Published:Updated:

ஐ.எஃப்.எஸ் மோசடி... மக்கள் பணம் பறிபோனதுக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணமா?

ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், மோகன்பாபு, வேதநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், மோகன்பாபு, வேதநாராயணன்

ஃபாலோ அப்!

ஐ.எஃப்.எஸ் மோசடி... மக்கள் பணம் பறிபோனதுக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணமா?

ஃபாலோ அப்!

Published:Updated:
ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், மோகன்பாபு, வேதநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், மோகன்பாபு, வேதநாராயணன்

''ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரத்தில் மக்களின் விழிப்புணர்வின்மை 10% எனில், காவல்துறையின் அலட்சியம் 90%. பொருளாதாரக் குற்றப் பிரிவுக்குத் தெரியாமல் மோசடி நடக்க வாய்ப்பே இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

நாணயம் விகடனும் ஆரம்பத்தில் இருந்தே இதைத் தான் சொல்லி வருகிறது. இந்த நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை மோசடி செய்யக் காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக, கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனம் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுதான்.

திருடர்களைத் தப்பியோட விட்டபின்...

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றி உடனடியாக விசாரியுங் கள் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்ட பின்புதான், 6-ம் தேதி அன்று வேறு வழியில்லாமல் ரெய்டு நடவடிக்கையில் இறங்கியது பொருளாதாரக் குற்றப் பிரிவு.

``இந்த ரெய்டு நடவடிக்கை மிகக் காலதாமதமாக எடுக்கப் பட்டுள்ளது. மக்களிடம் இருந்து பணம் வாங்கிய பல ஏஜென்டுகள் தலைமறை வாகிவிட்டார்கள். அவர் களின் வீடுகளை இப்போது ரெய்டு செய்து என்ன பிரயோஜனம்? மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை ஐ.எஃப்.எஸ் பிரதர்களிடம் தந்ததன்மூலம் கிடைத்த கமிஷன் பணத்தில் நிலம், பங்களா என்று வாங்கி விட்டார்கள். இப்போது அவர்களைப் பிடித்து உலுக்கி னால், சில நூறு கோடிகளைத் திரும்ப பெற முடியுமே தவிர, வேறு எதுவும் கிடைக்காது. காவல்துறையின் இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்புதான்’’ என்று புலம்பு கிறார்கள் பணத்தை இழந்த வர்களில் சிலர்.

ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், மோகன்பாபு, வேதநாராயணன்
ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், மோகன்பாபு, வேதநாராயணன்

ஏஜென்டுகள் வசூல்...

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முக்கியமான ஏஜென்டான மின்மினி சரவணனை முதலில் விசாரித்தது காவல் துறை. இந்த சரவணன் மட்டுமே ரூ.2,000 கோடி அளவுக்கு மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து தந்திருக்கிறாராம். கடந்த ஒரு வருஷத்தில் இவர் கமிஷனாகப் பெற்ற தொகை மட்டுமே ரூ.119 கோடி என்கிறார்கள். சரவணனை விசாரித்த பின், அவரின் முக்கியமான நண்பரான ஞானசேகரனும் விசாரிக்கப்பட்டிருக்கிறார். இவர் ரூ.500 கோடிக்கு மேல் பணம் வசூலித்துத் தந்தவர்.

வேலூரைச் சேர்ந்த இன்னொரு முக்கியமான ஏஜென்டான ஜெகன் நாதனையும் பொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரித்திருக் கிறது. இவர் ரூ.800 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். அதே போல, தெறி செல்வம் ஏஜென்ட் சென்னை கோயம்பேட்டில் அலுவலகம் வைத்திருக்கிறார். ஆனால், திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இவர்தான் பல நூறு கோடிகளை வசூல் செய்து தந்திருக்கிறார். இவர்கள் வசூல் செய்து தந்த தொகையில் 10% கமிஷனாகத் தரப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு பல நூறு கோடிகள் கமிஷனாகக் கிடைத்திருக்க, ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸுக்கு இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகள் கிடைத்திருக்கும்? என்றாலும், பல ஏஜென்டுகளை விசாரித்த பிறகும், அவர்களிடம் இருந்து ரூ.50 கோடிக்கான சொத்து களையே பொருளாதாரக் குற்றப் பிரிவால் முடக்க முடிந்துள்ளது. ஏறக்குறைய 80,000 பேருக்குமேல் முதலீடு செய்துள்ள நிலையில், இந்த சொற்ப தொகையைக் கொண்டு யாருக்கு, எவ்வளவு பணத்தைப் பிரித்துத் தரப் போகிறார்களோ?

வெளிநாட்டுக்கு ஓடிப்போனபின் லுக்-அவுட் நோட்டீஸ்!

இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் மோகன்பாபு ஆகியோர் குடும்ப சகிதமாக வேலூரில் இருந்து தப்பியோடிவிட்டார்கள். கடந்த மாதம் 25-ம் தேதி வரை இவர்கள் வேலூரில் தான் இருந்திருக்கின்றனர். அதன்பிறகு இவர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.

கடந்த ஜூன் மாதம் இறுதி வாரத்திலிருந்தே ஐ.எஃப்.எஸ் பிராடு நிறுவனம் பற்றி ஜூனியர் விகடனிலும், நாணயம் விகடனிலும் தொடர்ந்து கட்டுரைகள் வரத் தொடங்கின. இதைப் பார்த்த மக்கள் தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பத் தரும்படி ஏஜென்டுகள் மூலம் வற்புறுத்தத் தொடங்கினார்கள். ஏஜென்டுகளும் ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸை நச்சரிக்க ஆரம்பிக்க, அவர்கள் உஷாரானார்கள். `இனி இங்கிருந்தால் மாட்டிக் கொண்டுவிடுவோம்; விஜய் மல்லையா, நீரவ் மோடி தப்பியோடியதைப்போல, தாங்களும் வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தனர்.

ஐ.எஃப்.எஸ் பிரதர்களுக்கு லண்டனில் நல்ல தொடர்பு இருந்ததால், அங்கு தப்பிச் செல்ல முடியுமா என்பது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளனர். இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த பின்பு, அவர்கள் லண்டனுக்குத் தப்பியோடி இருக்கலாம் என்று சொல்கிறார்கள் சிலர். இன்னும் சிலர், ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ் சிங்கப்பூருக்குத் தப்பியோடி இருக்கலாம் என்கிறார்கள். ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ் இந்தியாவில் இருக்கிறார்களா அல்லது வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார்களா என்கிற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்காமல், ஏஜென்டுகளை மட்டும் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை.

ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விடாமல் இருக்க, ‘லுக் அவுட்’ நோட்டீஸையும் பொருளாதாரக் குற்றப் பிரிவு, விமான நிலையங்களுக்கு அனுப்பியிருக்கிறது. அவர்கள் இனிமேல்தான் வெளிநாட்டுக்குச் செல்லப் போகிறார்கள் எனில், இந்த ‘லுக் அவுட்’ நோட்டீஸால் பயன் உண்டு. ஆனால், ஏற்கெனவே வெளிநாட்டுக்குச் சென்றிருந்தால், இந்த ‘லுக் அவுட்’ நோட்டீஸால் என்ன பிரயோஜனம்? மோசடி செய்தவர்கள் கண் எதிரில் நின்றபோது கைது செய்யாமல் விட்டுவிட்டு, இப்போது தப்பிப்போன பின்பு வீரவசனம் பேசுவது மக்களை ஏமாற்ற நடத்தப்படும் நாடகம் என்கிறார்கள் பணத்தைப் போட்டு இழந்தவர்கள்.

ஹவாலா மூலம் வெளிநாட்டுக்குப் போன பணம்...

ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் தலைமறைவாவதற்கு முன்பு ரூ.9,000 கோடி ஹவாலா மூலம் லண்டனுக்கு அனுப்பப் பட்டு இருப்பதாகவும் தகவல் கள் வலம் வருகிறது. இதைக் குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து உண்மையை வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பாக தமிழக அரசின் மீது பல வகையிலும் நெருக்கடி கள் அதிகரித்த பிறகும், தமிழக முதல்வர் போதை மருந்து விற்பனையில் காட்டும் கொதிப்பு, ஐ.எஃப்.எஸ் விஷயத்தில் இல்லையே, அது ஏன் என்று கேட்கிறார்கள் பணத்தை இழந்த மக்கள்!

மருமகனின் பெயர் அடிபட முதல்வர் எப்படி அனுமதிக்கிறார்..?

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முக்கியமான ஏஜென்டான ஞானசேகரன் தியாகராஜன் அனுப்பிய செய்தி எனக் கடந்த புதன்கிழமை அன்று வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வந்தது. ‘‘பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் என் செல்போனைப் பறித்து வைத்துள்ளனர். இதனால்தான் நான் யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. 15-ம் தேதி வரை பொறுங்கள். அதற்குள் எல்லாப் பிரச்னைகளையும் சரிசெய்து விட்டு, நமக்குத் தகவல் தருவார் லட்சுமி நாராயணன். அதன்பிறகு நம்முடைய பணம் நமக்கு திரும்பக் கிடைத்துவிடும்’’ என்கிறது அந்தச் செய்தி. லட்சுமி நாராயணன் அப்படி என்ன பிரச்னையை சரிசெய்யப்போகிறார் என்று விசாரித்தால், ‘‘ஐ.எஃப்.எஸ் பிரச்னையில் முதல்வரின் மருமகன் ரூ.4,000 கோடி அளவுக்குப் பேரம் பேசுகிறார். அவர் கேட்கும் பணத்தைத் தந்துவிட்டால், மீண்டும் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தைத் தொடங்கிவிடலாம். எனவே, அவசரப்பட்டு, ஐ.எஃப்.எஸ் மீதோ, ஏஜென்டுகள் மீதோ காவல் துறையில் புகார் தர வேண்டாம்’’ என்று சில ஏஜென்டுகள் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்களாம். இந்த விவகாரம் தொடர்பாக பேசும் காஞ்சிபுரம் கழகக் கண்மணிகள் சிலர், ‘‘எந்தப் பிரச்னை என்றாலும் முதல்வரின் மருமகன் பெயர் அடிபட ஆரம்பித்துவிடுகிறது. ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மீது ஆரம்பித்திலேயே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இது மாதிரியான சர்ச்சையில் தேவை இல்லாமல் மருமகன் பெயர் அடிபட வாய்ப்பிருந்திருக்காது. எதிர்காலத்திலாவது உடனடி நடவடிக்கை மூலம் இப்படிப்பட்ட சிக்கல்கள் எழாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’ என்று வருத்தப்படுகிறார்கள்.