Published:Updated:

திவாலை சமாளித்து பங்குச் சந்தையில் பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ராயல் என்ஃபீல்ட்! திருப்புமுனை - 15

ராயல் என்ஃபீல்ட் புல்லட் கிளாஸிக்

இங்கிலாந்தில் படித்துமுடித்த 26 வயதான சித்தார்த்தா லால் தொழிலுக்குள் வந்தார். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இவருக்கு பைக்குள் மீது மிகுந்த ஆர்வம். அவர் வைத்த நம்பிக்கையின் காரணமாக, ட்ரக் மற்றும் ராயல் என்பீல்டை தவிர, மற்ற அனைத்துப் பிரிவுகளும் மூடப்பட்டன.

திவாலை சமாளித்து பங்குச் சந்தையில் பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ராயல் என்ஃபீல்ட்! திருப்புமுனை - 15

இங்கிலாந்தில் படித்துமுடித்த 26 வயதான சித்தார்த்தா லால் தொழிலுக்குள் வந்தார். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இவருக்கு பைக்குள் மீது மிகுந்த ஆர்வம். அவர் வைத்த நம்பிக்கையின் காரணமாக, ட்ரக் மற்றும் ராயல் என்பீல்டை தவிர, மற்ற அனைத்துப் பிரிவுகளும் மூடப்பட்டன.

Published:Updated:
ராயல் என்ஃபீல்ட் புல்லட் கிளாஸிக்

ஒரு காலத்தில் மிட்டா மிராசுதாரர்கள் தடதடவென ஊரே அதிரும்படி ஓட்டிய வண்டிதான் ராயல் என்ஃபீல்டு. இன்றைக்கு நகர்ப்புறத்து இளைஞர்கள் தேடிவந்து வாங்கும் வண்டியாக மாறியிருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த திருப்புமுனை..?

உள்ளபடி பார்த்தால், என்ஃபீல்டின் திருப்புமுனைக் கதையானது தொழில் துறையில் இருப்பவர்களைவிட பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். காரணம், பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பங்கு இது. எவ்வளவு வருமானம் தந்தது என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். முதலில், அதன் திருப்புமுனை வரலாறு பற்றி தெரிந்துகொள்வோம்.

Royal Enfield
Royal Enfield

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

20 ஆண்டுகளுக்கு முன்...

தற்போது வீட்டுக்கு ஒரு இன்ஜினீயர் இருப்பது போல வீட்டுக்கு ஒரு புல்லட் இருக்கிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தில் இருந்தது இந்த நிறுவனம். புல்லட் வண்டி தயாரிக்கும் பிரிவை மூடிவிடலாம் என்கிற யோசனை இயக்குநர் குழுவிடம் இருந்தது. ஆனால், சித்தார்த்தா லால் வந்தார்; அந்த வண்டிக்கு புதிய வரலாற்றை எழுதினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நூற்றாண்டு பழமையான கம்பெனி!

ராயல் என்ஃபீல்டு, பிரிட்டனைச் சேர்ந்த பிராண்ட். 1890 முதல் செயல்பட்டு வந்தாலும் இந்தியாவில் 1949-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்டிஷ் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டுமுதல் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஐஷர் மோட்டார் இணைந்து செயல்பட்டது. 1994-ம் ஆண்டு ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு பிராண்டை வாங்கியது.

ஆனால், காலம் செல்லச் செல்ல இதன் விற்பனை குறையத் தொடங்கியது. தவிர, என்ஜின் உள்ளிட்ட பல பிரச்னைகள் ராயல் என்ஃபீல்டில் இருந்தது. மாதம் 6,000 வாகனங்கள் தயாரிக்க முடியும். ஆனால், 2,000 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இதனால் சுமார் ரூ.20 கோடி வரை நஷ்டம் என்னும் நிலையில் நிறுவனம் இருந்தது.

ட்ரக், புல்லட் உள்ளிட்ட 15 தொழில்களில் ஐஷர் குழுமம் செயல்பட்டது. ஆனால், எதிலும் முதல் இடத்தில் இல்லை. ‘‘தனித்தனியாக 15 பிரிவுகளில் இருப்பதைவிட முக்கியமான பிரிவுகளில் மட்டும் இருப்போம். மற்றதை விற்போம்’’ என்னும் நிலையில் ஐஷர் நிறுவனத்தின் இயக்குநர் குழு இருந்தது.

ராயல் என்ஃபீல்ட்
ராயல் என்ஃபீல்ட்

வந்தார் சித்தார்த்தா...

இங்கிலாந்தில் படித்துமுடித்த 26 வயதான சித்தார்த்தா லால் தொழிலுக்குள் வந்தார். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் இவர். இவருக்கு பைக்குள் மீது மிகுந்த ஆர்வம். அந்தப் பிரிவை வளர்க்க முடியும் என்னும் நம்பிக்கை இருந்ததால், ட்ரக் மற்றும் ராயல் என்பீல்டை தவிர, மற்ற அனைத்துப் பிரிவுகளும் மூடப்பட்டன. ட்ராக்டர், காலணி, ஆடைகள் எனப் பல பிரிவுகளில் இருந்து ஐஷர் குழுமம் வெளியேறியது. மொத்தக் கவனமும் ட்ரக் மற்றும் ராயல் என்ஃபீல்டுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.

ராயல் என்பீல்டை மீட்பதற்கு இரு ஆண்டுகள் அவகாசம் கேட்டார். இயக்குநர் குழு வழங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது?

ராயல் என்ஃபீல்டு வாகனம் பலருக்கும் பிடித்ததாக இருந்தாலும் அதனை நிர்வகிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. இஞ்சின் கோளாறு, எண்ணெய் கசிவு, எலெக்ட்ரிக்கல் பிரச்னை என பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணவேண்டியிருந்தது. காதைக் கிழிக்கும் படபட சத்தம்; தவிர, புகையும் முக்கியமான பிரச்னையாக இருந்தது.

புராடக்டை சரிசெய்யும் பணி தொடங்கியது. முதலில் வாகனத்தில் இருக்கும் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். அதே சமயத்தில், காலத்துக்கு ஏற்ற வகையிலும் வடிமைப்பை மாற்றியாக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தோற்றம் அப்படியே இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், டிஸ்க் பிரேக், பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட சில விஷயங்களை காலத்துக்கேற்ப அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய என்ஃபீல்டில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் 30% குறைக்கப்பட்டன. மேலும், அதிக மைலேஜ் கிடைக்கும்படியான வடிவமைப்பும் செய்யப்பட்டது. தொடர்ந்து புதுப்புது புராடக்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பிரத்யேக ஷோரூம்கள் வடிவமைக்கப்பட்டன.

சித்தார்த்தா லால்
சித்தார்த்தா லால்

0.2% மட்டுமே விளம்பரச் செலவு...

இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் முக்கியமான செலவு என்று பார்த்தால், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரச் செலவுதான். மற்ற இரு சக்கர வாகன நிறுவனங்கள் மொத்த விற்பனையில் 2% - 4% வரை விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்க்கு செலவு செய்கின்றன. ஆனால், ராயல் என்ஃபீல்டு 0.2% வரை மட்டுமே செலவு செய்கிறது. புதிய மார்க்கெட்டிங் யுக்திகளால் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கி வருகிறது.

மலையேறுவதற்கு ஸ்பான்ஸர் செய்வது, இரு சக்கர வாகனம் மூலம் நெடும் பயணம் மேற்கொள்வது, பல நாடுகளை இரு சக்கர வாகனம் மூலம் சுற்றுவது என பைக் மூலம் சுற்றுலா செல்வதை ஊக்குவித்து அதன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து உருவாக்கியது.

24,000 To 8 லட்சம் வாகனங்கள்!

இதுபோல, பல நடவடிக்கைகள் எடுத்ததால் வாகன விற்பனை தொடர்ந்து உயர்ந்தது. 2000-ஆம் ஆண்டு, சராசரியாக ஆண்டுக்கு 24,000 வாகனங்கள் மட்டுமே விற்பனையான சூழலில் 2010-ம் ஆண்டு 50,000 வாகனங்கள் என்னும் எல்லையைத் தொட்டது. அடுத்த ஆண்டு 75,000 வாகனங்கள், 2012-ம் ஆண்டு 1.1 லட்சம் வாகனங்கள் விற்பனையை எட்டியது. இதனைத் தொடர்ந்து வேகமான வளர்ச்சியை அடையத் தொடங்கியது. 2015-ம் ஆண்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையானது. 2018-ம் ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையானது. கோவிட்டுக்குப் பிறகு குறையத் தொடங்கிய விற்பனை தற்போது சீராகி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு

ஏற்றுமதியிலும் என்ஃபீல்ட்...

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ராயல் என்ஃபீல்டு விற்பனை சிறப்பாக இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ராயல் என்ஃபீல்டு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாமல், ஏற்றுமதியும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. வெளிநாடுகளில் 40-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஷோரூம்கள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 81,000 வாகனங்களை ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்துவருகிறது.

மல்ட்டிபேகர் பங்கு...

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாக ராயல் என்பீல்ட் இருந்தாலும், குழுமத்துக்குக் கிடைக்கும் லாபத்தில் பெருமளவுக்கு என்ஃபீல்டு மூலமாகவே கிடைக்கிறது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் மல்ட்டிபேகர் பங்கு என்னும் வார்த்தையைத் தெரிந்துவைத்திருப்பார்கள். பல மடங்குக்கு உயரும் வாய்ப்புள்ள பங்குகளை மல்ட்டிபேகர் பங்கு என்று அழைப்பார்கள். ஒரு மல்ட்டிபேகர் பங்குகளையாவது கண்டறிந்து முதலீடு வேண்டும் என்பது பல முதலீட்டாளர்களின் கனவாக இருக்கும்.

அப்படி ஒரு மல்ட்டிபேகர் பங்குதான் ஐஷர் மோட்டார்ஸ் பங்கு. 2000-ம் ஆண்டுகளில் ஒரு பங்கு 20 ரூபாய் என்னும் அளவில் வர்த்தகமாகி வந்தது. ஆனால், இந்தப் பங்கு படிப்படியாக உயர்ந்து 20,000 ரூபாய்க்கு மேலே சென்றது.

என்ஃபீல்டு இந்தியன்
என்ஃபீல்டு இந்தியன்

ராயல் சல்யூட்!

2001-ம் ஆண்டு ஒரு புல்லட் 55,000 ரூபாய். அப்போது புல்லட் வாங்காமல் ஐஷர் மோட்டார்ஸ் பங்குகளை வாங்கி இருந்தால், 20 ஆண்டுகளில் 5.5 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என டேட்டா தெரிவிக்கிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தப் பங்கில் பெரிய ஏற்றமில்லை என்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் இனி முதலீடு செய்யலாமா என்பது குறித்து ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

கிட்டத்தட்ட திவால் நிலையில் இருந்த ஒரு பிராண்டை காலத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் ராயல் என்ஃபீல்டு பிராண்டை வெற்றி பெற வைத்திருக்கிறார் சித்தார்த்தா லால். அவர் திறமைக்கு நாம் ஒரு ராயல் சல்யூட் தரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism