Published:Updated:

பயமுறுத்தும் பணவீக்கம்... விலைவாசி உயரும் அபாயம்!

பணவீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பணவீக்கம்

பொருளாதாரம்

பயமுறுத்தும் பணவீக்கம்... விலைவாசி உயரும் அபாயம்!

பொருளாதாரம்

Published:Updated:
பணவீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பணவீக்கம்

உலகம் முழுவதுமே பணவீக்க உயர்வின் அச்சம் ஆரம்பித்துவிட்டது. கொரோனா பாதிப்பால் சர்வதேச வர்த்தகம், சந்தைப் பொருளதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட சுணக்கம் விலகி மீண்டுவருவதற்குள் ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய், உலோகங் களின் விலையேற்றம் சந்தையில் நெருக்கடியை உருவாக்கியது. கொரோனா பரவலால் பொருளாதாரத்தில் உண்டான நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தன. ஆனால், இனியும் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது என்னும் அளவுக்குப் பணவீக்க உயர்வு தீவிரமடைந்து கொண்டிருக் கிறது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் உயர்ந்திருக் கிறது. மக்கள் விலைவாசி உயர்வின் பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இதையடுத்தே கடந்த நான்கு ஆண்டுகளாக வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்த அமெரிக்கா, தற்போது கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இதனால் 0.25 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதமானது, தற்போது 0.50 சதவிகிதமாக உள்ளது.

பயமுறுத்தும் பணவீக்கம்... விலைவாசி உயரும் அபாயம்!

இந்தியாவிலும் பணவீக்க உயர்வின் பாதிப்பு தெரியத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரத்தில் 137 நாள்களுக்குப் பிறகு விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் மொத்த கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டது. அதே போல, பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இதனால் வரும் நாள்களில் அனைத்து பொருள் கள், சேவைகளின் விலையும் உயரும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் அப்படியே தொடர்கிறது.

கடந்த பிப்ரவரியில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்து வதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்க வில்லை. இந்நிலையில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ரிசர்வ் வங்கி உள்ளாகும். வரும் ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.