இந்திய பங்குச் சந்தை, கடந்த இரண்டு மாதங்களாகவே மிகவும் தேக்கநிலையில் இருக்கிறது. ஒருநாள் ஏறுவதும், அடுத்த இரண்டு நாட்கள் இறங்குவதுமாக இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக இழப்பை சந்தித்து வருகின்றனர். சர்வதேச மார்க்கெட் நிலவரம் மற்றும் பணவீக்கம், வட்டி அதிகரிப்பு என்று பல்வேறு காரணங்களால், இந்திய பங்குச்சந்தையில் தேக்க நிலை இருந்து வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து, 6 வர்த்தக நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்திருக்கிறது. இந்த 6 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 18.17 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொகை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிகமாகும். அந்நிய முதலிட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற்றது, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த மாதத்தில் மட்டும், 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடுகள் பங்குச்சந்தையில் திரும்ப பெறப்பட்டு இருக்கிறது. நடப்பு மாதத்தில் இதுவரை 28 ஆயிரம் கோடி வரை அந்நிய முதலீடு பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அந்நிய முதலீடு இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, 19 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. நாட்டில் 19 லட்சம் கோடியை தாண்டிய முதல் நிறுவனம் என்ற பெறுமை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. ஆனால் அதன் பிறகு பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

இதனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 17.51 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இன்று ஜூன் 20-ம் தேதி இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கிறது. மதியம் 1.50 வாக்கில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமானது.