Published:Updated:

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவு; ஆர்பிஐ நிதிக் கொள்கைக் கூட்டம் காரணமா?

தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்
News
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக நடப்பு நிதி ஆண்டில் தொடர்ச்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுவரும் நிலையில், நாளை வட்டி விகிதம் உயர்த்தப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவு; ஆர்பிஐ நிதிக் கொள்கைக் கூட்டம் காரணமா?

பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக நடப்பு நிதி ஆண்டில் தொடர்ச்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுவரும் நிலையில், நாளை வட்டி விகிதம் உயர்த்தப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

Published:Updated:
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்
News
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த நவம்பர் மாதத்தில் புதிய உச்சங்களை எட்டின. ஆனால், டிசம்பர் மாதத் தொடக்கத் திலிருந்து பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. தொடர்ந்து மூன்று வர்த்தக தினங்களாக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால், அதற்கு காரணம் என்ன என்பது குறித்து முதலீட்டாளர்கள் குழப்பத்துக்குள்ளாகியுள்ளனர்.

பங்கு முதலீட்டாளர்கள்
பங்கு முதலீட்டாளர்கள்

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பணவீக்கம், வட்டி விகிதம் குறித்த முடிவுகள் இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் எச்சரிக்கையுடன் ஈடுபட்டுவருகின்றனர்.

சமீபத்திய இறக்கங்களுக்கு முக்கிய காரணம் சந்தையின் சமீபத்திய உச்சங்களில் கிடைத்த லாபத்தை எடுக்க முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதுதான் என்று தெரிகிறது.

சர்வதேச அளவில் இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று பெரும்பாலான பங்குச் சந்தை நிபுணர்கள் கூறிவருகிறார்கள். எனவே, சந்தை இறக்கங்களால் பதற்றப்படாமல் நல்ல பங்குகளில் இறக்கங்களின்போது முதலீடு செய்து வரலாம் என்று கூறுகிறார்கள்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

டிசம்பர் 7 நாளை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் முடிவுக்கு வரும். அப்போது பணவீக்கம், வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் வெளிவரும். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக நடப்பு நிதி ஆண்டில் தொடர்ச்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுவரும் நிலையில், நாளை வட்டி விகிதம் உயர்த்தப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.