Published:Updated:

தொடர் சரிவில் எல்ஐசி பங்கு... முதலீட்டாளர்கள் ஏமாற்றம்; அடுத்து என்ன நடக்கும்?

எல்ஐசி

ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக் இன் பீரியட் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் பங்குகளை விற்று வெளியேறினால் மேலும் இப்பங்கு சரிவடைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொடர் சரிவில் எல்ஐசி பங்கு... முதலீட்டாளர்கள் ஏமாற்றம்; அடுத்து என்ன நடக்கும்?

ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக் இன் பீரியட் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் பங்குகளை விற்று வெளியேறினால் மேலும் இப்பங்கு சரிவடைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Published:Updated:
எல்ஐசி

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள் என பலதரப்பினரும் ஆர்வமுடன் வாங்கிய எல்ஐசி பங்குகள் தொடர்ந்து சரிவில் இருந்துவருகிறது.

பட்டியல் ஆன அன்றைய தினமே பொதுப் பங்கு வெளியீட்டு விலையைவிட குறைந்து தள்ளுபடி விலையில் வர்த்தகமானது முதலீட்டாளர்கள் பலருக்கும் நஷ்டத்தை உண்டாக்கியது. ஆனாலும், காப்பீடு துறையில் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவரும் எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நீண்டகாலத்துக்கு இந்தப் பங்கு நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினார்கள். ஆனால் தொடர்ந்து பங்கின் விலை சரிந்துகொண்டே இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வாரத்திலும் சரிவில் இருந்த எல்ஐசி பங்கு இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளிலும் இறக்கத்தைக் கண்டது. எல்ஐசி பங்கு விலை அதிகபட்சமாக ரூ.949 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சந்தை மதிப்பின் அடிப்படையில் 5வது பெரிய நிறுவனமாகக் கருதப்பட்டது. ஆனால், தொடர் சரிவின் காரணமாக அந்த இடத்தையும் இழந்தது. அதன் பிறகு சற்று விலை சரிவு கட்டுக்குள் வந்தது. ஆனால், மீண்டும் கடந்த வாரம் பல்வேறு காரணங்களால் இறக்கம் காணத் தொடன்கியது.

எல்ஐசி
எல்ஐசி
LIC

நேற்றைய தினம் ( திங்கள்) பங்கின் விலை தொடர்ந்து சரிந்து ரூ.800-க்குக் கீழ் குறைந்தது. இன்று காலை வர்த்தகத்திலும் தொடர்ந்து இந்தப் பங்கின் விலை குறைந்துகொண்டே இருக்கிறது. ரூ.760-க்குக் கீழ் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தவகையில் பார்க்கும்போது எல்ஐசி பங்கு விலை அதன் வெளியீட்டு விலையிலிருந்து 20 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்து வர்த்தகமாகிவருகிறது. சந்தை மதிப்பும் ரூ.4,80,980 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக் இன் பீரியட் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் பங்குகளை விற்று வெளியேறினால் மேலும் இப்பங்கு சரிவடைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism