Published:Updated:

ஒரு கம்பெனியின் பேலன்ஸ் ஷீட்டை புரிந்துகொள்வது எப்படி? ஓர் எளிய விளக்கம்! - பணம் பண்ணலாம் வாங்க 31

கம்பெனிகள் வெளியிடும் பேலன்ஸ் ஷீட் மற்றும் ப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட் பற்றி ஓரளவாவது தெரிந்துகொள்வது பல ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

தலைப்பைப் படித்ததும் ஏதோ தலை கால் புரியாத இடத்துக்கு உங்களை இழுத்துச் செல்வதாக எண்ண வேண்டாம். வாட்ஸ்அப் உபயோகிப்போருக்கு அந்த வாட்ஸ்அப் எப்படி வேலை செய்கிறது என்று தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதில் மெசேஜ் அனுப்புவது எப்படி, மெசேஜை அழிப்பது எப்படி போன்ற விவரங்கள் தெரிவது அவசியம் அல்லவா? அப்படித்தான் நாமும் கம்பெனிகள் வெளியிடும் பேலன்ஸ் ஷீட் மற்றும் ப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட் பற்றி ஓரளவாவது தெரிந்துகொள்வது பல ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

Money (Representational Image)
Money (Representational Image)

இதுவரை ஃபண்டமென்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ், வேல்யூ இன்வெஸ்டிங், க்ரோத் இன்வெஸ்டிங் என்ற தலைப்புகளில் பங்குகளைப் பற்றிய ஆராய்ச்சி நடத்துவது எப்படி என்று பார்த்தோம். இவற்றில் டெக்னிக்கல் அனாலிசிஸ் தவிர மற்ற மூன்று ஆராய்ச்சிகளுக்கும் கம்பெனியின் பேலன்ஸ் ஷீட் மற்றும் ப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட்டில் காணப்படக்கூடிய விவரங்கள் உதவும்.

ப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட் காலாண்டு, முழு வருடம் என்று இருவிதங்களில் வெளியாகிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில் வந்த வருமானம், செய்த செலவு, கடைசியில் மிகுவது லாபமா, நஷ்டமா என்ற விவரங்கள் இதில் கிடைக்கும். ப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட் பற்றிப் பேசும்போது அடிக்கடி டாப்லைன், பாட்டம்லைன் என்ற இரு வார்த்தைகள் உபயோகமாவதைப் பார்த்திருக்கிறோம். இந்த ஸ்டேட்மென்டில் முதலில் வரும் சேல்ஸ் தொகை டாப்லைன் எனப்படுகிறது; கடைசியில் வரும் லாப/ நஷ்டம் குறித்த விவரம் பாட்டம்லைன் எனப்படுகிறது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
எப்போதும் சரியாத இரண்டு செக்டார் பங்குகள் பற்றி தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 28

டாப்லைனிலிருந்து கச்சாப் பொருள்களின் விலை, கம்பெனியை நடத்த ஆகும் செலவு (வாடகை, சம்பளம், தண்ணீர், எலெக்ட்ரிசிட்டி போன்றவைக்கான செலவுகள் மற்றும் நிர்வாகச் செலவு) வரி, வட்டி ஆகியவற்றைக் கழித்தால் பாட்டம்லைன் வரும்.

குறிப்பிட்ட கம்பெனியின் வலைதளத்தில் மட்டுமன்றி, மணிகன்ட்ரோல், எகானமிக் டைம்ஸ் போன்ற தளங்களிலும் இந்த ஸ்டேட்மென்டைப் பார்க்க முடியும். கடந்த பல காலாண்டுகள் / வருடங்களுக்கான புள்ளி விவரங்கள் விரல் நுனியில் கிடைப்பதால், எந்தக் காலகட்டத்தில் லாபம் கூடுகிறது, அந்த பிசினஸின் ஏற்ற இறக்கங்கள் எப்போது நிகழ்கிறது, இப்போதைய டிரெண்ட் என்ன என்பதையெல்லாம் கணிக்க முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேலன்ஸ் ஷீட் என்பது ஒரு கம்பெனியின் பொருளாதார நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கம்பெனியின் சொத்துகள் (Assets) என்ன, கடன், செலவு போன்ற பொறுப்புகள் (Liabilities) என்ன, உரிமையாளர்களுக்கு இதுவரை மிஞ்சிய இருப்புகள் (Reserve and Surplus) என்னென்ன என்பதையெல்லாம் இது காட்டுகிறது.

சொத்துகளில் கரன்ட் (தற்போதையது), நான்-கரன்ட் (தற்போதைக்கல்லாதது) என்று இருவகைகள் உள்ளன. ஒரு வருடத்தில் பணமாக்கக்கூடிய பாண்ட்ஸ், செக்யூரிடீஸ், சரக்கு போன்றவை கரன்ட் அசெட்ஸ்.

லாங் டெர்முக்கு இருக்கக்கூடிய ஸ்டாக்ஸ், பாண்ட்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ரியல் எஸ்டேட், மெஷின்கள், கட்டடம், நிலம் போன்றவை கையால் தொட்டுணரக்கூடிய ஃபிசிகல் அசெட்ஸ்.

ஒரு கம்பெனிக்கே உரித்தான காபிரைட்ஸ், குட்வில், பேடன்ட், வாடிக்கையாளர்கள் போன்றவை நான்-ஃபிசிகல் அசெட்ஸ்.

Company (Representational Image)
Company (Representational Image)
`சரியா முதலீடு பண்ணா ஜாக்பாட்தான்!' - வேல்யூ இன்வெஸ்டிங் பத்தி தெரிஞ்சுப்போமா? - 29

பொறுப்புகளிலும் (Liabilities) கரன்ட், நான்-கரன்ட் என்று இருவகை உண்டு.

ஒரு வருடத்துக்குள் தர வேண்டிய வட்டி, சம்பளம், டிவிடெண்ட், வரி, கடன் போன்றவை கரன்ட் பொறுப்புகள்.

லாங் டெர்மில் திருப்பித் தரக்கூடிய வங்கிக் கடன்கள், டிபென்ச்சர், மார்ட்கேஜ், பென்ஷன் பொறுப்புகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட் போன்றவை நான்- கரன்ட் பொறுப்புகள்.

மேற்கண்ட விஷயங்களில் இருந்து ஒன்று புரிந்திருக்கும்.

ஃப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட் என்பது காலாண்டு / வருடாந்தரக் கணக்கு, வழக்கு; கம்பெனியின் செயல்பாடுகள் லாபம் ஈட்டுகின்றனவா என்று காட்டும்.

பேலன்ஸ் ஷீட் என்பது குறிப்பிட்ட தேதியில் அந்தக் கம்பெனியின் பொருளாதார ஸ்திரத்தன்மை, எளிதில் பணமாகக்கூடிய தன்மை, தாக்குப் பிடிக்கும் தன்மை, சால்வென்சி (Solvency) போன்றவற்றைப் படம் பிடித்துக் காட்டும்.

Bank (Representational Image)
Bank (Representational Image)
அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30

வங்கியில் கடன் கேட்கும் கம்பெனிகள் இந்த இரண்டு ஸ்டேட்மென்ட்டுகளையும் சமர்ப்பித்தால்தான் கடன் கிட்டும். ஏனெனில் ஒரு கம்பெனியின் நடப்பு மற்றும் ஆரோக்கியத்தை இவை துல்லியமாகக் காட்டும். முதன்முறை இவற்றைப் பார்க்கும்போது சற்று மிரள்வது சகஜம்தான்.

ஆனால், `பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்' என்று ஒரு டயலாக் வருமே? அப்படி இவற்றைப் பார்க்கப் பார்க்க அவை சொல்லும் விஷயங்கள் புரிந்து எளிமையாக மாறிவிடும்.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு