Published:Updated:

2 மாதத்தில் 100%-க்கு மேல் லாபம்தந்த ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள்! #SUCCESSIPO2019

வெளியான தினத்திலிருந்து தொடர்ந்து லாபம் தரும் பங்காக இந்தப் பங்கு இருந்துவருகிறது.

SUCCESSIPO2019
SUCCESSIPO2019

ஐ.ஆர்.சி.டி.சி எனச் சுருக்கமாக அழைக்கப்படும், `இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸ்ட் கார்ப்பரேஷன்’ (IRCTC) நிறுவனம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று ஐ.பி.ஓ வெளியிட்டது. அப்போது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் விட்டவர்கள், முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் என எல்லோரும் இப்போது அதன் விலைப் போக்கைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

 ஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்?!

ஏனெனில் இன்று ஐ.ஆர்.சி.டி.சி பங்கு ஒன்றின் விலை ரூ.871.70 (டிச.9 மதியம் 12:30 மணி அளவில்) வெளியிடப்பட்ட போது பங்கு ஒன்றின் விலை ரூ.315-320 வரை. இரண்டு மாதத்திலேயே 100 சதவிகிதத்துக்கு மேல் இந்தப் பங்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது.

ஐ.ஆர்.சி.டி.சி
ஐ.ஆர்.சி.டி.சி
உதாரணத்திற்கு, பங்கு வெளியிடப்பட்ட தினத்தில் நீங்கள் ரூ.3,200 செலவு செய்து 10 பங்குகளை வாங்கியிருந்தால் இப்போது அதன் மொத்த மதிப்பு (817.70*10) ரூ.8,717 இருந்திருக்கும். மிகக் குறுகிய காலத்தில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் லாபம் ரூ.5,517.
இரண்டு மாதங்களுக்குள் இந்தப் பங்கின் அதிகபட்ச ஏற்ற விலை ரூ.932.90 எனப் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சம் இறக்க விலை ரூ.700.65 ஆகும்.

வெளியான தினத்திலிருந்து தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வரும் பங்காக இது இருந்துவருகிறது. இந்தப் பங்கின் விலைப் போக்கை பார்த்து, டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் அடுத்த ஓராண்டில் பங்கு ஒன்றின் விலை ரூ.2,000 வரை போகும் எனக் கணித்திருக்கிறார்கள்.

லாபம் தரும் பங்கு
லாபம் தரும் பங்கு

 ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதையும் தாண்டி, அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்கின் மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். 

ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9

மேலும், இந்த நிறுவனத்தின் வருமான வளர்ச்சி விகிதத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த நிறுவனம் லாபகரமான பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. மேலும், இந்தப் பங்கு வெளியீட்டு விலையானது கவர்ச்சிகரமானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பிரிவில் மட்டுமல்லாமல், நான்கு பிரிவுகள் என இதன் வணிகம் இருப்பதால், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.