Published:Updated:

அதிகரிக்கும் பணவீக்கம்... என்ன செய்ய வேண்டும் இந்தியா..?

பணவீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பணவீக்கம்

பணவீக்கம்

அதிகரிக்கும் பணவீக்கம்... என்ன செய்ய வேண்டும் இந்தியா..?

பணவீக்கம்

Published:Updated:
பணவீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பணவீக்கம்

'பணவீக்கம் என்பது சட்டப்படி இல்லாத வரிவிதிப்பு’ என்று 1976-ம் ஆண்டு பொருளாதரத்துக்காக நோபல் பரிசு பெற்றவரும் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் நிபுணருமான மில்டன் ஃப்ரைட்மேன் கூறியது இப்போது உண்மையாகி வருகிறது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும் பொருட்டு வரி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக் கல்ல. பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய அரசியல் நெருக்கடியால் நமது அண்டை நாடான இலங்கை படாதபாடுபட்டு வருகிறது.இலங்கை மட்டுமல்லாமல், பணவீக்கத்தை எதிர்த்து லிபியா, அர்ஜென்டினா, கானா, பெல்ஜியம், அயர்லாந்து, இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் மக்கள் தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்திருக் கிறார்கள். பொதுச் சொத்துகள் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன, போராட்டங்களில் ஈடுபட்ட பல சாமான்யர்கள் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்திருக்கிறார்கள்.

தற்சமயம் நமது ரிசர்வ் வங்கிக்குத் தலை வலியாக இருப்பதும் இந்தப் பணவீக்கம்தான். இந்தியாவில் பணவீக்கமானது கடந்த மே மாத நிலவரப்படி, மொத்த விலை குறியீட்டின்படி (Whole Sale Price Index), 15.58 சதவிகிதமாகவும், நுகர்வோர் பொருள்கள் குறியீட்டின்படி (Retail Price Index) 7.04 சதவிகிதமாகவும் இருந்து வருகிறது.

உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுதான். நுகர்வோர் பொருள்கள் குறியீட்டின் அதிகரிப்பின் முக்கியமான காரணிகள் ஆகும். இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கியானது தனது வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து இரு தவணைகள் மூலம் 4.9 சதவிகிதமாக உயர்த்தி யிருக்கிறது.

அதிகரிக்கும் பணவீக்கம்... என்ன செய்ய வேண்டும் இந்தியா..?

ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கிக்கு இருக்கும் பொறுப்புகளில் முக்கியமான ஒன்று பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும். அதன்படி, நமது ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தை 4% என்கிற கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது 2% அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு இது 6% என்கிற அதிகபட்ச வரம்பையும் தாண்டி 7.04 சதவிகிதமாக இருக்கிறது.

பணவீக்கத்துக்கானக் காரணங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், ‘`சர்வதேச அளவில் அதிகரித்துவரும் பொருள்களின் விலையும், பொருள்களைக் கொண்டுவருவதில் ஏற்பட்டிருக்கும் இடையூறுகளும், விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் உள்ளீட்டுச் செலவை அதிகமாக்கி இருக்கிறது. அதனால் சில்லறை விலையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கு தொடர் கண்காணிப்பும், முனைப்புடன் (proactive) கூடிய விநியோக மேலாண்மையும் அவசியமாகும்’’ எனக் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் சிஸ்டம் (US Fed) அதனுடைய ஃபண்ட் விகிதத்தைக் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 0.75% அதிகரித்திருக்கிறது. இதனால் ஏற்கெனவே தங்களது பர்சை ‘துளாவி’க்கொண்டிருந்த அமெரிக்கர்கள், இன்னும் அதிகமாகத் துளாவ வேண்டிய அளவுக்கு எரிவாயு, பலசரக்குச் சாமான்கள், கடனுக்கான வட்டி, கடன் அட்டைக்கான வட்டி ஆகியவை அதிகரித்திருக் கின்றன. ஆக, இன்றைக்கு வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என எதையும் விட்டுவைக்காமல் எங்கும் பணவீக்கம் வியாபித்திருந்தாலும், இதனுடைய தாக்கத்தால் ஏற்பட்டிருக் கும் விலைவாசி உயர்வில் நாட்டுக்கு நாடு வித்தியாசம் இருக்கிறது.

மற்ற வளர்ந்துவரும் நாடுகளைப்போல, இந்தியாவுக்கு இரண்டு பக்கமும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அவை அதிகரித்துவரும் பணவீக்கமும், வெளியே சென்றுகொண்டிருக்கும் அந்நிய நாட்டு நிதியும் ஆகும். நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவிலிருந்து வெளியே சென்ற அந்நிய நாட்டு முதலீட்டாளர்களின் நிதி சுமார் ரூ.2,00,000 கோடி ஆகும். இது 2021-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் ரூ.25,752 கோடியாக இருந்தது. இனிவரும் நாள்களிலும் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களின் நிதி இந்தியாவை விட்டுச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், அமெரிக்க ஃபெட் எக்ஸ் வட்டி விகிதத்தை இன்னும் உயர்த்தக்கூடும் என்பதுதான்.

அமெரிக்க ஃபெட்டின் வட்டி உயர்வின் தாக்கமாக இந்த மாதிரியான எதிர்மறை விளைவுகள் இருந்தாலும், ஒரு சில நல்ல விளைவுகளும் இதனால் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. அவையென்ன? டாலருக்கு எதிராக நமது ரூபாய் பலவீனம் அடைந்திருப்பது ஏற்றுமதியை அதிகரிக்க உதவும், வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்பவர்களின் வட்டித் தொகை அதிகரிக்கும்.

ஆசிய நாடுகளில், இந்தியாவில் வட்டி விகிதம் அதிகரித் திருக்கும் அதே வேளையில், சீனாவில் வட்டி சதவிகிதத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஜப்பானில் இன்னும் வட்டி சதவிகிதம் எதிர்மறையிலேயே (Negative) இருக்கிறது.

மத்திய வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது ஒரு இக்கட்டான காலகட்டம். பெரும்பாலான பொருள் களின் விலை உயர்வுக்கு வழி வகுத்திருக்கும் காரணங்களில் விநியோகத்தில் ஏற்பட்டிருக் கும் இடையூறு முக்கியமான ஒரு காரணம் என்று அவர் களுக்குத் தெரியும் என்ப துடன், வட்டி விகிதத்தை அதிகரிப்பதிருப்பதால் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்களின் விலை குறைவுக்கு ஓரளவுதான் உதவி செய்யும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இதைவிட மோசம் என்ன வெனில், வட்டி விகிதத்தை அதிகரிக்கும்பட்சத்தில், அது பொருள்களுக்கான கிராக்கியைக் குறைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை யும் பாதிக்கும். இருந்தாலும் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த அவர்களிடம் இருக் கும் ஆயுதங்களில் ஒன்று, வட்டி விகித உயர்வு.

பணவீக்கத்துடன் மல்லுக் கட்டும் அதே நேரத்தில் மத்திய வங்கியாளர்கள் `பணவீக்கத்தின் எதிர் பார்ப்பை நிலைநிறுத்துவது (Anchoring Inflation Expectations)’ என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதன் பொருள் என்ன? நுகர்வோர் களிடமும், தொழில் செய் வோர்களிடமும், முதலீட் டாளர்களிடமும் எதிர் காலத்தில் எந்த அளவுக்கு விலை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இதைத் தெரிந்து கொள்ள மத்திய வங்கியானது மக்களிடம் அவர்களின் எதிர்பார்ப்பு குறித்து ஆய்வு செய்வதுடன், பேரியல் பொருளாதாரத் தரவுகளை யும் (Macro Economic) பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அதிகரிக்கும் பணவீக்கம்... என்ன செய்ய வேண்டும் இந்தியா..?

பணவீக்க உயர்வைக் காரணமாகக் கொண்டு ஊழியர்கள் அதிக ஊதியம் கேட்பது, விலைகளை வணிகர்கள் உயர்த்துவது போன்ற வடிவங்களில் எதிர் வினையாற்றாமல் இருக்கும் பட்சத்திலான சூழலை ‘நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புகள்’ என்று மத்திய வங்கியாளர்கள் அழைக்கின்றனர். இதற்கு எதிர்மாறான சூழல் ஏற்பட் டால், அது ‘மோசமாக நிலை நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்பு’ என அறியப்படுகிறது.

முன்பு மத்திய வங்கி யாளர்கள் வட்டிவிகிதத் தைக் குறைத்தபோது அது வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆனால், ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்ததால், உலகெங்கிலும் குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் சொத்துப் பெருக்கம் (Asset boom) ஏற்பட்டது. பங்குச் சந்தையில் தொடர்ந்து `காளை’யின் ஆதிக்கம் இருந்தது. அத்துடன், கிரிப்டோ கரன்சி மற்றும் பல நவீன முதலீட்டு வகைகளில் சொத்துக் குமிழ் வெடிப்பு (Asset Bubbles) ஏற்பட்டன.

இன்றைக்கு இருக்கும் நிலை இதற்கு மாறான ஓர் அச்சத்தை வங்கியாளர்களிடமும் ஆட்சியாளர் களிமுடம் ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்த வட்டி விகிதம் எப்படி சொத்துக் குமிழ் வெடிப்புகளை உருவாக்கக் காரணமாக இருந்ததோ, அது போல அதிக வட்டி விகிதம் பணவீக்க எதிர்ப்பார்ப்பை நிலைநிறுத்துவதுடன், குறிப்பிட்ட அளவைவிடக் கூடுதலான தேவையை பாதித்து பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிடுமோ என்பதுதான் அது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 588 பில்லியன் டாலருடன் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இது பாசிட்டிவ்வான விஷயம் என்றாலும், நமது நாட்டின் அந்நிய நாட்டுக் கடன் தொகையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய வங்கியாளர்கள் ஒன்றும் சூப்பர்மேன்கள் இல்லை. அவர்களிடம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இருக்கும் ஆயுதம், வட்டி விகிதத்தைக் கூட்டி, குறைப்பதுதான். எனவே, விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள் அதைச் செய்துதான் ஆக வேண்டும். இன்னொரு பக்கத்தில் மத்திய வங்கியை விட பலம் பொருந்திய அரசாங்கம் இருந்தாலும் அதுவும் சூப்பர்மேன் இல்லை. ஆனால், பணவீக்கத்தை எதிர்த்துப் போராட இதனிடம் மத்திய வங்கி யிடம் இருப்பதைவிட பல்முனைத் தாக்கு தலுக்குத் தேவையான பல ஆயுதங்கள் (உதாரணம், கலால் வரி குறைப்பு, மான்யத் தொகை போன்றவை) இருக்கின்றன. எனவே, மத்திய வங்கியை மட்டும் நம்பியிருக்காமல், மத்திய அரசு தன்னிடம் இருக்கும் அஸ்திரங்களை பயன்படுத்தி, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.