Published:Updated:

``அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியச் சந்தை முதல் இரண்டு இடங்களில் இருக்கும்’’ - சங்கர் சர்மா!

பங்குச் சந்தை
News
பங்குச் சந்தை

கடந்த ஓராண்டு காலத்தில் மற்ற நாட்டு சந்தைகளைவிட இந்தியப் பங்குச் சந்தை சிறந்து விளங்குகிறது என்பதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் முதல் இரண்டு இடங்களில் இந்தியச் சந்தை இருக்கும் என்று சொல்கிறார் இன்வஸ் டெகின் நிறுவனர் சங்கர் சர்மா.

``அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியச் சந்தை முதல் இரண்டு இடங்களில் இருக்கும்’’ - சங்கர் சர்மா!

கடந்த ஓராண்டு காலத்தில் மற்ற நாட்டு சந்தைகளைவிட இந்தியப் பங்குச் சந்தை சிறந்து விளங்குகிறது என்பதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் முதல் இரண்டு இடங்களில் இந்தியச் சந்தை இருக்கும் என்று சொல்கிறார் இன்வஸ் டெகின் நிறுவனர் சங்கர் சர்மா.

Published:Updated:
பங்குச் சந்தை
News
பங்குச் சந்தை

நம்முடைய பங்குச் சந்தையின் எதிர்காலம் குறித்து நம்மில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் மற்ற நாட்டு சந்தைகளைவிட இந்தியப் பங்குச் சந்தை சிறந்து விளங்குகிறது என்பதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் முதல் இரண்டு இடங்களில் இந்தியச் சந்தை இருக்கும் என்று சொல்கிறார் இன்வஸ் டெகின் நிறுவனர் மற்றும் பங்குச் சந்தை நிபுணர் சங்கர் சர்மா. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் இனி..

பங்குச் சந்தை நிபுணர் சங்கர் சர்மா
பங்குச் சந்தை நிபுணர் சங்கர் சர்மா

``இந்திய பங்குச் சந்தைகள் உலக நாடுகளுடன் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. ஜனவரி 2008 முதல் பிப்ரவரி 2020 க்கு இடையில், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளில் 21,000 இருந்து 37,000 வரை அதிகரித்துள்ளது. சுமார் 16000 புள்ளிகளைப் பெற்றது. இது ரூபாய் அடிப்படையில் 4%-5% வருடாந்திர கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் ஆகும். கடந்த காலத்தில் நம் சந்தை சில ஆண்டுகளுக்கு சரியாக செயல்படாமல் போயிருக்கலாம். ஆனால், இது இந்தியச் சந்தைக்கான நேரம். கடந்த 12 மாதங்களில் மற்ற உலக நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது.

இன்றைய நிலையில், இந்தியா போல அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக செயல்படும் நாட்டைக் கண்டுபிடிப்பது கடினம். எந்த முதலீட்டாளர்களும் ஜப்பான், தாய்வான் போன்ற நாடுகளின் மீது கவனம் செலுத்துவது இல்லை. இந்த நாடுகள் என்ன தான் தொழில்நுட்பத்தில் மிகச் சிறப்பான வளர்ச்சி கண்ட நாடாக இருந்தாலும், இதன் வளர்ச்சி செமி கன்டக்டர் சந்தையின்‌ அடிப்படையில்தான் இருக்கிறது‌. சுற்றுலாத் தலமாக இருப்பதைத் தவிர, ஐரோப்பாவிற்கு எதிர்காலம் இல்லை என்று தோன்றுகிறது. இது காலத்திற்கு ஏற்றார் போல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை‌.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்தியா உலகிற்கு ஒரு “நல்ல பிள்ளையாக” விளங்கிறது. மக்கள் என்னதான் சீனாவுடன் வர்த்தகம் செய்தாலும் ‌சில காரணங்களால் அவர்களுக்கு அது பிடிப்பதில்லை. இதற்கு எதிர்மறையாக இந்தியா இருக்கிறது. இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். உலகப் பொருளாதார நிலப்பரப்பில் இந்தியர்கள் பொதுவாக நல்ல நடத்தை மற்றும் மாதிரி மாணவர்களாக இருந்து வருகிறார்கள். அதற்கான வெகுமதியை இந்தியர்கள் பெற்றுவருகிறார்கள்.

இந்தியா விரைவில் சிறந்து விளங்கும் நாடாக அல்லது உலகின் முதல் இரண்டு செயல்திறன் மிக்க சந்தைகளாக இருக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாததாகவும் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இயற்கையின் விளையாட்டு எப்படி இருந்தாலும் இந்த வளர்ச்சி நீடித்து இருக்கும். பெரிய பொருளாதாரம் இருக்கும் நாடுகள் `பியர் மார்கெட்’ எனப்படும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு உள்ளானால்,  அதிலிருந்து மீண்டு வருவது கடினம். இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு, அது ஒரு சூப்பர் ஸ்டாரைப் போன்றது; அதை மீண்டும் மோசமாக்க முடியாது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்திய சந்தையின் வளர்ச்சியானது அடுத்த 5 வருடங்களுக்கு நீடிக்கும். 12 வருடங்களாக பின்‌தங்கிய‌ நிலையில் இருந்து 2020 -ல் நம் செயல்பாடுகளால் இந்தியாவின் நிலை மாற்றம் பெற ஆரம்பித்துவிட்டது’’ என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்தும் அவர் பேசி இருக்கிறார். ‘‘இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கக் கூடாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் செய்த தவறு இதுதான். வட்டி விகித்தை உயிர்த்துவதால் நாம் எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது. பணவீக்கம் குறையாமல், வளர்ச்சிதான் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி விகிதங்கள் அல்லது சொத்துகளை  வைத்திருக்கும் காலம் அரசு கவனம் செலுத்தாது என்று நம்புகிறேன். வரி திருத்தத்திற்கான கதவு திறந்தவுடன், அது ஒருபோதும் மூடாது. பங்குச் சந்தைகள் உற்சாகமாக உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.