Published:Updated:

ஐ.எஃப்.எஸ் மோசடி: குற்றவாளிக் கூண்டில் பொருளாதாரக் குற்றப்பிரிவு... எஸ்.பி-யை சுழற்றும் 3 கேள்விகள்!

ஜெயச்சந்திரன் எஸ்.பி

வங்கிகள் ஆண்டுக்கு 5.5 சதவிகிதமும், தனியார் நிதி நிறுவனங்கள் 12 சதவிகிதத்துக்கு மேலும் வட்டி தருவதாக விளம்பரம் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயச்சந்திரன்...

ஐ.எஃப்.எஸ் மோசடி: குற்றவாளிக் கூண்டில் பொருளாதாரக் குற்றப்பிரிவு... எஸ்.பி-யை சுழற்றும் 3 கேள்விகள்!

வங்கிகள் ஆண்டுக்கு 5.5 சதவிகிதமும், தனியார் நிதி நிறுவனங்கள் 12 சதவிகிதத்துக்கு மேலும் வட்டி தருவதாக விளம்பரம் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயச்சந்திரன்...

Published:Updated:
ஜெயச்சந்திரன் எஸ்.பி

ஐ.எஃப்.எஸ் விவகாரத்தில் அரசியல்வாதிகளும், காவல் துறையும் கூட்டணி அமைத்து செயல்படுகிறது என ஜூனியர் விகடனிலும், நாணயம் விகடனிலும் தொடர்ந்து எழுதி வருகிறோம். நாங்கள் எழுதிவருவது உண்மை என்பது நிரூபணம் ஆகிவருகிறது. இன்றைக்கு (10.08.2022) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையின் எஸ்.பி-யான ஜெயச்சந்திரன் பேசியதில் இருந்தே, ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரத்தில் காவல் துறை வேண்டுமென்றே காலம் கடத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவரை நோக்கி பல கேள்விகளை வரிசைப்படுத்துவோம்.

ஐ.எஃப்.எஸ் - லட்சுமி நாராயணன் சுந்தரம்
ஐ.எஃப்.எஸ் - லட்சுமி நாராயணன் சுந்தரம்

கேள்வி 1

வங்கிகள் ஆண்டுக்கு 5.5 சதவிகிதமும், தனியார் நிதி நிறுவனங்கள் 12 சதவிகிதத்துக்கு மேலும் வட்டி தருவதாக விளம்பரம் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயச்சந்திரன்.

இந்த விதிமுறை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு நன்றாகத் தெரியும் என்கிறபோது, ஐ.எஃப்.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு 24% வட்டி தருவோம் என்று சொல்லி மக்களிடம் இருந்து பணம் வாங்கியதை எப்படி வேடிக்கை பார்த்தது? அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றுவதாக அந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஐ.எஃப்.எஸ் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்தது யார்? இதற்கு ஆளுங்கட்சிதான் காரணமா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்வி 2

ஒரு நிறுவனம் மோசடித் திட்டத்தை நடத்துவதாக புகார் வந்த பின்புதான் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. 2019-ல் வந்திருக்கிற புதிய விதிமுறையின்படி, ஒரு நிறுவனமானது செயல்படுத்த சாத்திய மற்ற திட்டங்களை நடத்துவது சந்தேகப்பட்டாலே அந்த நிறுவனத்தின் மீது காவல் துறை விசாரணை மேற்கொள்ள முடியும் என்று சொல்லி இருக்கிறார் எஸ்.பி.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்
ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

இந்தப் புதிய விதிமுறையானது பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு நன்கு தெரிந்திருந்தபோதும், ஐ.எஃப்.எஸ் நிறுவனமானது `செயல்படுத்த சாத்தியமற்ற திட்டங்களை’ நடத்துவதாக எந்த சந்தேகமும் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு வரவே இல்லையா? அப்படி வரவில்லை எனில், அது பொருளாதாரக் குற்றப் பிரிவு செய்த தவறுதானே? இதற்கான பொறுப்பைப் பொருளாதாரக் குற்றப் பிரிவு ஏற்றுக்கொள்ளுமா?

ஒருவேளை, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின்மீது சந்தேகம் வந்திருந்த பின்பும், அந்த நிறுவனத்தைப் பொருளாதாரக் குற்றப் பிரிவால் விசாரிக்க முடியவில்லையா? அப்படி விசாரிக்க விடாமல் தடுத்தது யார்? இதற்கும் ஆளுங்கட்சிதான் காரணமா?

கேள்வி 3

பொதுவாக, குற்றம் சாட்டப்பவர்கள் நம் நாட்டில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காக அரசுத் தரப்பில் `லுக்-அவுட்’ தரப்படுவது வழக்கம். ஐ.எஃப்.எஸ் மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகிய நான்கு பேர் மீது `லுக்-அவுட்’ தரப்பட்டிருப்பதாக எஸ்.பி ஜெயச்சந்திரன் பத்திரிகையாளரிடம் சொல்லி இருக்கிறார்.

ரெய்டு செய்த போலீஸ்
ரெய்டு செய்த போலீஸ்

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றி ஜூனியர் விகடனிலும், நாணயம் விகடனிலும் கட்டுரைகள் வரத் தொடங்கி 40 நாள்களுக்குமேல் ஆகிவிட்டது. இந்தக் கட்டுரை வரத் தொடங்கிய காலத்திலேயே இவர்களை விசாரிக்கத் தொடங்கி, போலீஸ் காவலில் வைத்திருந்தால், அவர்கள் எங்கும் தப்பித்துச் செல்வதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால், இப்போது ஐ.எஃப்.எஸ் மோசடி நிறுவனத்தை நடத்திய நான்கு பேரும் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அவர்கள் கடந்த மாதக் கடைசியிலேயே லண்டனுக்குத் தப்பியோடிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், இப்போது இந்த நான்கு பேர் மீது லுக் அவுட் போட்டு என்ன பிரயோஜனம்? திருடர்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே தப்பிச் செல்லும் கால அவகாசம் கொடுத்துவிட்டு, இப்போது வீரவசனம் பேசுவது யாரை ஏமாற்ற? இப்போது கொடுத்த லுக் அவுட் நோட்டிஸ் ஏன் 30 நாள்களுக்கு முன்பே தரவில்லை?

குற்றவாளிகள் என்று தெரிந்திருந்தும், குற்றம் நடக்கிறது என்று தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரங்கள் கையில் இருந்தும் துரும்பைக்கூடக் கிள்ளாத பொருளாதரக் குற்றப்பிரிவுதான் முதல் குற்றவாளி!

- சிறப்பு செய்தியாளர்