Published:Updated:

கிரெடிட் ஸ்கோரை பார்ப்பவர்கள் எண்ணிக்கை உயர்வு..!

கிரெடிட் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோரை பார்ப்பவர்கள் எண்ணிக்கை உயர்வு..!

கிரெடிட் ஸ்கோர்

Published:Updated:
கிரெடிட் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் ஸ்கோர்

கடந்த மார்ச் மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் ஒருபக்கம் இருக்க, கடன் தகுதியைக் காட்டும் கிரெடிட் ஸ்கோர் பற்றி தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது சிறப்பான விஷயம்.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

கடன் பெற்றவர்கள் நிதிப் பரிவர்த்தனையில் எப்படிப்பட்ட ஒழுங்குடன் இருக்கிறார்கள். என்பதைக் கணக்கீடு செய்யும் முக்கியமான அளவுகோலாக கிரெடிட் ஸ்கோர் விளங்கு கிறது. இந்த கிரெடிட் ஸ்கோரை அளவீடாகக் கொண்டுதான் ஒருவருக்கு தற்போது நிதி நிறுவனங்கள் கடன், கடன் அட்டை போன்ற வற்றை வழங்குகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் ஸ்கோர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது பற்றி பலரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால் கடன்கள் வாங்கிய பலர், சரிவர திரும்பச் செலுத்தாமல் இருந்தனர். இதனால் பலரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட்டு அவர்களுக்குக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது கணிசமான நபர்களுக்கு கிரெடிட் ஸ்கோருடைய முக்கியத்துவம் புரியத் தொடங்கியுள்ளது. www.cibil.com இணையதளத்தில் கேட்கப்படும் சரியான தகவல்களைத் தந்து ஒருவரின் கடன் குறியீட்டு ரிப்போர்ட்டைப் பெற முடியும்.

பைசா பஜார் இணையதளத்தில் கிரெடிட் ஸ்கோரைப் பதிவிறக்கம் செய்யும் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும்கூட பலர் இந்த இணையதளத்தில் இருந்து தமது கிரெடிட் ஸ்கோரைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அந்த இணையதளத்தின் தரவுகளின்படி, 2016-ம் ஆண்டு 33% வாடிக்கையாளர்கள் சிறு நகரம் மற்றும் கிராமங்களில் கிரெடிட் ஸ்கோர் விவரங்களைத் தரவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், அதுவே சென்ற ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி, 75% வாடிக்கையாளர்கள் சிறு நகரம் மற்றும் கிராமங்களில் தமது விவரங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன்மூலம் கிரெடிட் ஸ்கோருடைய முக்கியத்துவம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரியத் தொடங்கியுள்ளது.

கிரெடிட் ஸ்கோரை பார்ப்பவர்கள்
எண்ணிக்கை உயர்வு..!

கிரெடிட் ஸ்கோர் என்பது பொதுவாக, 300 முதல் 900 என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 500 வரை இருந்தால், அவர் கடந்த காலங்களில் பெற்ற கடனை அடைக்கா மல் விட்டுவிட்டார் என்று அர்த்தம். இந்த வகை வாடிக்கையாளர்களுக்குக் கடன் கிடைப்பது சிரமமானது.

ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 500 முதல் 700 என்று அளவுக்கு இருந்தால், அந்த வாடிக்கையாளர் சில தவறுகள் தமது கடன் செயல்பாடுகளில் செய்திருக்கிறார் என்று அர்த்தம். அதிகமாகக் கடன் பெற முயற்சி செய்வது, கடனை முழுவதும் அடைக் காமல் ஒன் டைம் செட்டில் மென்ட் மூலம் கடனை அடைத்தது போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் இந்தப் படிநிலைகளில் இருக்கலாம். இவருக்குக் கடன் கொடுப்பது சற்று ரிஸ்க் அதிகம் என்று வங்கிகள் நினைக்கும். அதனால் கடன் கொடுக்கும்போது மேலும் பல தகவல்களைக் கேட்டுப் பெற்று தகுந்த பரிசீலனைக்குப் பிறகு மட்டுமே கடன் தொகை அளிக்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் கடனுக்கான வட்டியும் சற்று அதிகமாகவே இருக்கலாம்.

ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால், அவருக்குக் கடன் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. 700 முதல் 900 புள்ளிகள் வரை கடன் குறியீட்டு எண்ணை ஒருவர் வைத்திருந் தால், அவர் நம்பத்தகுந்த வாடிக்கை யாளர் என்று வங்கியால் கருதப்படுவார். அதுவே நல்ல கிரெடிட் ஸ்கோர்.

நகரங்களில் வசிக்கும் 43% மக்கள் 700 புள்ளிகளுக்குமேல் பெற்றுள்ளனர். அதுவே சிறு நகரம் மற்றும் கிராமங் களில் 700 புள்ளிகளுக்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களின் அளவு 36 சதவிகிதமாக உள்ளது. இதுபோன்று ஒவ்வொருவரும் தமது கிரெடிட் ஸ்கோரைத் தரவிறக்கம் செய்து கண்காணித்து வருவது நல்ல பலனைத் தரும். கடனைத் திரும்பச் செலுத்துவதில் செய்யும் சிறு தவறுகள் பெருமளவில் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அது பற்றிய விவரங்களை அறியாமல் இருந்தால் ஒருவருக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவர் தனது கிரெடிட் ஸ்கோரைத் தரவிறக்கம் செய்து கண்காணித்து வருவது இதுபோன்ற தவறுகளில் இருந்து காப்பாற்றும். கிரெடிட் ஸ்கோர் குறையும்போது அதைத் தெரிந்து கொள்வதால், விரைவாக அதைச் சரிசெய்துவிட முடியும். எனவே, கிரெடிட் ஸ்கோர் பற்றி அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism