Published:Updated:

ஆயுள் காப்பீடு பாலிசி... ஒருவர் எத்தனை எடுக்கலாம்..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ஆயுள் காப்பீடு பாலிசி... ஒருவர் எத்தனை எடுக்கலாம்..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

எஸ்.கோபிநாத், தேனி.

ஒருவர் எத்தனை ஆயுள் காப்பீடு பாலிசி வைத்துக்கொள்ளலாம்?

அருள் சிவம், ஆயுள் காப்பீட்டு ஆலோசகர், சேலம்.

“ஒருவரின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து எத்தனை ஆயுள் காப்பீடு பாலிசிகள் வேண்டுமென்றாலும் எடுக்கலாம். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க கூடுதல் தொகைக்கு பாலிசிகள் எடுப்பது எதிர்காலத்துக்குப் பயன் தரும். ஆனால், எப்போது பாலிசி எடுத்தாலும் ஏற்கெனவே எடுத்த பாலிசிகளின் தகவல் களைக் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிப்பது நல்லது.

உதாரணமாக, 15 வருடங்களுக்கு முன் ஒரு வயதான பெண் என்னிடம் வந்து, ‘என் மகன் இறந்துவிட்டான். அதற்குரிய இறப்பு உரிமத் தொகையை வாங்கித் தருமாறு ஏழு பாலிசி பத்திரங்களைக் கொடுத்தார். நானும் அந்தப் பத்திரங்களைத் தந்து உரிய இறப்பு உரிமங்களை வாங்கிக் கொடுத்தேன். பாலிசிதாரர் ஏற்கெனவே எடுத்திருந்த பாலிசி குறித்த தகவல்களைத் தெரிவித்திருந்ததால், இந்த இறப்பு உரிமங்கள் சுலபமாகக் கிடைத்தது.”

ஆயுள் காப்பீடு பாலிசி... ஒருவர் எத்தனை எடுக்கலாம்..?

ஆர்.பாலாஜி, யூடியூப் மூலம்.

என் எஃப்.எம்.சி.ஜி வணிகத்தில் ஓவர் டிராஃப்ட் என்பது சுமார் 22 சதவிகிதமாக இருக்கிறது. இது சரியான விகிதத்தில் உள்ளதா அல்லது குறைக்க வேண்டுமா? பொதுவாக, எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும்?

பி.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர், Corporate Clinic.

“வணிகத்தில் ‘ஓவர் டிராஃப்ட்’ இத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்கிற பொதுவான விதிமுறை (Thumb Rule) எதுவும் கிடையாது. அதே நேரத்தில், உங்கள் நிறுவனம் அல்லது வணிகத்தின் விற்றுமுதல் (Turn Over), லாப வரம்பு, வாடிக்கை நிறுவனங்களிட மிருந்து கடன் பாக்கி வரும் சுழற்சி மற்றும் எந்தத் துறையில் செயல்படுகிறீர்கள் ஆகிய வற்றின் அடிப்படையில் ஓவர் டிராஃப்ட் சதவிகிதத்தை வைத்துக்கொள்ளலாம்.

நுகர்வோர் பொருள்கள் விற்பனைத் துறையில் ஆண்டு விற்றுமுதலில் ஓவர் டிராஃப்ட் 22% சரிதான். வேறு துறை எனில், உங்களுக்கு எவ்வளவு காலத்துக்கு (ஒரு மாதம், ஆறு மாதம், ஓராண்டு) வேண்டும், எவ்வளவு தொகைக்கு வேண்டும் என்பதைப் பொறுத்து உங்களுக்குத் தேவையான விகிதத்தை உங்கள் வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வேண்டுகோளை வங்கி அனுமதிக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப ஓவர் டிராஃப்ட் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஓவர் டிராஃப்ட் கடன் என்பது நிறுவனத்தை சுமுகமாக நடத்தும் அளவுக்கு இருந்தால் போதும்.”

