Published:Updated:

மூத்த குடிமக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள் என்னென்ன? - ஓர் எளிய வழிகாட்டுதல்

மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள்

பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் (Pradhan Mantri Vaya Vandana Yojana - PMVVY) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம்.

``மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும்?

- கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்"

``பல திட்டங்கள் இருக்கின்றன. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizen Saving Scheme) தற்போதைய நிலையில் ஆண்டு வட்டி 7.4%. வட்டியானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரித்து வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 வருடங்கள். மேலும், இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் (Post Office Monthly Income) ஆண்டுக்கு வட்டி 6.6% கிடைக்கும். இதில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 வருடங்கள். மேலும், வட்டியானது மாதம்தோறும் கணக்கிடப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் (Post Office Time Deposit for 5 years) 6.7% வட்டியானது ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

முதலீடு
முதலீடு

ஆர்.பி.ஐ மாறுபடும் வட்டி பாண்டில் (RBI Floating Rating Bond) வட்டி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாறக்கூடியதாகும். இந்த முதலீட்டுத் திட்டத்தின் தற்போதைய வட்டி 7.15%. மேலும் வட்டியானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படும்போது, அந்தக் குறிப்பிட்ட அரை ஆண்டுக் காலத்தின் வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஏழு ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் (Pradhan Mantri Vaya Vandana Yojana - PMVVY) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். ஆனால், மற்ற முதலீட்டுத் திட்டங்களைப் போல இல்லாமல், உதாரணமாக இந்தத் திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்ச தொகையான ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகையானது மாதம்தோறும் ரூ.9,250 ஆக பிரித்து பென்ஷன் தொகையாக வழங்கப்படும். இதை வட்டி விகிதத்தில் கணக்கிட்டால் 7.4 சதவிகிதத்தை நீங்கள் மாதம்தோறும் பெறுவீர்கள்.

மேலே கூறப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில், உதாரணமாக உங்களிடம் உள்ள தொகையில் ரூ.15 லட்சத்தை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் திட்டத்திலும், ரூ.15 லட்சத்தை பி.எம்.வி.வி.ஒய் திட்டத்திலும், மீதமுள்ள தொகையில் 20 சதவிகிதத்தை ஈக்விட்டி தொடர்பான லார்ஜ்கேப் அல்லது இண்டெக்ஸ் ஃபண்டிலும் மீதமான பணத்தை நீங்கள் ஆர்.பி.ஐ மாறுபடும் வட்டி பாண்ட், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.''

இத்துடன்...

> மூத்த குடிமக்கள் 60 வயதுக்குப் பிறகு, ஈக்விட்டி சந்தை முதலீடுகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

> மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் வசதி இருக்கிறதா?

> விரைவில் பணி ஓய்வு பெறப்போகிறேன். என் முதலீடு எல்லாம் சேர்ந்தால் சுமார் ரூ.50 லட்சம் சேரும். மூன்றாண்டு காலத்துக்கு எனக்குப் பணம் தேவைப்படாது. அதன்பிறகு மாதம்தோறும் செலவுக்குத் தேவைப்படும் விதமாக எதில் முதலீடு செய்ய வேண்டும்?

> என்.பி.எஸ்ஸில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்து வருகிறேன். பணி ஓய்வு பெற்றபின் இந்தப் பணம் எனக்கு எப்படிக் கிடைக்கும், எனக்கு பென்ஷன் கிடைக்குமா?

> என் வயது 28. நான் 55 வயதில் பணி ஓய்வு பெற விரும்புகிறேன். இப்போது எங்கள் குடும்பச் செலவு மாதம் ரூ.30,000. நான் 55 வயதில் ஓய்வு பெறும்போது என் குடும்பச் செலவு எவ்வளவு இருக்கும்? இப்போது என்னிடம் சேமிப்பு எதுவும் இல்லை. நான் மாதம் எவ்வளவு முதலீடு செய்து வரவேண்டும்?

- மூத்த குடிமக்கள் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த வாசகர்களின் இந்தச் சந்தேகங்களுக்கு நிதி ஆலோசகர் கே.ராமலிங்கம் அளித்துள்ள பதில்களை முழுமையாக அறிய > ரூ.30,000 மாதச் செலவு... ஓய்வு பெறும்போது எவ்வளவு தேவை? - விளக்குகிறார் நிதி நிபுணர் https://bit.ly/324Ofzs

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு