நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சேமிப்புக்கும் கடனுக்கும் கைகொடுக்கும் சிட் ஃபண்ட்! நிபுணர்கள் ஆலோசனை

சிட் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
சிட் ஃபண்ட்

MEETING

நாணயம் விகடன் மற்றும் டி.என்.சி சிட்ஸ் இணைந்து நடத்தும் ‘சிட் ஃபண்ட்..: லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின. இதில் முதலில் பேசிய நவநீதகிருஷ்ணன் கிருஷ்ண சாமி (சென்னை பிராந்திய தலைவர், டி.என்.சி சிட்ஸ்), சிட் ஃபண்ட் என்பது எப்படிச் சிறந்த சேமிப்பாகவும் சிறந்த கடனாகவும் பயன்படுகிறது என்பதை உதாரணத்துடன் விளக்கிப் பேசினார்.

நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணசாமி, ஏ.சிற்றரசு, ஆறுமுக நயினார்
நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணசாமி, ஏ.சிற்றரசு, ஆறுமுக நயினார்

அடுத்து பேசிய ஏ.சிற்றரசு (பொதுச் செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்), சிட் ஃபண்டில் சேருவதன்மூலம் பலரும் பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம், தங்கம் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது போன்ற பயனுள்ள செலவுகளைச் செய்கின்றனர். இந்தத் திட்டத்தில் சேர்ந்து முன்கூட்டியே பணத்தை எடுத்து தொழில் செய்வதன்மூலம் குறைந்த வட்டிச் செலவில் அதிக லாபம் பார்க்கின்றனர் பலர்’’ என்றார்.

நிறைவாகப் பேசிய ஆ.ஆறுமுக நயினார் (முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத்துறை), “சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால், அது குறித்து மாவட்ட பதிவாளருக்குப் புகார் கொடுப் பதுமூலம் தீர்வு காண முடியும்” என்றார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் வாசகர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கமான பதிலை அளித்தனர்.