தங்கம், வெள்ளியை அடுத்து உலக சந்தையில் வைரமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலும் பணக்காரர்கள் மட்டுமே வைரங்களை வாங்குவார்கள் என்ற நிலை மாறி தற்போது நடுத்தர வர்க்கத்தினரின் பார்வையும் வைரத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சூழலில், `உலக வைர சந்தையில் இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது' என்று தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின்போது உலக அளவில் வைர சந்தை மிகவும் மோசமாக இருந்தது. தற்போது படிப்படியாக மீண்டு வைர வியாபாரத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில் தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவைரத்தின் தேவை அதிகரிப்பு...
`பெண்கள் மதிப்புமிக்க உலோகங்களை வாங்குவது உலக அளவில் அதிகரித்துள்ளது. அந்தப் பட்டியலில் வைரமும் இணைந்துள்ளது. வைரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் வைர வியாபாரம் எதிர்பார்ப்பையும் தாண்டி நல்ல நிலையில் உள்ளது. இது ஆரோக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது ஷோரூம்களில் தங்கம், வெள்ளி மட்டுமின்றி வைரத்திற்கு என தனிப்பிரிவுகள் பல கடைகளில் ஆரம்பித்துள்ளனர். ஷோரூம்களில் மட்டுமின்றி ஆன்லைனிலும் வைர வியாபாரம் செய்யப்படுகிறது. இது வைர வியாபாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி" என்று வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தியா 3 -வது இடம்...
வைர வியாபாரத்தில் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் அமெரிக்காதான் உள்ளது. அந்நாடு உலக வைர சந்தையில் சுமார் 50 சதவீத வைரத்தை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவை அடுத்து வைரச் சந்தையில் சீனா உள்ளது. அந்நாடு உலக அளவில் 16 முதல் 17 சதவீதம் வரை விற்பனை செய்துவருகிறது. அமெரிக்கா, சீனாவை அடுத்து உலக வைர சந்தையில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது 5 முதல் 6 சதவீதம் வைரங்களை இந்தியா விற்பனை செய்து வந்தாலும் வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தங்கம் நமது பாரம்பரியமான மற்றும் சேமிப்பு உலோகமாக இருந்தாலும் சுமார் 20 சதவிகிதம் இளம் பெண்கள் தற்போது வைர நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், வைரம் பெருமை மிகு அடையாளமாக கருதப்படுவதுதான். வாங்கிய வைர நகைகளை தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பதிவு செய்வதை பலரும் பெருமையாக நினைக்கின்றனர். இதனால் வைரம் வாங்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மண்ணில் வெட்டி எடுக்கும் வைரங்கள் தவிர ஆய்வகத்தில் செய்யப்படும் வைரங்களுக்கும் உலக அளவில் ஒரு தனி இடம் கிடைத்து வருகிறது என்றும் இது வைர வியாபார சந்தையில் ஒரு மிகச் சிறந்த அம்சமாகவே பார்க்கப்படுகிறது" என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது அனைத்து மக்களும் வாங்கும் பொருளாக மாறினால் இந்த வியாபாரம் இன்னும் சிறப்பாக மாறுமா என பார்ப்போம்.