அருள் சிவம், பி.ராமகிருஷ்ணன், மீ.கண்ணன், ஆர்.கணேஷ்
அருள் சிவம், பி.ராமகிருஷ்ணன், மீ.கண்ணன், ஆர்.கணேஷ்

கிருஷ்ணவேணி, கூடுவாஞ்சேரி.

என் மகள் இன்னும் ஏழு ஆண்டுகளில் கல்லூரி செல்வாள். அவளின் மூன்றாண்டு கல்விச் செலவு சுமார் 5 லட்சம் ரூபாயாக இருக்கும். நான் மாதம் எவ்வளவு தொகையை எந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வர வேண்டும்?

மீ.கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com

“உங்கள் மகள் கல்லூரி செல்லும்போது பண வீக்கத்தால் தற்போது தேவையான 5 லட்சம் ரூபாய் சுமார் எட்டு லட்சமாக அதிகரித்திருக்கும். கல்லூரிப் படிப்புக்கான இந்த ரூ.8 லட்சம் ரூபாயைப் பெறுவதற்கு தாங்கள் மாதம்தோறும் சுமார் 7,500 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். அதில் 5,000 ரூபாயை மிரே அஸெட் ஹைபிரிட் (Mirae Asset Hybrid Equity) அல்லது சுந்தரம் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் (Sundaram Equity Hybrid) திட்டத்தில் முதலீடு செய்யலாம். மீதி 2,500 ரூபாயை நிஃப்டி நெக்ஸ்ட் 50 (Nifty Next 50) இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஏழு வருடம் என்பது சற்று நீண்ட காலம் என்பதால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளை அதிகம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.”

ஆர்.பாலசுப்ரமணியன், பெருங்குடி, சென்னை - 96

நான் டாடா மோட்டார்ஸ் மற்றும் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஆகிய பங்குகளில் முதலீடு செய்துள்ளேன். இவற்றின் சராசரி விலை முறையே ரூ.400 மற்றும் 195-ஆக உள்ளது. இந்தப் பங்குகளை வைத்திருக்கலாமா, விற்றுவிடலாமா?

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை நீண்ட காலமாக ரூ.265 முதல் ரூ.310 இடையே வர்த்தகமாகி வருகிறது. உங்களின் சராசரி விலையான 400 ரூபாயுடன் ஒப்பிடும் போது, பங்கின் விலை லாபத்துக்கு வர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். மோட்டார் வாகனத் துறையில் அதிக மாற்றங்கள் நடந்துவருகிறது. எனவே, சீரான பாதை உருவாக நாளாகும்.

எல் & டி ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கு ரூ.80 முதல் ரூ.110 இடையே வர்த்தகமாகி வருகிறது. உங்களின் சராசரி விலையான 195 ரூபாயை அடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்.”

அ.செல்வி, கோயம்புத்தூர்.

நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என் மாதச் சம்பளம் ரூ.50,000. என் சம்பளத்தில் ரூ.1,800 பிராவிடன்ட் ஃபண்டுக்குப் பிடிக்கிறார்கள். இந்தத் தொகையை அதிகரித்து என் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க வழி இருக்கிறதா?

ஆர்.கணேஷ், பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்).

“ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்) அல்லது வரம்புக்கு உட்பட்டு 1,800 ரூபாயைப் பிடிப்பார்கள்.

ஒருவர் அவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 88% தொகையை வி.பி.எஃப் என்கிற விருப்ப பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத் தின்கீழ் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் வி.பி.எஃப்-ஆகப் பிடிக்கச் சொல்லலாம்.

இப்படிச் செய்யும்போது உங்களின் ஓய்வுக்காலச் சேமிப்பு தானாகவே அதிகரித்துவிடும். மேலும், இப்படி வி.பி.எஃப்-ஆகப் பிடிக்கப்படும் தொகையும் பி.எஃப் கணக்கில் தான் சேரும்.

நிதி ஆண்டில் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு.

சம்பளத்தில் குறைவாக பி.எஃப் பிடிக்கப்படும் நிலையில் இப்படி வி.பி.எஃப் மூலம் சேமிப்பை அதிகரித்து ஒருவர் அவரின் ஓய்வுக்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்ள முடியும்.”