Published:Updated:

‘மார்க்’ மூலம் வெளிநாட்டுக்குப் பணம்... ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸின் பலே திட்டம் அம்பலம்!

‘மார்க்’ நிகழ்ச்சியில்...
பிரீமியம் ஸ்டோரி
‘மார்க்’ நிகழ்ச்சியில்...

ஃபாலோ அப்

‘மார்க்’ மூலம் வெளிநாட்டுக்குப் பணம்... ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸின் பலே திட்டம் அம்பலம்!

ஃபாலோ அப்

Published:Updated:
‘மார்க்’ நிகழ்ச்சியில்...
பிரீமியம் ஸ்டோரி
‘மார்க்’ நிகழ்ச்சியில்...

‘ஐ.எஃப்.எஸ்ஸில் பணம் போட்ட அனைவருமே விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா என்று தெரியாமல் ஏகத்துக்கும் குழம்பிக் கிடக்கிறார்கள்.

ஃபிராடு பிரதர்கள் தப்பியது எப்படி?

ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் எங்கே இருக் கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஃபிராடு பிரதர்ஸ் தமிழ்நாட்டிலோ இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலோ இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ‘‘இது மாதிரி ஓர் இக்காட்டான சூழ்நிலை வந்தால், வெளிநாடு களுக்கு எப்படி தப்பிச் செல்வது என்பது குறித்து அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே தெளிவான திட்டம் போட்டுவிட்டார்கள். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘மார்க் (MARC)’ என்றவர்கள், மேலும் கூறியதாவது...

‘மார்க்’ மூலம் வெளிநாட்டுக்குப் பணம்... ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸின் பலே திட்டம் அம்பலம்!

தயாநிதி மாறனும் சேகர் பாபுவும்...

‘‘மார்க் என்பது ஒரு கிளப். கடந்த ஆண்டு செப்டம்பரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த கிளப்பை வெகு சிறப்பாகத் தொடங்க, முக்கியமான அரசியல் கட்சிப் பிரமுகர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள், சமூகப் பிரபலங்கள் எனப் பலரும் வந்திருந் தார்கள். வாரம்தோறும் ‘மார்க்’ நடத்தும் கூட்டத்தில் ஒருமுறை மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக அமைச்சர் சேகர் பாபு, தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் லியோனி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ‘நீயா நானா’ கோபிநாத்தும், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயும் ‘மார்க்’ நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள். நடிகர் மாதவன்தான் ‘மார்க்’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர். ‘மார்க்’ நிறுவனத்தை நடத்துவது யார், அவர்களின் பின்னணி என்ன என்பது தெரிந்துதான் இவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண் டார்களா அல்லது தெரியாமல் கலந்துகொண்டார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

‘மார்க்’ நிறுவனத்தின் கிளைகள் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் தொடங்கப் பட்டது. இந்த நாடுகளில் தொழில் தொடங்க இங்கிருந்து பல கோடிகள் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆருத்ரா மோசடி அம்பலமானபிறகு, இங்கிருந்த மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, ஃபிராடு பிரதர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள்.

இனி அவர்கள் வேலூருக்குத் திரும்பி வந்தால், காவல் துறை அவர்களைக் கைது செய்துவிடும். மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தைத் திருப்பித் தரச் சொல்லும். அதை அவர்கள் செய்தாக வேண்டும் எனில், எங்கும் ஓடி ஒளியாமல், காவல்துறையிடம் சரண் அடைந்திருப்பார்கள். அப்படிச் செய்யவில்லையே! எனவே, அவர்கள் திரும்பி வரவும் வாய்ப்பு இல்லை. அப்படியே வந்தாலும், மக்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா என்கிற கேள்விக்கு உறுதியான பதிலும் இல்லை’’ என்கிறார்கள் அவர்கள்.

‘மார்க்’ மூலம் வெளிநாட்டுக்குப் பணம்... ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸின் பலே திட்டம் அம்பலம்!

புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது...

ஐ.எஃப்.எஸ்-ல் பணம் போட்டவர்கள் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஜூலை 31 வரை பொறுத்துக்கொள்ள வீடியோ வெளியிட்டார் எல்.என்.எஸ். பிறகு, ஆகஸ்ட் 15 வரை பொறுத்துக்கொள்ள ஆடியோ வெளியிட்டார். இப்போது ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் எல்லாம் சரியாகி விடும் என்று லீடர் ஒருவர் ‘நம்பக’மான தகவல் ஒன்றை வெளியிட்டார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இதைப் பார்த்து வெறுத்துப்போன மக்கள், ‘சில ஏஜென்டுகள் வேண்டுமென்றே இப்படிப் பட்ட தகவல்களை உலாவ விடுகிறார்கள். மக்கள் அவர் களுக்கு எதிராகப் புகார் தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக மக்கள் புகார் தந்தால், காவல்துறை அவர்களைக் கைது செய்யும். அப்படி ஏதும் நடக்கக்கூடாது என்பதற் காகவே, பலவிதமான தகவல் களைப் பரப்புகிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். தவிர, இதோ, அதோ என்று கொஞ்சம் கொஞ்சமாக நாள்களைக் கடத்தினால், ஒரு கட்டத்தில் மக்களே வெறுத்து ஓய்ந்துபோய், வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பதும் ஏஜென்டுகளின் கணக்கு.

இதை எல்லாம் தாண்டி, ‘போலீஸில் புகார் தந்தால், உங்கள் பணம் கிடைக்காது’ என்று ஏஜென்டுகள் மிரட்டு கிறார்கள். இதற்கு பயந்தே பலரும் போலீஸில் புகார் தராமல் இருக்கிறார்களாம்.

இப்படிப்பட்ட ஒரு மோசடித் திட்டம் நடக்கும்போதே காவல்துறை தடுத்திருக்க வேண்டும். அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் ஏஜென்டு களும் மக்களும் தூர விலகி நின்றிருக்க வேண்டும். ஆனால், இப்போது எல்லாம் முடிந்த பின் கவலைப்பட்டு என்ன பயன்? இனியாவது கவனமாக இருந்து, காசைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் மக்களே!