Published:Updated:

வரப்போகும் ரூ.54,000 கோடி வாராக்கடன்!- வங்கிகள் மீள உதவுமா?

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுவிட்டு திரும்பச்செலுத்தாமல் கம்பி நீட்டுவதும், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதுமாக பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், வங்கிகளை விழிபிதுங்க வைப்பது வாடிக்கையாகி வருகிறது.

வங்கிக்கடன்
வங்கிக்கடன் ( vikatan )

பெரிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்கமுடியாமல் பெரிய அளவிலான நிதிச் சிக்கலில் மாட்டியுள்ள வங்கிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. இந்த மாதத்தில் நான்கு நிறுவனங்களின் மோசடி வழக்கில் தீர்வு எட்டப்பட்டு ரூ.54,000 கோடி பணம் கடனளித்த வங்கிகளுக்குத் திரும்பக் கிடைக்கப்போகிறது.

வங்கிக்கடன்
வங்கிக்கடன்
vikatan

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுவிட்டு திரும்பச்செலுத்தாமல் கம்பி நீட்டுவதும், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதுமாக பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், வங்கிகளை விழிபிதுங்க வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய வழக்குகளில் தீர்வு எட்டப்படுவதற்காகவே கடந்த 2016-ம் ஆண்டில் வங்கி மோசடி நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதுவரை 15% வழக்குகளில் மட்டுமே தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா லிமிடெட் (ரூ.41,500 கோடி), பிரயக்ராஜ் பவர் ஜெனரேசன் கம்பெனி (ரூ.5,400 கோடி), ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரூ.4,350 கோடி) மற்றும் ரத்தன் இந்தியா பவர் லிமிடெட் (ரூ.2,700 கோடி) ஆகிய நிறுவனங்களின் வங்கிமோசடி வழக்கில், நடப்பு டிசம்பர் மாதத்தில் மொத்தத் தொகையும் செட்டில்மென்ட் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் சுமார் ரூ.54,000 கோடி பணம் வங்கிகளுக்குத் திரும்பக் கிடைக்கும்.

கடன் தொகை மீட்பு
கடன் தொகை மீட்பு
vikatan

இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கான காரணங்களில் ஒன்றாக வங்கி வாராக்கடன் பிரச்னையும் இருப்பதால் இந்தத் தீர்வு முக்கியமானதாகிறது. வங்கிகளின் செயல்பாட்டில் உத்வேகம் ஏற்படக்கூடும். இந்தியப் பொருளாதாரமும் சற்று மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.