Published:Updated:

அள்ளித் தரும் ஐ.பி.எல்... அதிகரிக்கும் போட்டி..!

கிரிக்கெட்
பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட்

கிரிக்கெட்

அள்ளித் தரும் ஐ.பி.எல்... அதிகரிக்கும் போட்டி..!

கிரிக்கெட்

Published:Updated:
கிரிக்கெட்
பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை ஒளி பரப்புவது தொடர்பான போட்டி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக் கிறது. ஐ.பி.எல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப மூன்று நிறுவனங்களுக்கு ரூ.48,390 கோடிக்கு ஏலம் மூலம் அளித்துள்ளது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

நான்காண்டுகளுக்கு இந்த ஒளிபரப்பு உரிமை ஏலம் விடப்படும். 2018 முதல் 2022 வரையிலான ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியது. இது அதற்கு முந்தைய நான்காண்டு ஒளிபரப்பு உரிமையை வாங்க சோனி நிறுவனம் கொடுத்த மதிப்பைவிட 158% அதிகமாகும்.

அள்ளித் தரும் ஐ.பி.எல்... அதிகரிக்கும் போட்டி..!

இந்த நிலையில், 2023-2027 காலத்துக்கான ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை பி.சி.சி.ஐ அமைப்பு நான்கு பேக்கேஜ்களாக ரூ.48,390 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இதில் ரூ.23,575 கோடிக்குத் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ஸ்டார் நிறுவன மும், ரூ.20,500 கோடிக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையையும், ரூ.3,257 கோடிக்கு டிஜிட்டல் சிறப்பு ஒளிபரப்பு உரிமையையும் வயகாம் 18 நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமையை வயகாம் 18 நிறுவனமும், டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனமும் இணைந்து ரூ.1,058 கோடிக்கு வாங்கியுள்ளன.

2015-ல் ஒரு ஐ.பி.எல் போட்டியில் கிடைத்த விளம்பர வருமானம் ரூ.16.7 கோடியாக இருந் தது. இது 2022-ல் ரூ.58 கோடியாக உயர்ந்தது. 2027-ல் இது ரூ.141 கோடியாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி என்பது இன்று பெரும் பிசினஸாக மாறிவிட்டது. ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற இந்த நிறுவனங்கள் கோடி கோடியாக வருமானத்தை அள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism