Published:Updated:

``புகார் தந்த எங்களைத் திட்டுகிறார்கள்... ஏமாற்றியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள்" - #IFS அப்டேட்

ஐ.எஃப்.எஸ்

முதலீடு செய்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் எல்லோரையும் போலத்தான் நாங்களும் பணம் போட்டோம். இப்போது யார், யாரோ போனில் அழைத்து எங்களை மிரட்டுகிறார்கள். மோசடி செய்தவர்கள் அரசியல், பணபலத்துடன் இருக்கிறார்கள். அதனால் எல்லோரும் அவர்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.

``புகார் தந்த எங்களைத் திட்டுகிறார்கள்... ஏமாற்றியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள்" - #IFS அப்டேட்

முதலீடு செய்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் எல்லோரையும் போலத்தான் நாங்களும் பணம் போட்டோம். இப்போது யார், யாரோ போனில் அழைத்து எங்களை மிரட்டுகிறார்கள். மோசடி செய்தவர்கள் அரசியல், பணபலத்துடன் இருக்கிறார்கள். அதனால் எல்லோரும் அவர்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.

Published:Updated:
ஐ.எஃப்.எஸ்

ஐ.எஃப்.எஸ் நிதி மோசடி விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மோசடியைப் பற்றியே யாரும் வாய் திறக்கவில்லை. பணத்தைப் போட்டவர் களுக்கு மாதம்தோறும் வர வேண்டிய பணம் வராமல் நின்ற பிறகுதான் அனைவரும் பேச ஆரம்பித்தனர். கடந்த 45 நாள்களாக ஜூனியர் விகடன், நாணயம் விகடனிலும் இந்த நிறுவனம் தொடர்பாகத் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வருகிறோம். ஆரம்பத்தில் இந்தச் செய்திகளை அசட்டை செய்த மக்கள், இப்போது `பணம் போச்சே' என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் பற்றி 25 நாள்களுக்கு முன்பே காஞ்சிபுரம் காவல் துறையில் புகார்கள் கொடுத்தார்கள் சிலர். ஆனால், காவல் துறை இந்த நிறுவனத்தின் மீதோ, இந்த நிறுவனத்துக்காகப் பணம் வசூலித்த ஏஜென்டுகள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் அளித்தவர்கள்
புகார் அளித்தவர்கள்

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து பொருளாதார குற்றப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐ.எஃப்.எஸ் மோசடியில் சம்பந்தப்பட்ட லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு உள்ளிட்டோர் அனைவருமே தலைமறைவாகிட்ட நிலையில், அவர்களின் அலுவலகங்கள் குடியிருந்த இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனையில் ஈடுபட்டது. இந்த ஐ.எஃப்.எஸ் மோசடியில் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் தலைமறைவாகிவிட்டதால், மாதம்தோறும் பணம் போட்டவர்களுக்குத் தரப்பட்டு வந்த பணம் இந்த மாதம் வரவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் பணம் வசூலித்துத் தந்த ஏஜென்டுகளிடம் பணம் கேட்டு நச்சரிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நச்சரிப்பு நெருக்கடி தாங்காமல், காட்பன்டி சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்கிற ஐ.எஃப்.எஸ் ஏஜென்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொண்ட வினோத்குமார் எழுதிய கடிதம்
தற்கொலை செய்துகொண்ட வினோத்குமார் எழுதிய கடிதம்

ஐ.எஃப்.எஸ் ஏஜென்டிடம் பணம் தந்து ஏமார்ந்த காஞ்சிபுரம் கோனேரிக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் தந்தார். அவர் தந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிய அவருடன் பேசினோம். அவர் எங்களிடம் சொன்னதாவது:

``எங்களிடம் பணம் வாங்கிய ஏஜென்டுகள் யாரும் இப்போது அவர்களுடைய வீட்டில் இல்லை. எங்கேயோ தலைமறைவாகி விட்டார்கள். வீட்டில் இருக்கும் பெண்களும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது என்று எங்களிடம் கத்துகிறார்கள்.

காவல் துறையில் கொடுத்த புகார் குறித்து விசாரிக்கப் போனால், ``யாரை நம்பிப் பணம் போட்டீர்கள்'' என்று எங்களைத்தான் திட்டுகிறார்கள். இதில் பணம் போட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற ஆசையில்தான் பணம் போட்டோம். ஆனால், இந்த மாதிரி ஆகும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

எங்களிடம் பணம் வாங்கிய ஏஜென்ட், ரவுடி ஒருவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டார். அவர் அடைக்கலத்தில் அந்த ஏஜென்ட் இருப்பதால், அவரை நாங்கள் நெருங்கக்கூட முடியவில்லை.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்
ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

பணம் வாங்கிய ஏஜென்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கோ எங்கு நீதி கிடைக்கும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கட்டிய பணம் எங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை'' என்று பேசி முடித்தார் சுகுமார்.

ஐ.எஃப்.எஸ் விவகாரம் இப்போதுதான் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. இனிமேல்தான் இந்த விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவரும்!