Published:Updated:

இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை!

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

பொருளாதாரம்

இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை!

பொருளாதாரம்

Published:Updated:
பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

பெரும் பணக்காரர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இத்தனை காலமும் பின்தங்கி இருந்தது நம் நாடு. இப்போது மற்ற நாடுகளை விட இந்தியா அதிகமான ‘ஹைநெட் வொர்த்’ (HNI) பணக்காரர்கள் நம் நாட்டில் உருவாகி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமல்ல, அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ஹெச்.என்.ஐ-களின் எண்ணிக்கை பல மடங்கு ஆகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்களைத்தான் ஹெச்.என்.ஐ என்கிற உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் எனக் குறிப்பிடு கிறோம். இந்தியாவில் 3,57,000 பேர் ஹெச்.என்.ஐ-களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 80% அளவுக்கு அதிகரிக்கும் என ஹென்லே குளோபல் சிட்டிசன் ரிப்போர்ட் தெரிவித்து உள்ளது. அது மட்டுமல்ல, ஒரு மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7.8 கோடி) சொத்து மதிப்பு கொண்டவர்கள் நம் நாட்டில் மொத்தம் 3,57,000 பேர் இருப்பதாகவும் இந்த ரிப்போர்ட் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் அதிகரிக்கும்  
பணக்காரர்களின் எண்ணிக்கை!

10 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.78 கோடி) சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 22,400 பேர் இருக்கின்றனர். 100 மில்லியன் உயர் மதிப்பு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.780 கோடி) கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை 1,149-ஆக இருக்கிறது. ஒரு பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,800 கோடி) கொண்டவர்கள் 128 பேர் இருப்பதாக இந்த ரிப்போர்ட் மூலம் தெரியவந்திருக்கிறது.

நம் நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை. சாதாரண மக்கள் சம்பாதிக்கும் தொகையையும் வேகமாக அதிகரித்து வருவதாக அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. முன்பு சராசரியாக நாளொன்று 2 டாலர் என்கிற அளவில் இருந்த நம் மக்களின் வருமானம், இப்போது 5 டாலர் அளவுக்கு வளர்ந்திருப்பதாகச் சொல்கிறது இந்த ரிப்போர்ட். அதாவது, ஆண்டு ஒன்றுக்கு ஒருவர் 1,928 டாலர் சம்பாதிப்பதாக இந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism