Published:Updated:

பொருளாதார ஏற்றத்தாழ்வு... மோசமான சூழலில் இந்தியா!

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதாரம்

பொருளாதாரம்

ஏழ்மை நிலையை வேகமாகக் குறைக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உலக வங்கி யால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரத்தைப் பார்க்கும் போது இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே தெரிகிறது.

சமீபத்தில் பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் பெர்க்லே பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் உலக நாடுகளின் சமத்துவமின்மைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனத் தெரிவித்துள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு...
மோசமான சூழலில் இந்தியா!

இந்தியாவின் 22% வருமானம் வெறும் 1% செல்வந்தர்களுக்குச் சொந்தமாக உள்ளதாகவும், நாட்டின் 57% வருமானம் 10% செல்வந்தர்களிடம் உள்ளதாகவும் கூறியுள்ளதாகவும், ஆனால் 50% மக்களிடம் வெறும் 13% வருமானம் மட்டுமே உள்ளதாகவும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, 1% செல்வந்தர் களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.3.25 கோடி. 10% செல்வந்தர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.63.5 லட்சம். ஆனால், நாட்டில் 50% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.66,280 மட்டுமே. இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.7,23,930 ஆகும். மேலும், இந்திய இளைஞர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,04,200-ஆக உள்ளது. இதிலும் 50% இளைஞர் களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ.53,610 மட்டுமே.

இந்தப் பொருளாதார சமத்துவமின்மைக்கு முக்கியமான காரணமாக கொரோனா பாதிப்பு உள்ளது. தற்போது பொருளாதாரம் ஓரளவுக்கு மீண்டுவந்திருந்தாலும், இடையில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளவே முடியாத சூழலில் கணிசமான மக்கள் உள்ளனர். இதனால் நடுத்தர வர்க்கத்தில் இருந்த மக்களில் கணிச மான சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் தள்ளப்பட்டனர். இது சமூகத்தில் வரும் காலங் களில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.