Published:Updated:

இறக்குமதி வரி நீக்கம்... சமையல் எண்ணெய் விலை குறையுமா?

 வரி நீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
வரி நீக்கம்

வரி நீக்கம்

இறக்குமதி வரி நீக்கம்... சமையல் எண்ணெய் விலை குறையுமா?

வரி நீக்கம்

Published:Updated:
 வரி நீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
வரி நீக்கம்

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 20 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்த வரி விலக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2022-23, 2023-24 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெய்யை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் காரணமாக சமையல் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. காரணம், இந்தியாவின் பெரும்பான்மை சமையல் எண்ணெய் தேவையை ரஷ்யா, உக்ரைன் பூர்த்தி செய்து வந்தது. மேலும், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதி வரி நீக்கம்... சமையல் எண்ணெய் விலை குறையுமா?

ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் திடீரென்று இந்தோ னேசியாவும் பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவே, சமையல் எண்ணெய்களில் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் சமையல் எண்ணெயின் விலை சுமார் 100% அளவுக்கு உயர்ந்தது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப் பட்டு வந்த மக்கள் அடுத்தடுத்து விலை உயர்வுக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து சமையல் எண்ணெயின் விலை குறையுமா என மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

``விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கும் சமயத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதிக் கான வரி ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்தி வந்ததும் சமையல் எண்ணெய் விலை குறையும் என மக்கள் எல்லோரும் நினைக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

ஆனால், இந்த அறிவிப்பின் தாக்கம் நடைமுறையில் எப்படி பிரதிபலிக்கும் என்பதே ஜூன் மாதத்தில்தான் தெரியவரும். வெளிநாடுகளிலிருந்து சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்கள், இந்த அறிவிப்பானது இனி இறக்குமதி செய்யப்படுவதற்கான எண்ணெய் களுக்குத்தான் பொருந்தும் என்றும், ஏற்கெனவே இறக்குமதி செய்த, தற்போது சுத்திகரிப்பு மற்றும் விற்பனையில் உள்ள எண்ணெய் களுக்குப் பொருந்தாது என்றும் சொல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. எனவே, சமையல் எண்ணெய் விலை குறையுமா என்பது தெரிவதற்கு குறைந்தபட்சம் ஜூன் மாதம் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

அதே சமயம், நம்மவர்கள் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் விதம் கடந்த 25 வருடங்களாகப் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவித்து அதன் பயன்பாட்டை அதிகரிக்காமல் விட்டுவிட்டோம். இன்று முழுக்க முழுக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத் துக்கு நாம் ஆளாக இதுவே காரணம். இன்றும் மக்கள் சூரியகாந்தி, பாமாயில், சோயா எண்ணெய் களைத்தான் தேடித் தேடி பயன் படுத்துகிறார்கள். இவற்றின் விலை அதிகம் என்பது பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட்ட மாதிரி தெரியவே இல்லை. கடலை எண்ணெய், நல்லெண்ணெய்க்கு மக்கள் மாறத் தயாராக இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை.

எல்லோரும் இறக்குமதி எண்ணெய்களுக்குப் பழகி விட்டார்கள். ஆனால், உள்நாட்டு எண்ணெய் வகைகள் அதிக ஆரோக்கியமானதாகவும், விலையும் ஓரளவுக்குக் குறைவானதாகவும் இருக்கிறது. விலைவாசி உயர்வை சமாளிக்க உள்நாட்டு எண்ணெய்களைப் பயன்படுத்துவது பற்றி மக்கள் யோசிப்பது அவசியம்” என்றார்.

அடுத்த சில மாதங்களுக்குப் பிறகாவது சமையல் எண்ணெய்களின் விலை குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் சில நூறு ரூபாய் களையாவது மக்களால் மிச்சப்படுத்த முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism