Published:Updated:

அதிகரிக்கும் கடன்தாரர்களின் எண்ணிக்கை! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

LOAN

பிரீமியம் ஸ்டோரி

நம் நாட்டில் ஆண்டுதோறும் 10 கோடி புதிய கடன்தாரர்கள் உருவாகி வருவதாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது இந்திய நாணய மதிப்பீட்டு நிறுவனம். சிபில் (CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD-CIBIL).

இந்த 10 கோடி புதிய கடன்தாரர்களில் 25 சதவிகிதத்தினர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அதாவது, 2.5 இந்திய இளைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பித்ததுமே கடன் வாங்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கடன் வாங்கியவர்களில் 24% பேர் 25 வயதுக்குக் கீழும், 35% பேர் 26 - 35 வயதுக்குள்ளும் 20% பேர் 36 - 45 வயதுக்குள்ளும், 13% பேர் 46 - 55 வயதுக்குள்ளும், 8% பேர் 55 வயதுக்கு மேலும் இருப்பதாக சிபில் அறிக்கை சொல்கிறது.

அதிகரிக்கும் கடன்தாரர்களின் 
எண்ணிக்கை! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இளைஞர்கள் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், நுகர்பொருள்கள் முதலானவற்றுக்கு கடன் பெற்றுள்ள நிலையில், 25% இளைஞர்கள் வீட்டுக் கடன் வாங்கி இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புக்களே புதிய கடன்தாரர்கள் பெருமளவில் உருவாவதற்கு முக்கியமான காரணம். கொரோனாவின் இரண்டாவது அலை பூதாகர மாகி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு