Published:Updated:

தமிழகத்தின் ட்ரில்லியன் டாலர் கனவு; `ஐடியா பட்டறை'யில் தயாரான 250 தொழில்முனைவோர்கள்!

ஒழுங்கற்ற, கரடுமுரடான ஐடியாவை ஒழுங்குபடுத்தி, அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்தப் பட்டறை. இளம் தொழில்முனைவோர்கள் ஒரு முழுமையான வடிவம் பெறுவதால், அவர்களது ஸ்டார்ட் அப் ஐடியாவானது முதலீட்டையும், புதிய வாடிக்கையாளர்களையும் பெற முடியும்.

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரமாக அடையும்பொருட்டு, சென்னையில் தொழில்முனைவுக்கான `ஐடியா (Idea) பட்டறை’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும், `கனவு தமிழ்நாடு இயக்கம்’ இந்த நிகழ்ச்சியை சென்னை, உலக வர்த்தக மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தியது. இதில் 150 நிறுவனங்கள் 250 தொழில்முனைவோர்கள் 14 வழிகாட்டிகள் (Mentors) கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடல், பயிற்சி, பகிர்வு எனப் பல்வேறு வழிகள்மூலம் தொழில்முனைவோர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

idea பட்டறை பயிற்சி முகாம்
idea பட்டறை பயிற்சி முகாம்
இந்த 4 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் கடன்களை எளிதாக அடைக்கலாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 46

ஒழுங்கற்ற, கரடுமுரடான ஐடியாவை ஒழுங்குபடுத்தி, அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்தப் பட்டறை. இளம் தொழில்முனைவோர்கள் ஒரு முழுமையான வடிவம் பெறுவதால், அவர்களது ஸ்டார்ட் அப் ஐடியாவானது முதலீட்டையும், புதிய வாடிக்கையாளர்களையும் பெற முடியும். அதே போன்று, இளம் தொழில்முனைவோர்கள் தங்களது சக நிறுவன உறுப்பினர்களையும் கண்டறிய முடியும்.

இந்த ஐடியா பட்டறையில், தொழில்முனைவோர் தாங்கள் செய்யப்போகும் தொழில் என்னவாக இருக்க வேண்டும், அந்தத் தொழிலை எப்படி விளக்க வேண்டும், மற்ற நிறுவனங்களை (Case Study) ஆழமாகப் படிப்பதன்மூலம் கற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பலவிதமான பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு குழுவும் தங்களது தொழில்முனைவு ஐடியாவை மறுவரையறை செய்தனர்.

இதற்கு குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள சகாக்கள் (peers) மற்றும் வழிகாட்டிகளின் உதவியைப் பெற்றுக்கொண்டனர். அமர்வின் முடிவில், ஒவ்வொரு குழுவும் தங்கள் குழுவிலிருந்து ஒரு ஸ்டார்ட் அப்பை இறுதிச்சுற்றில் பங்கேற்க வைத்தனர். அவர்கள் தங்கள் நிறுவனத்தின் தொழிலைக் காட்சிப்படுத்தி, அது எவ்வாறு பட்டை தீட்டி, செழுமைப்படுத்தப்பட்டு, பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறித்து விளக்கினர்.

பெங்களூரு, உதகை, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து வந்த இளம் தொழில்முனைவோர் ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஸ்டார்அப் ஐடியாக்களை சக குழுக்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

idea பட்டறை
idea பட்டறை

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 250 நிறுவனங்களும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்கள் தரப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் சுமார் 24 பேர் வரை பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அர்ச்சனா (Co-Founder, My Harvest Farms), எம்.அருண் பிரகாஷ் (Founder & CEO, GUVI.io) , குமார் வேம்பு (Founder & CEO, GoFrugal Technologies) , எம்.வி. சுப்ரமணியம் (Co-Founder, Future Focus) , வாணிபிரியா ஜெயராமன் (Director, Exotel), ஏ.ஜெ.பாலசுப்ரமணியன் (Director, Aigilx Health), பிரபு ராமச்சந்திரன் (Founder and CEO, Facilio Inc), வெங்கட் கிருஷ்ணராஜ் (Co-Founder, Klenty), அருண் பிரகாஷ், கெளரி தியாகராஜன் (Co-Founder, CreditMantri), சுனில் சாவ்லா (Co-Founder, Social Beat), பத்மினி ஜானகி (CEO, Mind and Mom), கீதாஞ்சலி ராதாகிருஷ்ணன் (Founder, Adiuvo Diagnostics), செந்தில் கந்தசாமி (Business Unit Leader, Freshworks) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டினர்.

idea பட்டறை
idea பட்டறை
`ரிசர்வ் வங்கியிடம் இனி எளிதில் புகார் அளிக்கலாம்!' - மோடி தொடங்கி வைத்த திட்டங்களின் சிறப்பு என்ன?

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, வழிகாட்டி, நடத்திய கனவு தமிழ்நாடு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் `கிஸ்ஃப்ளோ’ (Kissflow) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தத்திடம் பேசினோம்.

``தமிழ்நாட்டின் ஒரு ட்ரில்லியன் டாலர் கனவை நனவாக்கும் விதமாக ஐடியா பட்டறை நிகழ்ச்சியை நடத்தினோம். இதில் 250 தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர். அவர்களின் ஸ்டாரட் அப் ஐடியாவை பட்டை தீட்டி, செழுமைப்படுத்தியிருக்கிறோம். இந்த ஐடியா பட்டறை நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அதன் அருகிலுள்ள ஊர்களுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறோம். தொடர்ச்சியாக இது போன்ற மாபெரும் தொழில்முனைவுக்கான பயிற்சிகளை நடத்துவதன் வழியே தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு