Published:Updated:

`வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலஅவகாசம்!’- நேரடி வரிகள் வாரியம்

வருமான வரி
வருமான வரி

வருமான வரி: கொரோனா பாதிப்பால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருவதால் இம்முடிவை எடுத்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக 2019-20 நிதியாண்டுகான வருமான வரி தாக்கல் செய்ய நவம்பர் 30, 2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பான் கணக்குடன் ஆதார் எண் இணைக்க மார்ச் 31, 2021 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டுவருவதால் இம்முடிவை எடுத்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

வருமான வரி
வருமான வரி
Representational Image

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆறுதலளிக்கும் விதமாக, சுய மதிப்பீட்டு வரி தாக்கல் செய்வோரின் வரித்தொகை ஒரு லட்சத்திற்குக் கீழ் இருந்தால், வரி செலுத்த நவம்பர் 30, 2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை சுய மதிப்பீட்டு வரி பொறுப்பு ரூ .1 லட்சத்திற்கு மேல் உள்ள வரி செலுத்துவோருக்குப் பொருந்தாது.

மேலும், வருமான வரி சட்டம் பிரிவு 80 சி (எல்ஐசி, பிபிஎஃப், என்எஸ்சி), 80 டி (மெடிகிளைம்), 80 ஜி (நன்கொடைகள்) ஆகியவற்றின் கீழ் 2019-20 நிதியாண்டிற்கான விலக்குகளைக் கோர ஜூலை 31, 2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடி சட்டத்தின் 54 முதல் 54 ஜிபி பிரிவுகளின் கீழ் மூலதன ஆதாயங்கள் தொடர்பாக ரோல்-ஓவர் விலக்குகளைக் கோருவதற்கான முதலீடு/கட்டுமானம்/கொள்முதல் செய்வதற்கான தேதி, செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வருமான வரி
வருமான வரி

டி.டி.எஸ் / டி.சி.எஸ் அறிக்கைகளை வழங்குவதற்கான தேதி ஜூலை 31 2020 வரையும், டி.டி.எஸ் / டி.சி.எஸ் சான்றிதழ்களை வழங்குவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15, 2020 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு