Published:Updated:

ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல் விலை... எப்படிச் சமாளிக்கலாம்..? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்

பெட்ரோல் விலை ஏறினால்...
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் விலை ஏறினால்...

I N T E R A C T I O N

ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல் விலை... எப்படிச் சமாளிக்கலாம்..? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்

I N T E R A C T I O N

Published:Updated:
பெட்ரோல் விலை ஏறினால்...
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் விலை ஏறினால்...

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டிவிடும் போலிருக் கிறது. அரசாங்கம் இதன் விலையைக் குறைக்கிற மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், என்ன செய்து இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் யோசனைகளைச் சொன் னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே!” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்களும் தங்களது ‘நச்’ யோசனைகளைச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருந்தார்கள்.

“தூரமான இடத்துக்கு மட்டும் பைக். 10-15 நிமிஷத்துல போகக்கூடிய தூரம்ன்னா நடக்க வேண்டியதுதான். தினமும் வேலைக்குப் போக (உடல் உழைப்பு குறைவான வேலை) சைக்கிள் வாங்கி உபயோகப்படுத்த லாம். இ-பைக் வாங்கலாம். ஆனால், நல்ல இ-பைக் வாங்க ரூ.1,30,000 செலவு ஆகுது! சென்னை போன்ற இடங்களில் தூரமாகச் செல்ல பொது போக்குவரத்துக்கு மாறிடலாம். பொதுப் போக்குவரத்து முனையத்தி லிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு வாடகைக்கு விடப்படும் இ-பைக் / சைக்கிளை உபயோகப்படுத்தலாம். கிராமப்புறங்களில் உள்ளவர் களுக்குத்தான் வேறு வழியே இல்லை பெட்ரோல்/டீசல் விலை உயர்வு பெரிய அடிதான் அவங்களுக்கு!”னு ஒரு டஜன் ஐடியா கொடுத்துருக்காரு முகுந்தன்! பலே பலே!

“தினமும் வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போது கட்டாயம் கிக் ஸ்டார்ட் பண்ணணும். கண்டிப்பாக மாதம் ஒருமுறை சர்வீஸ் மெய்ன்ட் டெய்ன் பண்ணணும். நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒன்று நம் வண்டி. சீரான வேகம் மிக நன்று. முக்கியமா, நம்மளைத் தாண்டி யாராவது போய்ட்டா அவங்களை முந்தணுங்கிற மனநிலையை மாத்திக் கிட்டா பெட்ரோல்ல கொஞ்சம் மிச்சம் பிடிக்கலாம்”னு கமென்ட் பண்ணிருக்காங்க வாணி! ரைட்டு மேம்!

ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல் விலை... எப்படிச் சமாளிக்கலாம்..? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்

“சைக்கிள். பழைய ஸ்டைலில் மிதிக்கிற மாதிரியும், கரன்ட் மற்றும் மிதிப்பதிலும் சார்ஜ் ஆகி, ஸ்பீடு (60 வரை) போகிற மாதிரியும், தரமான கம்பெனிகளால் தயாரிக்கப்பட வேண்டும். விலையும் இன்றைய மதிப்பில் 20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வங்கிகள் இதற்கு லோன் வழங்கினால் இன்னும் சிறப்பு”னு தன்னோட ஐடியாவை சொல்லிருக் காரு ஹனீஃபா. சூப்பர் சார்!

“பெட்ரோல் விலையேற்றம் வாகனங்களுக்கு மட்டுமானது என நினைக்கிறோம். ஆனால், மறை முகமாக அனைத்துப் பொருள்களின் மீதும் இதன் தாக்கம் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் என்னவோ நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மட்டுமே” எனத் தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக் காரு ஜெகதீசன். நிதர்சன உண்மைஜி!

“எலெக்ட்ரிக் அல்லது தண்ணீரில் ஓடும் வண்டியாக மாற்றிதான் ஓட்ட வேண்டும். இதற்கு சில வல்லுநர்கள் உள்ளனர். தமிழ்நாடு அரசு முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை”னு சொல்லிருக்காரு குருவேல். சார்... யாரைக் கலாய்க் கிறீங்கன்னு சொன்னா, கொஞ்சம் நல்லா இருக்கும்!

“உள்ளூர் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்கலாம். வீட்டிலேயே காய்கறிகள் பயிரிடலாம். பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம், பள்ளிகள் கல்லூரிகளுக்குச் சைக்கிளில் போகும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம். இதனால் டீசல், பெட்ரோல் தேவை குறையும்”னு சொல்லிருக்காரு யாசர். நல்ல ஐடியா!

“ரேட் எவ்வளவு அதிகரிச்சாலும் 100 ரூபாய்க்குத்தான் போட வேண்டும்!”னு ஒரு போடு போட்ருக்காரு மஹி! அட, இது நல்லா இருக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism