியத்துவம் குறித்தும், நிதிசார்ந்த முதலீடுகளின் வகைகள் குறித்தும், பணத்தை பிரித்து முதலீடு செய்வதென்றால் என்ன என்பது குறித்தும் விரிவாகச் சொல்ல இருக்கிறார்கள்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிட்டலும் இணைந்து 'முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்தும்..!' என்ற முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னையில் ஜூலை 23-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.00 முதல் 8.30 வரை சென்னை வடபழனிக்கு அருகில் உள்ள அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள அமிர்தவல்லி ஹாலில் நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் சோனல் மேனேஜர் எஸ்.குருராஜ் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் முதலீடு குறித்து முழுமையான விவரங்களை நீங்கள் பெறலாம். அது உங்களுடைய நிதி சார்ந்த பழக்க வழக்கங்களை தலைகீழாக மாற்றக்கூடியவை என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/NV-Adityabirla என்ற லிங்கில் முன்பதிவு செய்தால் போதும்!

பிறகென்ன, உடனே பதிவு செய்து கூட்டத்துக்கு வாருங்கள் முதலீட்டாளர்களே!