நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சேமிப்பு... முதலீடு... தீபாவளி போனஸிலிருந்து ஆரம்பியுங்கள்!

போனஸ் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
போனஸ் திட்டம்

போனஸ் திட்டம்

மற்ற பண்டிகைகளை விட தீபாவளியைக் கூடுதல் ஆர்வத்துடன் பலரும் அணுகக் காரணம், அதை ஒட்டி நமக்குக் கிடைக்கும் போனஸ்தான். இந்த போனஸ் பணம் வரும்முன்பே அதை எப்படி செலவழிப்பது என்கிற கேள்வியும் எழுந்து, ஆளுக்கொரு திட்டம் வகுப்பது அனைத்துக் குடும்பத்திலும் நடக்கும் விஷயமே. தீபாவளி போன ஸாகக் கிடைக்கும் பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலி டேஷன்.காம் (Myassetsconsolidation.com) நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

சேமிக்காதவர்களின் நிலை!

‘‘போனஸ் வந்தால்தான் சில குடும்பங்களில் தீபாவளிக்குப் புதுத்துணி எடுக்க முடியும். இல்லா விட்டால், கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிற நிலையே இன்றைக்கும் சில குடும்பங் களில் பார்க்க முடிகிறது.

இந்த நிலை மாற வேண்டும் எனில், நீங்கள் இனியாவது குறிப்பிட்ட அளவு பணத் தைக் கட்டாயம் சேமிக்கத் தொடங்க வேண்டும். நன்கு சேமிப்பவர்கள் போனஸை வைத்துதான் தீபாவளியைக் கொண்டாடும் நிலையில் இருக்க மாட்டார்கள்.

தீபாவளி போனஸ் பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியான செலவு செய்ய நினைப்பதில் தவறில்லை. ஆனால், போனஸ் பணம் முழுக்கவுமே செலவு செய்ய வேண்டுமா..? அதில் கொஞ்சம் பணத்தை சேமிக் கலாமே என்பதுதான் முக்கிய மான ஆலோசனை.

போனஸ் பணத்தை மூன்று வகையில் பிரித்து செலவு + சேமிப்பு செய்யலாம். அதைப் பற்றி இனி பார்ப்போம்.

செலவு 75%, சேமிப்பு 25%...

சிலர், தீபாவளி செலவுக் காக போனஸையே பெரிதும் நம்பி இருப்பார்கள். இவர்கள் போனஸாகக் கிடைக்கும் தொகையில் 75% பணத்தை செலவு செய்யவும், மீதமுள்ள 25% பணத்தைச் சேமிக்கவும் செய்யலாம். இந்த ஆண்டு இதைச் செய்ய முடியாது என்பவர்கள் அடுத்த ஆண்டி லாவது போனஸ் பணத்தில் 25 சதவிகிதத்தைச் சேமிக்கும் படி திட்டமிடுவது அவசியம்.

செலவு 50%, சேமிப்பு 50%...

வாழ்க்கையை ஓரளவு திட்டமிட்டு நடத்துபவர்கள் போனஸாகக் கிடைக்கும் பணத்தில் 50 சதவிகிதத்தை செலவு செய்துவிட்டு, மீத முள்ள 50% பணத்தை சேமிக்கலாம்.

75% சேமிப்பு, 25% செலவு...

வாழ்க்கையை நன்கு திட்ட மிட்டு செயல்படுபவர்கள், இதை எளிதாக செய்து விடுவார்கள்.

சேமிப்பு... முதலீடு... தீபாவளி 
போனஸிலிருந்து ஆரம்பியுங்கள்!

சேமிப்பில் இருந்து முதலீடு...

தீபாவளி போனஸ் பணத்தில் இருந்து உங்கள் வசதிக்கேற்ப கொஞ்சம் பணத்தை வெறுமனே சேமித்து வைக்காமல், அதிக லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் தேவையில்லை எனில், அஞ்சலகம் மற்றும் வங்கி வைப்பு நிதி, கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யலாம். 3 வருடங்களுக்கு மேல் எனில், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

எவ்வளவு முதலீடு... எவ்வளவு வருமானம்..?

இப்படிச் செய்வதால், நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? ஒருவருக்கு ரூ.30,000 போனஸ் என வைத்துக்கொள்வோம். 30,000 ரூபாயில் 25% அதாவது, ரூ.7,500-ஐ முதலீடு செய்து நீங்கள் 10 ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், அது 12% வருமான அடிப்படையில் கணக்கிட்டால் சுமார் ரூ.23,500 உங்களுக்குக் கிடைக்கும்.

அதே 30,000 ரூபாயில் 50% அதாவது, ரூ.15,000-ஐ முதலீடு செய்து நீங்கள் 10 ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், அது 12% வருமான அடிப்படையில் கணக்கிட்டால் தோராயமாக ரூ.47,000 கிடைக்கும்.

அதே 30,000 ரூபாயில் 75% அதாவது, ரூ.22,500-ஐ முதலீடு செய்து நீங்கள் 10 ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், அது 12% வருமான அடிப்படையில் சுமார் ரூ.70,000 கிடைக்கும்.

ஒருவர் தன் 25 வயது முதல் இப்படி செய்ய ஆரம்பித்தால், அவரின் 45-வது வயதில் க ணிசமான பணத்தை ஒவ்வொரு தீபாவளியின்போதும் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. குறைந்தபட்சம் 25% என்றில்லை, உங்களால் 10%தான் முதலீடு செய்ய முடியும் எனில், அதை இந்தத் தீபாவளிக்கே செய்யத் தொடங்குங்கள்’’ என்று பேசி முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.

அட, இந்த யோசனை நல்லா இருக்கே!