Published:Updated:

இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாகச் சரிவு!

கடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த காலாண்டுதான் மிகவும் குறைவான வளர்ச்சிவிகிதத்தை எட்டியுள்ளது. 20-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருந்தது.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவு!
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவு! ( vikatan )

பொருளாதார நிபுணர்கள் பலரும் எதிர்பார்த்ததுபோலவே நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நம் நாட்டு ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கடந்த காலாண்டைவிடக் குறைந்து 4.5 சதவிகிதமாக உள்ளது. முதலாவது காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் தற்போது 0.5% குறைந்துள்ளது. அதேவேளை, கடந்த 2018-19 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவு!
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவு!
vikatan

கடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்தக் காலாண்டுதான் மிகவும் குறைவான வளர்ச்சிவிகிதத்தை எட்டியுள்ளது. 2013-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருந்தது. அதையடுத்து, மீண்டும் தற்போதுதான் மிகக்குறைவான ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருக்கிறது.

அதேபோல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நிதிப்பற்றாக்குறை அளவு ரூ.7.2 லட்சம் கோடியாக உள்ளது. இதன் விகிதம் 102.4 சதவிகிதமாகும். பட்ஜெட் அறிக்கையின்போது நிதிப்பற்றாக்குறை அளவு 7.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், 7 மாதங்களுக்குள் அந்த அளவைத் தாண்டிவிட்டது. எனவே, இந்த விகிதம் இரு மடங்காக உயர்வதற்கும் வாய்ப்புள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

இரண்டு நாள்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `இருக்கு ஆனால் இல்லை!' என்பதுபோல, ``பொருளாதார மந்த நிலை இருக்கலாம், ஆனால் அபாயகரமாக இல்லை" என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது கிடைத்துள்ள ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மிகக்குறைவாக இருப்பது, நமது பொருளாதார நிலை குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.